Published:Updated:

"மனமிருந்தால் ஏழ்மையிலும் சேவை செய்யலாம்!" - டவுன் பஸ்ஸில் சென்று சேவை செய்யும் ரஞ்சித்குமார்

மனநலம் பாதித்தவர் மீட்பு

சொந்தமாக ஒரு பைக்கோ, வீடோ கூட என்னிடம் இல்லை. இருப்பினும் என்னால் முடிந்த சேவையை தொடர்ச்சியாக செய்து கொண்டிருக்கிறேன். மாவட்டம் முழுவதும் டவுன் பஸ்ஸில் பயணித்தே தேவையான இடங்களுக்குச் செல்கிறேன்.

"மனமிருந்தால் ஏழ்மையிலும் சேவை செய்யலாம்!" - டவுன் பஸ்ஸில் சென்று சேவை செய்யும் ரஞ்சித்குமார்

சொந்தமாக ஒரு பைக்கோ, வீடோ கூட என்னிடம் இல்லை. இருப்பினும் என்னால் முடிந்த சேவையை தொடர்ச்சியாக செய்து கொண்டிருக்கிறேன். மாவட்டம் முழுவதும் டவுன் பஸ்ஸில் பயணித்தே தேவையான இடங்களுக்குச் செல்கிறேன்.

Published:Updated:
மனநலம் பாதித்தவர் மீட்பு
உலக ரத்த தான தினத்தையொட்டி ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், இருதய பாதிப்பு கொண்ட குழந்தைகளுக்கான ரத்தத் தேவை குறித்தும் ரத்த தானம் அளிப்பதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி 3 மாதங்களுக்கு ஒரு முறை ரத்த தானம் அளித்து வருகிறார் தேனியைச் சேர்ந்த மருந்தாளுநர் ரஞ்சித்குமார்.

கோவை மாவட்டம் வால்பாறையைச் சேர்ந்த இவரின் மனைவி தெய்வமலர் தேனி மாவட்டம் ஆண்டிபட்டியைச் சேர்ந்தவர். கடந்த 2014-இல் ஆண்டிபட்டி அருகே எம்.சுப்புலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்காலிக மருந்தாளுநராக பணிக்கு சேர்ந்து ஆண்டிபட்டியிலேயே வசித்து வருகிறார். இவருக்கு ஒரு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.

மீட்புப் பணியில் ரஞ்சித்குமார்
மீட்புப் பணியில் ரஞ்சித்குமார்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ரத்த தானம் மட்டுமல்லாது பல்வேறு பொதுச்சேவைகளில் ஈடுபட்டு வரும் ரஞ்சித்குமாருக்கு அண்மையில் சர்வதேச பல்கலைகழகம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியிருக்கிறது. அவரைச் சந்தித்துப் பேசினோம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

"வால்பாறையில் தேயிலை தோட்டத்தில் பெற்றோர் வேலை பார்த்து வருகின்றனர். குடும்ப வறுமை காரணமாக சிறுவயதிலேயே பெரம்பலூரில் உள்ள உண்டு, உறைவிட இல்லத்தில் தங்கி படித்தேன். அப்போதிருந்தே சேவை செய்யும் எனக்கு ஏற்பட்டுவிட்டது. சேவை செய்வதற்கு பணமோ, பொருளோ தேவையில்லை. சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலே போதும்.

ரஞ்சித்குமார்
ரஞ்சித்குமார்

டிப்ளமோ பார்மஸி முடித்துவிட்டு 2014-இல் தற்காலிக மருந்தாளுநராக பணியில் சேர்ந்தேன். எனக்கு கிடைக்கும் ஊதியம் குடும்பத்தை நடத்துவற்கே போதுமானதாக இல்லை. சொந்தமாக ஒரு பைக்கோ, வீடோ கூட என்னிடம் இல்லை. இருப்பினும் என்னால் முடிந்த சேவையைத் தொடர்ச்சியாக செய்து கொண்டிருக்கிறேன். மாவட்டம் முழுவதும் டவுன் பஸ்ஸில் பயணித்தே தேவையான இடங்களுக்குச் செல்கிறேன்.

குழந்தைகளுடன்
குழந்தைகளுடன்

தற்போது வரை 40 முறை ரத்த தானம் வழங்கியுள்ளேன். ரத்தப் புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்காகவும், இருதய பாதிப்பு கொண்ட குழந்தைகளுக்காகவும் ரத்த தானம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். என்னுடைய முயற்சியினால் தேனி அரசு மருத்துவமனையில் உள்ள ரத்தப் புற்றுநோய் பாதிப்பில் உள்ள குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளது. அவர்களுக்கு 21 நாள்களுக்கு ஒரு முறை ரத்தம் மாற்ற வேண்டும். இல்லையென்றால் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டுவிடும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மருத்துவத்துறை வளாகங்கள், கல்வி நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் பல்வேறு அமைப்பினருடன் இணைந்து 8 ஆயிரம் மரக்கன்றுகளை நடவு செய்துள்ளேன். ஆண்டிபட்டி வட்டாரங்களில் உள்ள மரங்களில் அடிக்கப்பட்டிருக்கும் ஆணிகளை அகற்றி மரங்களைப் பாதுகாத்து வருகிறேன்.

தேனி மாவட்டத்தில் போடி, குரங்கணி, கடமலைக்குண்டு, பேச்சிப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பழங்குடியின மாணவர்கள் கல்விக்கு உதவி செய்து வருகிறேன். கொரோனா காலங்களில் அவர்களின் உணவுத் தேவைக்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தேன்.
மனநலம் பாதித்தவர் மீட்பு
மனநலம் பாதித்தவர் மீட்பு

சாலையோரங்களில் சுற்றித்திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு போலீஸாருக்கு தகவல் கொடுத்து மருத்துமனையில் அனுமதித்து வருகிறேன். இதுவரை 50 பேரை மருத்துவமனையில் அனுமதித்து அவர்களில் குணமடைந்த உறையூர், ஆண்டிபட்டி, உத்தமபாளையத்தைச் சேர்ந்தவர்களை அவரவர் வீடுகளுக்குக் கொண்டுபோய் சேர்த்துள்ளேன். இதேபோல சாலையோரங்களில் இறந்துகிடக்கும் நாய்களால் நோய் பரவல் ஏற்படால் இருக்க, அழுகிய நிலையில் கிடந்தாலும் கூட யாருடைய உதவியும் இன்றி அதை அகற்றி உரிய முறையில் அடக்கமும் செய்து வருகிறேன்.

கொரோனா காலங்களில் ஆதரவற்ற 5 பேரின் சடலங்களுக்கு இறுதிச் சடங்கு நடத்தி அடக்கம் செய்தேன். மேலும் என் மனைவியின் உதவியுடன் ஒராண்டு முழுவதும் ஆதரவற்றவர்கள் 150 பேருக்கு உணவு வழங்கினேன். பார்வை குறைபாடு உடையவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கான இலவச சிகிச்சை ஏற்பாடு செய்து கொடுக்கிறேன். அதன்மூலம் தற்போது 118 பேர் பயனடைந்துள்ளனர். அதில் 9 பார்வை குறைபாடு கொண்ட குழந்தைகளின் படிப்புக்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்துள்ளேன்.

குழந்தைகளுடன் ரஞ்சித்குமார்
குழந்தைகளுடன் ரஞ்சித்குமார்
எனது பணி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இருக்கும். அதன்பிறகு மீதமுள்ள நேரத்தை சேவைக்காக ஒதுக்கிக் கொள்கிறேன். என் மனைவியும் சேவை செய்வதில் விருப்பம் கொண்டவராக இருப்பதால், அவரும் என்னுடன் சேர்ந்து பயணிக்கிறார். குறிப்பாக மலைவாழ் மக்களுக்கான சேவையில் அவர் இணைந்து கொள்வார். மலைவாழ் மக்களின் ஓட்டுரிமை குறித்த விழிப்புணர்வில் கூட பங்கேற்றார்.
ஆய்வு
ஆய்வு

கஜா புயல் பாதிப்பு, கேரளாவில் ஏற்பட்ட பெருவெள்ளப் பாதிப்பில் நேரடியாக சென்று கேரள மக்களுக்கு உதவினேன். அதேபோல கொரோனா காலத்தில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்குவது, தூய்மைப் பணியாளர்களுக்கு முகக்கவசம், கையுறை வழங்கியதை கேரள முதல்வர் பினராயி விஜயன் ட்விட்டரில் குறிப்பிட்டு வாழ்த்தியிருந்தார்.

விழிப்புணர்வு பணியில்
விழிப்புணர்வு பணியில்

ஏழை எளிய மக்களின் பிறப்பு, இறப்புச் சான்று, விதவை உதவித் தொகை, முதியோர் உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகையை உரியவர்களுக்குப் பெற்றுத் தருகிறேன் என்றார்.

கலெக்டரிடம் பாராட்டு
கலெக்டரிடம் பாராட்டு
மனமிருந்தால் மார்க்கம் உண்டு என்பார்கள். சேவை செய்வதற்கு மனமிருந்தால் மட்டும் போதும் என்பதை நிரூபித்துள்ளார் ரஞ்சித்குமார்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism