Published:Updated:

2K kids: கலை, கைவினைப் பொருள்கள் கிராமம்... இது புதுச்சேரி ஹைலைட்!

கலை, கைவினைப் பொருள்கள் கிராமம்
பிரீமியம் ஸ்டோரி
News
கலை, கைவினைப் பொருள்கள் கிராமம்

மஞ்சுநாத்.ப

புதுச்சேரியில் உள்ள கலை மற்றும் கைவினைப் பொருள்கள் கிராமம் (Art and Craft Village), கலைப் பொருள்களின் கூடம். புதுச்சேரி அரசின் சுற்றுலா துறை, உள்ளூர் கைவினைக் கலைஞர்களின் நல்வாழ்வுக்காக ஆறு வருடங்களுக்கு முன் உருவாக்கிய கிராமம் இது. புதுச் சேரியின் பிரெஞ்சு வண்ணத்தை தானும் அள்ளிப் பூசிக்கொண்டிருக்கும், முருங்கப் பாக்கத்தில் உள்ள இந்த கிராமத்தில், தங்கள் விரல்களை மூலதனமாக்கி பரபர வென வேலையில் மூழ்கியிருந்த சில கைவினைக் கலைஞர்களிடம் பேசினோம்.

 லஷ்மி
லஷ்மி

சின்னச் சின்ன அடிகள்..!

‘`நான் எட்டாம் வகுப்புப் படிக்கும் போது எங்க அப்பா இறந்துட்டார்’’ என்று சொல்லும் இளம் கைவினைக் கலைஞர் ஜெசிந்தா, இன்று ஒரு வெற்றிகரமான தொழில்முனைவோர். ‘`அம்மா, நான், தங்கைனு வீட்டுல மூணு பேர். பள்ளிப் படிப்பை முடிச்சிட்டு, சென்னையில மீடியா படிப்பை முடிச்சேன். பிரின்டிங் ஆடைகள் உருவாக்கத்தை கத்துக்கிட்டு, மத்திய அரசு கைவினைக் கலைஞர்களுக்கு வழங்கும் அடையாள அட்டையை (Artisan ID Card) பெற்றேன். புதுச்சேரியில் உள்ள இந்தக் கலை மற்றும் கைவினை கிராமத்தில் ஸ்டால் போட்டிருக்கும் சிவபெருமாள், இங்க எனக்கும் ஒரு ஸ்டால் ஓப்பன் பண்றதுக்கான வழிமுறைகளைச் சொன்னார். என்னோட ஸ்டாலை இங்க ஆரம்பிச்சு நாலு வருஷமாச்சு. கடையில், வேலைப்பாடு ஆடைகளை

150 ரூபாய்ல இருந்து விற்கிறேன். மேலும் இயற்கையான பொருள்களைக் கொண்டு உருவாக்கின வண்ணப் பைகளை 10 ரூபா‌ய்ல இருந்து விற்கிறேன். கொரோனா காலத்துல இன்ஸ்டாகிராமுக்கு விற்பனையை மாற்றி னேன். சமாளிச்சுட்டேன். புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் உள்ள பல அரசுப் பள்ளி களுக்குச் சென்று மாணவர்களுக்கு பழைய சட்டைகள்ல இயற்கை வண்ணங்கள் மூலம் கைப்பைகள் செய்யும் வகுப்புகளையும் எடுத்துட்டு இருக்கேன். முன்னேற்றத்தை நோக்கி சின்னச் சின்ன அடிகளா வெச்சிட்டு இருக்குற ஒரு நிறைவு இருக்கு!”

2K kids: கலை, கைவினைப் பொருள்கள் கிராமம்... இது புதுச்சேரி ஹைலைட்!
 ஜெசிந்தா,  சிவபெருமாள்
ஜெசிந்தா, சிவபெருமாள்

உழைப்பே... உடன்பிறப்பே!

‘`ஊர்ல எல்லாரும் என்னை அம்முனு தான் கூப்பிடுவாங்க’’ என்று கொஞ்சம் வெட்கம் கலந்த புன்னகையுடன் ஆரம்பிக் கிறார் லஷ்மி... ‘`ஆரோவில் வந்த பிரெஞ்சுக் காரர்கள் சிலர், எங்க குடும்பத்துக்கு தறி ஊஞ்சல் செய்முறையை சொல்லிக் கொடுத் தாங்களாம். அவங்க போனதுக்கு அப்புறம் எங்க குடும்பத்துக்கு அதுவே தொழில் ஆகிடுச்சு. நான் கிட்டத்தட்ட 17 வருஷமா தறி நூல்ல செய்ற ஊஞ்சல் மற்றும் துணிகள் விற்கிறேன். இப்போ இந்த கிராமத்துல ஸ்டால் போட்டிருக்கேன். முன்னெல்லாம் வெளிமாநிலங்கள், கல்லூரி மாணவர்கள்னு நிறைய பேர் இங்க வருவாங்க. ஆனா, கொரோனாவால வியாபாரமெல்லாம் படுத்துருச்சு. இருந்தாலும் நான் துவண்டு போகல. ஆன்லைன்ல விற்பனையைத் தொடங்கியிருக்கேன். கடும் சூழல்லயும் தன்னம்பிக்கையை விட்டுக்கூடாதுனு சொல்ற, வாழ்ந்து காட்டுற என் அண்ணன் தக்ஷிணாமூர்த்தி தான், இந்தக் கஷ்ட காலத்தை நான் கடந்து வர முன்னுதாரணமா இருந்தார்!”

2K kids: கலை, கைவினைப் பொருள்கள் கிராமம்... இது புதுச்சேரி ஹைலைட்!

தவறாம இங்க வரணும்!

ஜெசிந்தா நம்மிடம் குறிப்பிட்ட சிவபெருமாளிடம் பேசினோம்... ‘`போட்டோ ஃப்ரேம் முதல் நகைப்பெட்டி வரை காகிதம் மற்றும் ஃபேப்ரிக் துணியைக் கொண்டு செய்ற கைவினைப் பொருள் களை என் கடையில் விற்கிறேன். ஆரம்ப விலை 10 ரூபாய். இங்க இப்போ மொத்தம்

17 கடைகள் இருக்கு. டெரகோட்டா பொருள்கள், மரப்பொருள்கள், செராமிக் பொருள்கள், காகிதப் பொருள்கள், கண்ணாடிப் பொருள்கள், ஆடைகள், ஓவியங்கள்னு உள்ளூரைச் சேர்ந்த பல கைவினைக் கலைஞர்கள் இங்க கடை போட்டிருக்காங்க. புதுச்சேரிக்கு வரும் மக்களும் சுற்றுலா பயணிகளும் தவறாமல் பார்க்க வேண்டிய இடம் இது’’ என்றார்.