Published:Updated:

நாகை: முதல்வருக்கு `அரியர் பசங்க’ கொடுத்த சர்ப்ரைஸ்

அரியர் பசங்க நாங்க
அரியர் பசங்க நாங்க

மாணவர்கள் அனைவரும் கையில் பதாகைகளை ஏந்தியபடி நின்றுகொண்டிருந்தனர். அந்தப் பதாகைகளில் `எடப்பாடியார்’ என்றும், `அரியர் பசங்க நாங்க, எங்க ஓட்டு இரட்டை இலைக்கே’ என்றும் எழுதப்பட்டிருந்தது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது இரண்டாம்கட்ட பிரசாரத்தைத் தொடங்கியுள்ளார். இன்று காலை திருத்துறைப்பூண்டியில் பிரசாரத்தைத் தொடங்கிய அவர் வேதாரண்யம், நாகை, பூம்புகார், மயிலாடுதுறை, சீர்காழி, காட்டுமன்னார் கோவில், சிதம்பரம் தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டுவருகிறார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

இந்தநிலையில், இன்று மதியம் நாகையின் முக்கிய வீதிகளில் மக்களைச் சந்தித்த முதல்வர், நாகை அவுரி திடலில் அதிமுக வேட்பாளர் தங்க.கதிரவனை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது, அந்தத் திடலுக்கு எதிரே இருந்த கட்டடத்தின் மாடியிலிருந்து ஆரவாரத்துடன் சத்தம் எழுந்தது. அந்த திசை நோக்கி முதல்வர் எடப்பாடி பழனிசாமி திரும்பிப் பார்க்க. அங்கு கூடியிருந்த மாணவர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு சர்ப்ரைஸ் ஒன்றைக் கொடுத்தனர்.

பதாகைகளுடன் மாணவர்கள்
பதாகைகளுடன் மாணவர்கள்

மாணவர்கள் அனைவரும் கைகளில் பதாகைகளை ஏந்தியபடி நின்றுகொண்டிருந்தனர். அந்தப் பதாகைகளில் `எடப்பாடியார்’ என்றும், `அரியர் பசங்க நாங்க, எங்க ஓட்டு இரட்டை இலைக்கே’ என்றும் எழுதப்பட்டிருந்தது. மாணவர்களின் இந்தச் செயல் சமூக வலைதளங்களில் வைரலானது.

பிரசாரம் செய்தபடியே இதை கவனித்த முதல்வர் அவர்களை நோக்கிக் கையசைத்துவிட்டு புன்சிரிப்புடன் அங்கிருந்து கிளம்பினார்.

அடுத்த கட்டுரைக்கு