Published:Updated:

புதுச்சேரி: தொல்காப்பியர் சிலை திறப்பு விழாவில் இரு நூல்கள் வெளியீடு!

புதுச்சேரி தொல்காப்பியர் சிலை திறப்பு விழா
News
புதுச்சேரி தொல்காப்பியர் சிலை திறப்பு விழா

இதில் கலை பண்பாட்டு துறை அமைச்சர் சந்திர பிரியங்கா, பொதுப்பணித்துறை அமைச்சர் லக்ஷ்மிநாராயணன், சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் நடத்தும் தொல்காப்பியர் சிலை திறப்பு விழா நிகழ்வும், புதுச்சேரி வரலாற்று ஆய்வு நூல்கள் வெளியிடும் நிகழ்வும் நேற்று நடைபெற்றது. விழாவில் புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி அவர்கள் கலந்துகொண்டு தொல்காப்பியர் சிலையை திறந்து வைத்தார். இதில் கலை பண்பாட்டு துறை அமைச்சர் சந்திர பிரியங்கா, பொதுப்பணித்துறை அமைச்சர் லக்ஷ்மிநாராயணன், சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

புதுச்சேரி தொல்காப்பியர் சிலை திறப்பு விழா
புதுச்சேரி தொல்காப்பியர் சிலை திறப்பு விழா

இவ்விழாவில் பாகூர் புலவர் குப்புசாமி அவர்கள் எழுதிய வரலாற்று ஆய்வுகள் எனும் நூலும், டாக்டர் எஸ் சாந்தினி பீ அவர்கள் எழுதிய `Urban center of Pondicherry' என்ற நூலும், முனைவர் சிவ. இளங்கோ அவர்கள் எழுதிய `ஆற்றங்கரை நாகரிகங்களில் தமிழ் பண்பாடு' எனும் நூலும், முனைவர் ப.சரவணன் அவர்கள் எழுதிய சங்க காலம் முதல் இன்று வரை வெண்பாவும் பாடு பொருட்களும் எனும் நூலும், முனைவர் ரா.சம்பத் மற்றும் முனைவர் விவேகானந்ததாசன் அவர்கள் எழுதிய பிரெஞசு இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்று ஆவணங்கள் எனும் நூலும் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அவர்களால் வெளியிடப்பட்டது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz