Published:Updated:

72 வயதில் அந்தரத்தில் பறக்கும் பாரு அம்மா; வைரல் வீடியோவின் பின்னணி இதுதான்!

பாரு அம்மா
News
பாரு அம்மா

இதுபோன்ற விளையாட்டில் 72 வயதான பாரு அம்மா பங்கெடுத்திருக்கிறார். அந்த வீடியோதான் தற்போது வைரலாகி வருகிறது.

சமூக வலைதளங்களில் அடிக்கடி பல காட்சிகள் வைரலாவதுண்டு. சமீபத்தில் கேரளாவிவ் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. ரோப்களின் மூலம் தக்க பாதுகாப்புடன் அந்தரத்தில் பறப்பதுபோன்ற பல சாகச விளையாட்டுகள்தான் தற்போது பலரும் விரும்பக்கூடிய ஒன்று. இளம் வயதினர் பலரையும் கவர்ந்திருக்கும் இதுபோன்ற விளையாட்டில் 72 வயதான ஒருவர் பங்கெடுத்திருக்கிறார். அந்த வீடியோதான் தற்போது வைரலாகி வருகிறது.

பாரு அம்மா
பாரு அம்மா

கேரளாவைச் சேர்ந்த 72 வயதான பாரு அம்மா ஜிப் லயன் சாகசத்தை செய்துள்ளார். பாலக்காடு பகுதியில் அமைந்துள்ள ஒரு பூங்காவில் வின்ச் என்றழைக்கப்படும் ரோப் சாகசம் அமைந்துள்ளது. பாரு அம்மாவுக்கு ரோப் கயறில் சாகசம் செய்ய வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. சேலையில் பாதுகாப்பு பட்டையங்கள் அணிந்து பயமின்றி அவர் பயணித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கனவுகளை நிறைவேற்ற வயது தடை இல்லை என்பதைப் பாரு அம்மா உணர்த்தி இருக்கிறார். இந்த வீடியோ 'யாத்திரா பிரேமிகள் ' என்னும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. ' இதை நான் மிக விரும்பி செய்தேன். பயப்படவில்லை... ' என்று பாரு அம்மா தெரிவித்துள்ளார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz