Published:Updated:

சிகிச்சை பலனின்றி தங்கை மரணம்; உயிருக்குப் போராடும் அக்கா!- வேலூரை அச்சுறுத்தும் டெங்கு

வேலூர் மாவட்டத்தில், டெங்கு காய்ச்சலுக்கு மேலும் ஒரு சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அரசு மருத்துவமனை
அரசு மருத்துவமனை

வேலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தீவிரமாகப் பரவிவருகிறது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருகிறார்கள். 

டெங்கு
டெங்கு

காய்ச்சலைக் கட்டுப்படுத்த வேண்டிய அதிகாரிகளோ வீடு, நிறுவனங்கள் தோறும் கொசுப் புழுக்களைக் கண்டறிந்து, அபராதம் வசூலிப்பதில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்துவதாக பொதுமக்கள் கொந்தளிக்கிறார்கள். 

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பள்ளிகொண்டா வெட்டுவாணம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த 4 வயதுச் சிறுமி நட்சத்திரா கடந்த 15-ம் தேதி பரிதாபமாக உயிரிழந்தாள். 

திவ்யா
திவ்யா

இந்த நிலையில், குடியாத்தம் அடுத்த மேல்ரங்கசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த அறிவரசன் என்பவரின் இளைய மகள் திவ்யாவும் (12) காய்ச்சலுக்குப் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

திவ்யாவுக்கும், அவரது அக்காள் புவியரசிக்கும் (13) கடந்த 5 நாள்களாகக் காய்ச்சல் அதிகமாக இருந்துள்ளது. குடியாத்தம் அரசு மருத்துவமனையில் இருவரும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றும் காய்ச்சல் குறையவில்லை.

அரசு மருத்துவமனை
அரசு மருத்துவமனை

பின்னர், வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். இருப்பினும், சிகிச்சை பலனளிக்காமல் நேற்றிரவு திவ்யா உயிரிழந்தாள். அக்காள் புவியரசி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதால் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்துவருகிறார்கள்.