Published:Updated:

Foxconn தொழிற்சாலையில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாகப் புகார்; ஆப்பிள் நிறுவனம் நடவடிக்கை!

ஃபாக்ஸ்கான்
News
ஃபாக்ஸ்கான்

இந்த விஷயத்தை அறிந்த ஆப்பிள் நிறுவனம் ஃபாக்ஸ்கானின் ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலையை ஆய்வு செய்ய ஒரு குழுவை அனுப்பியிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது.

இந்தியாவில் ஆப்பிள் ஐபோன்களுக்கான உதிரிபாகங்களை உற்பத்தி செய்துவரும் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலையில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாகப் புகார் எழுந்ததையடுத்து, அந்நிறுவனத் தொழிலாளர்கள் போராட்டத்தில் இறங்கினர். இந்த விவகாரத்தையடுத்து ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் அந்தத் தொழிற்சாலையை கண்காணிப்பு பட்டியலின் கீழ் கொண்டு வந்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறது ஆப்பிள்.

ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலை
ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலை

ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலையில் மட்டும் 17,000 தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். பணியாளர்களுக்கான தங்குமிடமும், அங்கு வழங்கப்படும் உணவும் தரமில்லாமல் இருந்திருக்கிறது. தரமில்லாத உணவுகளை உட்கொண்டதால் இந்த மாதம் மட்டும் 250 பெண் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், 159 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறார்கள் எனவும் தொழிலாளர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்த விஷயத்தை அறிந்த ஆப்பிள் நிறுவனம் ஃபாக்ஸ்கானின் ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலையை ஆய்வு செய்ய ஒரு குழுவை அனுப்பியிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது. மேலும், தொழிலாளர்களுக்கான தரமான உணவு மற்றும் தங்குமிடத்தை உறுதிசெய்ய வேண்டியது ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் பொறுப்பு தான் எனவும் ஆப்பிள் நிறுவனத் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள்
ஆப்பிள்

தொழிலாளர்கள் போராட்டம் நடைபெற்று வருவதால் கடந்த டிச. 18 முதல் தொழிற்சாலை இயங்கவில்லை. மீண்டும் எப்போது இயங்கும் எனவும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. தரமற்ற உணவு மற்றும் தங்குமிடம் வழங்கப்பட்டதற்கு மன்னிப்பு கோரியிருக்கும் ஃபாக்ஸ்கான், மீண்டும் தொழிற்சாலையை இயக்கத்தைத் தொடங்குவதற்கு முன்பு தொழிலாளர்களுக்கு வேண்டிய வசதிகள் சரியாகவும் தரமாகவும் செய்துதரப்படும் என உறுதியளித்திருக்கிறது. தொழிற்சாலை இயங்காமல் இருக்கும் காலத்திலும் தொழிலாளர்களுக்கான ஊதியம் வழங்கப்படும் எனவும் தெரிவித்திருக்கிறது ஃபாக்ஸ்கான் நிறுவனம். மேலும், ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலை நிர்வாகத்தை முழுவதுமாக மாற்றவும் திட்டமிட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது ஃபாக்ஸ்கான்.