Published:Updated:

பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்திற்கு காரணமான "மேகமூட்டமான வானிலை"; CFIT என்றால் என்ன?

பிபின் ராவத்
News
பிபின் ராவத்

இந்த விசாரணையின் முடிவுகள் குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் புதன்கிழமை தெரிவித்தனர்.

இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் 13 பேர் சென்ற ஹெலிகாப்டர் சென்ற ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி விபத்திற்குள்ளானது. விபத்து நிகழ்ந்து ஒரு மாதம் நிறைவுபெறும் நிலையில் தற்போது விபத்தின் பிரதானமான காரணமாக 'மேகமூட்டமான வானிலை' என்கிறது ஆதாரங்கள். ஜெனரல் ராவத்தின் ஹெலிகாப்டர் விபத்து குறித்து விசாரிக்க முப்படை அதாவது விமானப்படை, ராணுவம் மற்றும் கடற்படை அதிகாரிகள் கொண்ட குழு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆல் நியமிக்கப்பட்டது.

இந்த விசாரணையின் முடிவுகள் குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் புதன்கிழமை தெரிவித்தனர். அதில் ஹெலிகாப்டரின் விபத்துக்கு பிரதான காரணமாக மேகமூட்டமான வானிலையால் விமானி ஹெலிகாப்டரின் கட்டுப்பாட்டை இழந்து நிலப்பரப்பில் மோதியதாக கூறப்படுகிறது.இதை ஆங்கிலத்தில் "கண்ட்ரோல் பிளைட் இண்டு டெர்ரேன்(CFIT)" என்ற கோட்பாடு கொன்டு கூறுகிறார்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்த CFIT கோட்பாட்டின்படி ஹெலிகாப்டரில் எந்தவித தொழில்நுட்பக் கோளாறோ இயந்திரக் கோளாறோ கிடையாது. மேலும் இந்த CFIT என்னும் முறையில்தான் பல ஹெலிகாப்டர் விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன. இந்த விபத்திற்கு இன்னும் அதிகாரபூர்வமாக அறிக்கைகள் வெளியிடப்படவில்லை என்றாலும் முதற்கட்ட விசாரணையில் ஹெலிகாப்டர் திடீரென்று மேகமூட்டமான வானிலையை எதிர்கொண்டதால் விமானிக்கு சரியான பார்வை கிடைக்காததால் கட்டுப்பாட்டை இழந்து வெல்லிங்டன் அருகே உள்ள மலைப்பகுதியில் மோதியதாக கூறப்படுகிறது.

விபத்து
விபத்து

மேலும் வெல்லிங்டன் என்னும் மலைப்பகுதி பெரும்பாலும் மேகமூட்டத்துடன் காணப்படும் என்கிறார்கள். ஆகவே, MI 17 V5 ஹெலிகாப்டர் விபத்து பெரும்பாலான ஹெலிகாப்டர் விபத்துகள் போலவே லேன்டிங் செய்ய உயரம் இறக்கும்போது மோசமான வானிலையால் விமானி கட்டுப்பாடு இழந்து நிலப்பரப்பில் மோதியதாக கூறுகிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சூலூர் விமானப்படை விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் விசாரணைக் குழுவிடம் விமானியிடமிருந்து எந்த எமர்ஜென்சி அழைப்பும் வரவில்லை என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. வெல்லிங்டன் ஹெலிபேடில் இறங்குவதற்கு ஏழு நிமிடங்களுக்கு முன் அவர்கள் MI 17 V5 உடனான தொடர்பை இழந்தனர் என்று கூறுகிறது அறிக்கைகள். முப்படை விசாரணை குழுவின் தலைவர் மற்றும் இந்திய விமானப் படையின் மூத்த ஹெலிகாப்டர் பைலட் மார்ஷல் மன்வேந்திரா சிங், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு அளித்த 30 நிமிட விளக்கக்காட்சியில் விபத்தின் பின்னணியை இவ்வாறு விளக்கினார் எனக் கூறுகிறது ஊடக அறிக்கைகள் மற்றும் வட்டாரங்கள்.