நிதித்துறையில் 18 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும், சுந்தரம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் ஆராய்ச்சிப் பிரிவின் தலைவரும், ஈக்விட்டி பிரிவின் சீனியர் ஃபண்ட் மேனேஜருமான எஸ்.பரத், நாணயம் விகடனுக்கு அளித்த சிறப்புப் பேட்டி இங்கே...

சென்செக்ஸ், நிஃப்டி குறியீடுகள் புதிய உச்சத்தைத் தொட்டிருக்கின்றனவே..!

“மிகப்பெரிய நிறுவனப் பங்குகளின் விலை மட்டுமே கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிகரித்து வந்திருப்பதால், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் புதிய உச்சம் தொட்டிருக்கின்றன. அதே நேரத்தில், மிட் மற்றும் ஸ்மால்கேப் பங்குகள் மற்றும் ஃபண்டுகள் இறக்கத்துக்குப் பிறகு 2017-ம் ஆண்டில் பெற்ற உச்சத்தை மீண்டும் தொடவில்லை. தற்போது வாராக்கடன், நிதி நெருக்கடி போன்ற பிரச்னைகள் ஓரளவுக்குத் தீர்ந்திருப்பதால், 2020-ம் ஆண்டில் வங்கி மற்றும் நிதிச் சேவை நிறுவனங்களின் செயல்பாடு மேம்படும் என எதிர்பார்க்கலாம்.

தற்போது வாகன விற்பனையில் மந்தநிலை காணப்படுகிறது. வாகனங்களுக்கான `பி.எஸ் VI’ (BS-VI) புதிய விதிமுறையால் புதிய மாடல் கார்கள் சந்தையில் அறிமுகமாகவில்லை. ஆனால், வங்கிசாரா நிதி நிறுவனப் பிரச்னை முடிவுக்கு வந்திருப்பதால், இனி வாகனக் கடன் வழங்குவது அதிகரிக்கும். இதையடுத்து நிதிச் சேவை நிறுவனங்களின் செயல்பாடு, 2020-ம் ஆண்டு மேம்படும். கடந்த ஐந்தாண்டுகளாக தொழில்துறையில் தனியார் முதலீடு இல்லை. பெரு நிறுவனங்களுக்கான வருமான வரி குறைக்கப்பட்டிருப்பது பாசிட்டிவ் விஷயம். இதனால், மிச்சமாகும் தொகை தொழில் முதலீடுகளாக மாறும் என எதிர்பார்க்கலாம். அடுத்த மூன்று ஆண்டுகளில் சிமென்ட், ஸ்டீல் போன்றவற்றின் தேவை அதிகரிக்கும்.

“முதலீட்டுக்குத் தேர்வு செய்யும் நிறுவனத்துக்கு அதிக கடன் இருக்கக் கூடாது. அப்படியிருந்தால், ரிஸ்க் அதிகரிக்கும்.”

ஏற்றுமதி சார்ந்த ஐ.டி., பார்மா போன்றவை கடந்த 2018-ல் ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளின் வளர்ச்சிக் குறைவால் பாதிப்படைந்தது. இது 2019-ம் ஆண்டில் சற்று சீராகி இருக்கிறது. 2020-ம் ஆண்டு இன்னும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரிசர்வ் வங்கியின் வட்டிக் குறைப்பால் ஏற்படும் பலன்கள் இனிதான் முழுமையாகத் தெரியும். இவற்றையெல்லாம் உள்ளடக்கியதாக இந்தியப் பங்குச் சந்தையின் செயல்பாடு இருக்கிறது. ஒட்டுமொத்தப் பொருளாதாரம் மேம்படும்போது பங்குச் சந்தையும் சிறப்பாகச் செயல்படத் தொடங்கும். அப்போது மிட் மற்றும் ஸ்மால்கேப் பங்குகளும், ஃபண்டுகளும் லாபத்துக்கு வரும்.”

ஃபண்ட் போர்ட்ஃபோலியோவுக்கான பங்குகளை எப்படித் தேர்வு செய்கிறீர்கள்?

“முதலீட்டுக்கான நிறுவனப் பங்குகளை ஐந்து முக்கிய அம்சங்களின் அடிப்படையில் தேர்வு செய்கிறோம். நிறுவனத்தின் தொழில் எளிமையாக அனைவருக்கும் புரிய வேண்டும்; குறைந்தது, அடுத்த பத்தாண்டுகளுக்கு வளர்ச்சிக்கான வாய்ப்பு இருக்க வேண்டும்; போட்டி நிறுவனங்களைவிட தனித்துவமான திறமை / தகுதி இருக்க வேண்டும்; வலிமையான, தொய்வில்லாத பணவரத்து இருக்க வேண்டும்; வலிமை வாய்ந்த நிறுவனர் இருக்க வேண்டும் போன்றவை அந்த அம்சங்கள்.”

செல்வத்தை அழிக்கும் நிறுவனப் பங்குகளை எப்படித் தவிர்க்கிறீர்கள்?

``முதலீட்டுக்குத் தேர்வு செய்யும் நிறுவனத்துக்கு அதிக கடன் இருக்கக் கூடாது. அதிகமான கடன் இருந்தால், நிறுவனத்தின் மீதான ரிஸ்க் அதிகரிக்கும். இது போன்ற நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்ய மாட்டோம். தெரியாத தொழில்களில் முதலீடு செய்யும் நிறுவனங் களைத் தவிர்த்துவிடுவோம். மேலும், காலத்துக் கேற்ற தொழில் மாற்றங்களை ஏற்றுக்கொள்ளாத, மாற விரும்பாத நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்வதைத் தவிர்ப்போம். அதிக அரசுக் கட்டுப்பாடுகளைப் பின்பற்ற வேண்டிய நிறுவனப் பங்குகளைத் தவிர்ப்போம்.’’

அடுத்த ஐந்தாண்டுகாலத்தில் வளர்ச்சிக்கு வாய்ப்புள்ள துறைகள் என எவற்றைக் குறிப்பிடுவீர்கள்?

“தனியார் வங்கிகள் மற்றும் நிதிச் சேவை நிறுவனங்கள், டி,வி., ஃபிரிட்ஜ் போன்ற வீட்டு உபயோகப் பொருள்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள், சிமென்ட் மற்றும் கட்டுமானப் பொருள்கள் உற்பத்தி நிறுவனங்கள்.’’

உங்களின் வேல்யூ ஃபண்டுகளில் பல சீரிஸ்கள் உள்ளன. ஏன்?

“இவை, குளோஸ்டு எண்டடு ஃபண்டுகள். இவற்றின் குறைந்தபட்ச முதிர்வுக் காலம் மூன்று ஆண்டுகள். இந்த வேல்யூ ஃபண்டுகள் என்பவை கருத்தின் அடிப்படையில் அமைந்திருக்கின்றன. இந்த ஃபண்டுகளில் திரட்டப்படும் நிதியை நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யும்போது படிப்படியாக முதலீடு செய்வோம். அதேபோல், அந்தப் பங்குகளை முதிர்வுக் காலத்துக்கு முன்னர் படிப்படியாக வெளியேற்றுவோம். இந்த நடவடிக்கை மூலம் முதலீட்டாளர்களுக்கு அதிக வருமானம் தர முயல்கிறோம்.’’

சிறு முதலீட்டாளர்களுக்கு உங்களின் ஆலோசனை..?

“குறைந்தபட்சம் ஐந்தாண்டுகளுக்கு முதலீடு செய்யுங்கள். எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யுங்கள். ஒவ்வொரு ஃபண்டுக்கும் ரிஸ்க்கை அறிந்து முதலீடு செய்யுங்கள்.’’