பிரீமியம் ஸ்டோரி

பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றிருக்கிறார் சர்வதேசப் பொருளாதார நிபுணரும் ஐ.எஃப்.எம்.ஆர் கிராஜுவேட் ஸ்கூல் ஆஃப் பிசினஸின் தலைவருமான டாக்டர் அனந்த நாகேஸ்வரன்.

பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன்!

மதுரையில் பிறந்த அனந்த நாகேஸ்வரன், அமெரிக்கன் கல்லூரியில் பி.காம் படித்தார். பிறகு, அகமதாபாத்திலுள்ள இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்டில் எம்.பி.ஏ படித்தார். சர்வதேச நாணயங்களின் மதிப்பு குறித்து அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் ஆய்வுசெய்து, டாக்டர் பட்டம் பெற்றார். சுவிட்சர்லாந்திலிருக்கும் யூனியன் பேங்க் ஆஃப் சுவிட்சர்லாந்தில் பணியாற்றிய பிறகு, சிங்கப்பூரில் கிரெடிட் சூஸ் நிறுவனத்திலும், ஜூலியஸ் பேயர் பேங்கிலும் பணியாற்றினார்.

பொருளாதாரம் குறித்து உலகப் பார்வை கொண்ட அனந்த நாகேஸ்வரன், சர்வதேசப் பொருளாதாரம் குறித்தும் இந்தியப் பொருளாதாரம் குறித்தும் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நாணயம் விகடனில் எழுதி வருகிறார். ‘பொருளாதாரச் செயல்பாடுகளை சந்தையே நிர்ணயிக்க வேண்டும்’ என்ற கொள்கையை உடைய அனந்த நாகேஸ்வரன், நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான பல யோசனைகளைச் சொல்லி, நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்ல நிச்சயம் உதவுவார்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு