Published:Updated:

நீலகிரி:``தீப்பிடித்து ஒருவர் எரிந்து விழுந்தார்" - விபத்தை நேரில் பார்த்தவர் அதிர்ச்சித் தகவல்

நீலகிரி கிருஷ்ணசாமி
News
நீலகிரி கிருஷ்ணசாமி

ஒரு தகடு வந்து இங்கிருந்த மரத்தின்மீது விழுந்து எரிந்தது. தீயில் பற்றி ஒருவர் எரிந்து விழுந்தார்

விபத்து நடந்த பகுதியில் விபத்தை நேரில் பார்த்தவர் சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவர் நமது நிருபரிடம் பேசியபோது, ``பிற்பகல் 12 மணிக்கு டமார் என்ற சத்தம் கேட்டது. மரம்தான் ஒடிந்து விழுகிறதென திரும்பிப் பார்த்தேன். நெருப்பு பயங்கரமாக எரிந்தது. ஒரு தகடு வந்து இங்கிருந்த மரத்தின்மீது விழுந்து எரிந்தது. தீயில் பற்றி ஒருவர் எரிந்து விழுந்தார்.

அருகிலிருந்த பையன் போலீஸாருக்கு போன் செய்தார். சம்பவம் நடந்த 10 நிமிடத்தில் போலீஸாரும் வந்தனர். அந்த சமயத்தில் கடுமையான மேகமூட்டம் இருந்தது. நெருப்பு எரிந்ததால்தான் எங்களுக்கு விபத்து நடந்ததே தெரிந்தது." என்றார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz