உலக அளவிலான பொருளாதாரச் சூழல், பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி அமலாக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மந்தமாக உள்ளது. இதனை சீர்படுத்தும் விதமாக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் முக்கியமானது, வங்கிகளை இணைக்கும் நடவடிக்கை. 2017-ம் ஆண்டில் இந்தியாவிலுள்ள பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை 27-ஆக இருந்தது. பொதுத்துறை வங்கி இணைப்புகள் நடக்கத் தொடங்கியபின் தற்போது இந்த எண்ணிக்கை 12-ஆகக் குறைந்துள்ளது.

பொதுத்துறை வங்கிகள் ஒன்றோடு ஒன்று இணைக்கப்படும் நிலையில், தாங்கள் வாங்கிய பங்குகள் என்னவாகும், இதனால் தங்களுக்கு லாபம் கிடைக்குமா, கிடைக்காதா எனப் பல கேள்விகளை வங்கிப் பங்குகளை வாங்கிய முதலீட்டாளர்கள் கேட்டுவருகிறார்கள். வங்கிப் பங்குகளை வாங்கிய முதலீட்டாளர் கள் என்ன செய்ய வேண்டும் என ஐ.டி.பி.ஐ கேப்பிட்டல் நிறுவனத்தின் ஈக்விட்டி ரிசர்ச் பிரிவு தலைவர் ஏ.கே.பிரபாகரிடம் கேட்டோம். விரிவான பதிலைத் தந்தார் அவர்.

“கடந்த ஆண்டு விஜயா பேங்க், தேனா பேங்க் மற்றும் பேங்க் ஆஃப் பரோடா ஆகிய வங்கிகள் ஒன்றாக இணைக்கப்பட்டன. இந்த இணைப்பு இந்த ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வந்தது. அதற்கும் முன்னதாக, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவுடன் அதன் ஐந்து துணை வங்கிகள் மற்றும் பாரதிய மகிளா பேங்க் ஆகியவை இணைக்கப்பட்டன. இந்த இணைப்புக்குப்பின், ரூ.52.05 லட்சம் கோடி மூலதனத்துடன், 22.5% சந்தை மதிப்புடன் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மிகப் பெரிய வங்கியாக உள்ளது. இந்த வங்கிகளின் இணைப்பு, தற்போதுதான் பலன் கொடுக்கத் தொடங்கியுள்ளது.

பொதுவாக, வங்கிகளின் இணைப்பினால் எதிர்பார்க்கக்கூடிய பலன் கிடைப்பதற்குக் குறைந்தபட்சம் மூன்றாண்டு காலம் ஆகக் கூடும். ஏனெனில், வங்கிகள் இணைப்பால் இரண்டு அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட வங்கிகளின் பணியாளர்கள், அதிகாரிகள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவது முதல்கட்டம். அவர்களுக்கு இடைப்பட்ட கலாசார அடையாளத்தை இழக்காமல் இணைவது மிகவும் முக்கியம். அதன்பின், வளர்ச்சிக்கான திட்டங்கள் தீட்டப்பட்டு அவை முறையாகச் செயல்படுத்தப்படும் போதுதான் வங்கிகளின் வருமானம் அதிகரிக்கத் தொடங்கும். இதற்குக் குறைந்தது மூன்றாண்டு காலமாவது தேவைப்படும்.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் முன்னாள் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா வங்கிகள் இணைப்பு குறித்து, ‘‘ வங்கிகளை ஒன்றோடொன்று இணைப்பது சாத்தியம்; ஆனால், அவற்றுக்கு இடையே இணக்கமான கெமிஸ்ட்ரி உருவாவது கடினமான விஷயமே’’ என்று குறிப்பிட்டுள்ளார். எனவே, வங்கிகளை இணைப்பது மட்டுமல்லாது, அவற்றின் வளர்ச்சியைத் துரிதப்படுத்து வதற்காக நிதியுதவி அளிக்கவும் மத்திய அரசு முன்வந்துள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, இந்தியன் வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, யூகோ பேங்க், யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் பஞ்சாப் & சிந்த் பேங்க் ஆகியவற்றின் வளர்ச்சிக்காக நடப்பு காலாண்டில் மத்திய அரசு ரூ.55,250 கோடி அளவுக்கு நிதியுதவி அளிக்கவுள்ளது.

சமீபத்தில் இணைக்கப்பட்டுள்ள பத்து வங்கிகள், அவற்றின் மூலதன அளவு மற்றும் இணைப்பினால் ஏற்படவுள்ள மாற்றங்கள் குறித்து இனி காண்போம்” என்ற பிரபாகர், தொடர்ந்து அதுபற்றிப் பேசினார்.

பஞ்சாப் நேஷனல் வங்கி + ஓரியன்டல் பேங்க் + யுனைடெட் பேங்க்

“பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் ஓரியன்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ், யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய இரண்டு வங்கிகள் இணைக்கப்படுகின்றன. இந்த இணைப்பின் மூலம் மொத்தம் ரூ.17,94,526 கோடி மூலதனத்துடன் இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய வங்கியாக உருவெடுக்கவுள்ளது. இந்த மூன்று வங்கிகளும் ஒரே சி.பி.எஸ் மென்பொருளால் (ஃபினக்கிள்) இயங்குகின்றன.

வங்கி சார்ந்த பங்குகளில் முதலீடு செய்து உள்ளவர்கள் சற்று பொறுமை காக்க வேண்டும். முதலீட்டாளர்களைப் பொறுத்தவரை, ஏற்கெனவே இணைப்புக்குள்ளான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவும் பேங்க் ஆஃப் பரோடாவும் நல்ல தேர்வாக இருக்கும்.

ஏற்கெனவே இரண்டுமுறை நடைபெற்ற வங்கிகள் இணைப்புக்கும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வங்கிகள் இணைப்புக்குமான முக்கியமான வித்தியாசம், மென்பொருள் பயன்பாடு ஆகும். தற்போது இணைக்கப்படும் வங்கிகளுக்கிடையே மென்பொருள் பயன்பாடு ஒன்றாக இருக்கும்படி வகைப்படுத்தியிருக்கிறார்கள். ஒரே மென்பொருள் பயன்பாட்டின் காரணமாக வங்கிகளின் இணைப்பு சற்று கூடுதல் வேகத்துடன், அதாவது இரண்டு ஆண்டுகளுக்குள் நிறைவேற வாய்ப்புள்ளது. மேலும், ஒரே மென்பொருள் பயன்பாடுள்ள வங்கிகள் ஒருங்கிணைவதால், அவற்றின் பணியாளர்களுக்கு மென்பொருளைப் பயன்படுத்துவதில் குழப்பம் ஏற்படாது.

வங்கிகளை இணைப்பதன் விளைவாக, பணியாளர்களைக் குறைக்கப்போவதில்லை என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி அளித்துள்ளார். அப்படிப் பார்க்கையில், ஒருங்கிணைந்த பஞ்சாப் நேஷனல் வங்கியின் பணியாளர்கள் எண்ணிக்கை 1,00,649-ஆக உயர்கிறது. வங்கிக் கிளைகளின் எண்ணிக்கை 11,437-ஆக உயர்கிறது.

கனரா பேங்க் + சிண்டிகேட் பேங்க்

கனரா வங்கியுடன் சிண்டிகேட் வங்கி இணைக்கப்படுகிறது. இந்த இணைப்பின் மூலம் ரூ.15.20 லட்சம் கோடி மூலதனத்துடன் நாட்டின் நான்காவது பெரிய வங்கி யாக கனரா வங்கி உருவெடுக்க உள்ளது.

வங்கிக் கிளைகளின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, மொத்தம் 10,342 கிளைகளுடன் நாட்டின் மூன்றாவது பெரிய வங்கி யாக உருவெடுக்கும். இணைக்கப்படும் இந்த இரு வங்கிகளுமே ஐஃப்ளக்ஸ் என்ற சி.பி.எஸ் பிளாட்ஃபார்மில் இயங்கக்கூடியவை. வங்கிகள் ஒருங்கிணைப்புக்குப் பின், பணியாளர்கள் எண்ணிக்கை 89,885-ஆக உயரும்.

இந்த இரண்டு வங்கிகளைப் பொறுத்தவரை, இரண்டுமே கர்நாடகாவைத் தலைமையிடமாகக் கொண்டவை. எனவே, இணைப்பு மற்றும் கலாசார ரீதியான அணுகுமுறை எளிதாக இருக்கும் என்றாலும், இந்த இணைப்பால் இந்திய அளவில் பெரிய விரிவாக்கச்சூழல் இல்லை. எனவே, இந்த இணைப்பால் வங்கியின் வளர்ச்சியில் பெரிய அளவிலான பலன் கிடைக்க வாய்ப்பில்லை.

யூனியன் பேங்க் + ஆந்திரா பேங்க் + கார்ப்பரேஷன் பேங்க்

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவுடன் ஆந்திரா வங்கியும் கார்ப்பரேஷன் வங்கியும் இணைக்கப்படு கின்றன. இந்த இணைப்புக்குப்பின், ரூ.14.59 லட்சம் கோடி மூலதனத்துடன் இந்தியாவின் ஐந்தாவது மிகப் பெரிய வங்கியாக உருவெடுக்கக் கூடும். வங்கிக்கிளைகளின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, 9,609 கிளைகளுடன் நாட்டின் நான்காவது பெரிய நெட்வொர்க்காக இருக்கும்.

இந்த வங்கிகள் அனைத்தும் ஃபினக்கிள் என்ற ஒரே சி.பி.எஸ் மென்பொருளால் இயங்குகின்றன. எனவே, வெகுவிரைவாக இந்த இணைப்பை நிறைவேற்ற முடியும். இணைப்புக்குப்பின் பணியாளர்களின் எண்ணிக்கை 75,384-ஆக இருக்கும். இந்த வங்கிகள் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்தவையாக இருப்பதால், இந்த இணைப்பின்மூலம் கூடுதல் பலன் கிடைக்க வாய்ப்புள்ளது.

இந்தியன் பேங்க் + அலகாபாத் பேங்க்

இந்தியன் வங்கியுடன் அலகாபாத் வங்கி இணைக்கப்படுகிறது. இந்த இணைப்பின் மூலம் ரூ.8.08 லட்சம் கோடி மூலதனத்துடன் இந்தியாவின் ஏழாவது வங்கியாக உருவெடுக்கும். ஒருங்கிணைந்த வங்கிக்கு இந்தியாவின் தெற்கு, வடக்கு, கிழக்கு மாநிலங்களில் மொத்தம் 6,145 கிளைகள் இருக்கின்றன. இந்த இரண்டு வங்கிகளும் ஒரே மென்பொருளில் (BaNCS) இயங்குகின்றன. இந்த இணைப்பிற்குப்பின் பணியாளர்கள் எண்ணிக்கை 43,481 என அதிகரிக்கும்.

இந்த வங்கிகளும் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்தவையாக உள்ளன. இந்தியன் வங்கி தென் இந்தியாவிலும், அலகாபாத் வங்கி வடகிழக்கிலும் உள்ளது. எனவே, இவற்றின் இணைப்பினால் நல்ல பலன் கிடைக்க வாய்ப்புள்ளது.

இணைக்கப்படாத வங்கிகள்

பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய வங்கிகள் இந்த இணைப்புகளில் பங்கெடுக்காதபோதும் முறையே ரூ.9.03 லட்சம் கோடி மற்றும் ரூ.4.68 லட்சம் கோடி மூலதனத்துடன் வலுவாக இருக்கின்றன. மேலும், சில பொதுத்துறை வங்கிகள், இந்தியாவின் குறிப்பிட்ட பகுதிகளில் வலுவாக இருக்கின்றன.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தென் இந்தியாவிலும் யூகோ பேங்க் கிழக்கு இந்தியாவிலும் பேங்க் ஆஃப் மகாராஷ்ட்ரா மேற்கு இந்தியா மற்றும் பஞ்சாபிலும் சிந்த் பேங்க் வட இந்தியாவிலும் தனிக் கவனம் செலுத்துகின்றன. இந்த நான்கு வங்கிகளின் மொத்த மூலதனம் ரூ.11 லட்சம் கோடியாக உள்ளது.

இந்த வங்கிகள் இந்தியாவின் வெவ்வேறு மண்டலங்களின் வளர்ச்சிக்கு மிகுந்த பயன் அளிக்கக்கூடும் என்று நிதி அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். எனவே, அவற்றின் மேம்பாட்டின்மீது மத்திய அரசு கூடுதல் அக்கறை செலுத்துமெனக் கருதலாம்.

மூலதன மதிப்பின்படி...

வங்கிகளின் மூலதன மதிப்பீட்டில், எஸ்.பி.ஐ-க்கு அடுத்தபடியாக, ஒருங்கிணைந்த பஞ்சாப் நேஷனல் வங்கி + ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் + யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியாவின் மதிப்பு 7.7 சதவிகிதமாகவும், ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் மதிப்பு 7.6 சதவிகிதமாகவும், பேங்க் ஆஃப் பரோடாவின் மதிப்பு 7.0 சதவிகிதமாகவும், கனரா வங்கி + சிண்டிகேட் வங்கிகளின் ஒருங்கிணைந்த மதிப்பு 6.6 சதவிகிதமாகவும், யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா + ஆந்திரா வங்கி + கார்ப்பரேஷன் வங்கிகளின் ஒருங்கிணைந்த மதிப்பு 6.3 சதவிகிதமாகவும், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் மதிப்பு 5.5 சதவிகிதமாகவும் உள்ளன.

பங்கு முதலீடு

வங்கி சார்ந்த பங்குகளில் முதலீடு செய்து உள்ளவர்கள் சற்று பொறுமை காக்க வேண்டும். முதலீட்டாளர்களைப் பொறுத்த வரை, ஏற்கெனவே இணைப்புக்குள்ளான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவும் பேங்க் ஆஃப் பரோடாவும் நல்ல தேர்வாக இருக்கும். மூன்றாண்டு காலம் முதலீட்டை எடுக்காமல் வைத்திருக்க விரும்புபவர்கள், தற்போது இணைக்கப்படவுள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியை முதலீட்டுக்கான தேர்வாகக் கொள்ளலாம். ஏனெனில் வங்கிக் கிளைகளை ஒப்பிடும்போது, 11,437 கிளைகளுடன் பெரிய அளவில் செயல்படவுள்ளது.

அடுத்த தேர்வாக, கனரா வங்கியை வைத்துக்கொள்ளலாம். இவற்றில் முதலீடு செய்வது பெரிய விஷயமில்லை. ஆனால், பொறுமையாக மூன்றாண்டு காலத்துக்குக் காத்திருக்க வேண்டும். உடனடியாக முதலீடு செய்யவேண்டுமென விரும்புபவர்கள், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் பேங்க் ஆஃப் பரோடாவைத் தேர்வு செய்யலாம். இந்த வங்கியின் இணைப்பு முடிந்து தற்போதுதான் பலன் கொடுக்கத் தொடங்கியுள்ளது.

எஸ்.பி.ஐ வங்கி மட்டுமே 21% அளவுக்கு, அதாவது சுமார் ரூ.4 லட்சம் கோடி அளவுக்கு வீட்டுக்கடன் வழங்கியுள்ளது. வீட்டுக் கடனைப் பொறுத்தவரை, ஹெச்.டி.எஃப்.சி-க்கு அடுத்ததாக, இந்த வங்கி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. எல்.ஐ.சி, இந்தியாபுல்ஸ் மற்றும் டி.ஹெச்.எஃப்.எல் ஆகிய நிறுவனங்களின் மொத்த வீட்டுக்கடன் அளவே ரூ.4 லட்சம் கோடிக்கும் குறைவு. எனவே, எஸ்.பி.ஐ-யில் நம்பிக்கையுடன் முதலீடு செய்யலாம்.

ஆனால், இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகளுக்குப் பொறுமை காப்பது அவசியம். ஏனெனில், வங்கிப் பங்குகள் பெரிய அளவிலான இறக்கத்தை ஏற்கெனவே சந்தித்து உள்ளன. அடுத்த சில ஆண்டுகளில் பெரிய இறக்கம் இருக்காது என்றாலும், பெரிய வருமானத்தை எதிர்பார்க்க முடியாது’’ என்றார்.

வங்கிப் பங்குகளை வாங்கி வைத்திருக்கிற, இனி வாங்கப்போகிற முதலீட்டாளர்கள் இந்த விஷயங்களை யெல்லாம் கவனித்து முடிவை எடுக்கலாமே!

பொதுத்துறை Vs தனியார் வங்கி

பொதுத்துறை வங்கி, தனியார் வங்கி இரண்டுக்குமான செயல்பாடுகள் வேறுபடுவதற்கு முக்கியக் காரணம், நிர்வாகத் திறமை. தனியார் வங்கிகளைப் பொறுத்தவரை, அவற்றின் தலைமைப் பொறுப்பிலிருப்பவர்கள் பல ஆண்டுகளாகத் தொடர்கிறார்கள். அதனால் அவர்களால் வங்கி வளர்ச்சிக்கு நீண்டகால நோக்கில் திட்டமிட்டுச் செயல்பட முடிகிறது. அதனால், தனியார் வங்கிகளின் வளர்ச்சி நல்ல முறையில் உள்ளது. (இவர்களில் சாந்தா கோச்சார் மட்டும் விதிவிலக்கு).

பொதுத்துறை வங்கிகளில் தலைமைப் பொறுப்புக்கு வருபவர்களின் பதவிக்காலம் மூன்றாண்டுகளாக இருப்பதால், அவர்களால் எந்தவொரு செயல்திட்டத்தையும் தொடர்ச்சியாகச் செயல்படுத்த முடியவில்லை. எனவே, பொதுத்துறை வங்கித் தலைவர்களின் பதவிக் காலத்தைக் குறைந்தபட்சம் ஐந்தாண்டு காலத்துக்காவது நீட்டிப்பது வங்கியின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும்.