Published:Updated:

நெல்லை: சொந்தச் சித்தப்பாவைக் கைது செய்த எஸ்.ஐ... மருத்துவமனையிலிருந்து தப்பிய சிறைக்கைதி!

சிறைக்கைதி பாறைக்குட்டம் முருகன்
சிறைக்கைதி பாறைக்குட்டம் முருகன்

குற்றம் செய்தது யாராக இருந்தாலும் சட்டத்துக்கு முன் சமம் என்பதை நிரூபிக்கும் வகையில் எஸ்.ஐ ஒருவர் தன் சொந்தச் சித்தப்பாவைக் கைது செய்தார். ஆனால், மருத்துவ சிகிச்சையின்போது அவர் தப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்யுள்ளது.

கடந்த 2010-ம் ஆண்டு சாத்தான்குளம் அருகேயுள்ள தட்டார்மடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலைச் சம்பவத்தில், மணியாச்சி பாறைக்குட்டத்தைச் சேர்ந்த முருகன் என்ற இசக்கிதுரை முக்கியக் குற்றவாளியாகத் தேடப்பட்டுவந்தார்.

சென்னை: `போலீஸ் வருது; ஓடிடு  மருமகனே' - விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஆட்டோ டிரைவர் தற்கொலை!

தன்னுடைய 35 வயதில் கொலை செய்துவிட்டு ஊரைவிட்டு வெளியேறிய பாறைக்குட்டம் முருகன், கடந்த 10 வருடங்களாக போலீஸ் பிடியில் சிக்காமல் தலைமறைவாக இருந்துவந்தார். பாறைக்குட்டம் முருகனின் உறவினரான இசக்கிராஜா என்பவர் காவல்துறையில் உதவி ஆய்வாளராக இருக்கிறார்.

நெல்லை: சாப்பாட்டுக்கே கஷ்டம்; முதல்வரைச் சந்திக்க வந்த முதியவர்! போலீஸ் தடுத்ததால் ஏமாற்றம்

எஸ்.ஐ-யான இசக்கிராஜா கோவில்பட்டி காவல்நிலையத்தில் வேலை செய்து வந்தபோது கடந்த ஜூலை 29-ம் தேதி பாறைக்குட்டம் முருகன், விருதுநகர் மாவட்டம், நத்தம்பட்டியிலுள்ள உறவினர் வீட்டுக்கு வந்தது தெரியவந்தது.

உதவி ஆய்வாளர் இசக்கிராஜா
உதவி ஆய்வாளர் இசக்கிராஜா
`மனசுல என்ன சிங்கம் பட சூர்யான்னு நினைப்பா?!' - மிரட்டிய ரவுடி; பதிலடி கொடுத்த எஸ்.ஐ

அதனால் அவரை எஸ்.ஐ இசக்கிராஜா தலைமையில் சென்ற போலீஸார் கைது செய்தார்கள். கொலைக் குற்றவாளியான பாறைக்குட்டம் முருகன், உதவி ஆய்வாளர் இசக்கிராஜாவின் சித்தப்பா. தன் நெருங்கிய உறவினராக இருந்தபோதிலும் குற்றம் செய்திருந்ததால், இசக்கிராஜா கைது செய்தார். அதுவும் 10 வருடங்களாகத் தலைமறைவாக இருந்தவரைத் தேடிக் கண்டுபிடித்து கைது செய்து சிறையில் அடைத்தார்.

பாளையங்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சிறைக்கைதி பாறைக்குட்டம் முருகனுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அதனால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். அவருக்குச் சிறைக்காவலர்கள் காவலிருந்தார்கள்.

பாளையங்கோட்டை சிறைச்சாலை
பாளையங்கோட்டை சிறைச்சாலை

இந்த நிலையில் சிறைக்கைதி முருகன் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இது தொடர்பான புகாரின் பேரில் நெல்லை மாநகர போலீஸார் தனிப்படை அமைத்து பாறைக்குட்டம் முருகனைத் தேடிவருகின்றனர். சிறைக்கைதி தப்பிய விவகாரம் தொடர்பாக பணியிலிருந்த காவலர்களிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு