Published:Updated:

தீவிரமடைந்த அசானி புயல்; சென்னை, ஆந்திராவில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

அசானி புயல்

அசானி தீவிர புயல் காரணமாக ஹைதராபாத், ஜெய்ப்பூர், மும்பை உள்ளிட்ட இடங்களிலிருந்து சென்னைக்கு வரும் 10-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.

தீவிரமடைந்த அசானி புயல்; சென்னை, ஆந்திராவில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

அசானி தீவிர புயல் காரணமாக ஹைதராபாத், ஜெய்ப்பூர், மும்பை உள்ளிட்ட இடங்களிலிருந்து சென்னைக்கு வரும் 10-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.

Published:Updated:
அசானி புயல்

அசானி தீவிர புயலாக வலுப்பெற்று மத்திய மேற்கு வங்கக்கடலில், காக்கிநாடாவின் தென்கிழக்குப் பகுதியில் 270 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டிருக்கிறது. கடந்த ஆறு மணி நேரத்தில் மணிக்கு 10 கிலோ மீட்டர் வேகத்தில் அசானி நகர்ந்து வருகிறது. இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவு ஆந்திர கடற்கரைக்கு மிக அருகில் வந்து வடகிழக்கு திசையில் நகர்ந்து செல்லக்கூடும் எனக் கூறப்படுகிறது. மீனவர்கள் 10,11 ஆகிய தேதிகளில் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர்.

சென்னை மழை
சென்னை மழை

அதேபோல 11,12 ஆகிய தேதிகளில் வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கும் மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என மீனவர்களை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்திருக்கிறது. அதிகபட்சமாக, கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தங்ககரை மற்றும் திருப்பத்தூர் மாவட்டம் வடபுதுப்பட்டு ஆகிய இடங்களில் தலா 5 செ.மி மழைப் பதிவாகியிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அடுத்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரை, ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் சில பகுதிகளில் அவ்வப்போது லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கிறது. இன்று சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்தது. மேலும், நகரின் சில பகுதிகளில் சூறைக் காற்றுடன் கனமழை பெய்தது.

சென்னை மழை
சென்னை மழை

இந்த சூழலில், சென்னைக்கு வரும் பல்வேறு விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக விமானநிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்திருக்கின்றனர். அசானி தீவிர புயல் காரணமாக ஹைதராபாத், ஜெய்ப்பூர், மும்பை உள்ளிட்ட இடங்களிலிருந்து சென்னைக்கு வரும் 10-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. அதேபோல ஆந்திராவிலும், 20-க்கும் அதிகமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism