திருவாரூர் மாவட்டம், மருதப்பட்டினம் பகுதியில் பஞ்சர் கடை வைத்துள்ளார் கண்ணன். இவரின் மகள் தேவசங்கரி . படிக்க ஆசையிருந்தும் வசதியின்மையும், நோய்மை காரணமாகவும் அவரது படிப்பு தடைப்பட்டிருந்தது. அவர் உடல்நிலையை சரிசெய்ய குடும்பமே தாங்கள் நடத்தும் பஞ்சர் கடையில் வேலை செய்கின்றனர். இந்த குடும்பத்தின் நிலை குறித்தும், தேவசங்கரியின் குடும்பம் குறித்தும் நமது விகடன் இணையதளத்தில் டிசம்பர் 31 அன்று செய்தி வெளியிட்டிருந்தோம். அந்த செய்தியைப் படிக்க க்ளிக் செய்யவும். "குடும்பமா சேர்ந்து நாங்க பஞ்சர் ஒட்டுறது எம் புள்ளைய காப்பாத்ததான்"- அஞ்சுகம் பஞ்சர் கடையின் கதை! அதைப் படித்த நடிகர் சிவகார்த்திகேயன், தன் நண்பர் மூலமாக அந்தக் குடும்பத்தை அணுகி மாணவியின் கல்விக்கு உதவியிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
தற்போது அந்த மாணவி நாகப்பட்டினத்திலுள்ள கல்லூரி ஒன்றில், தான் விரும்பிய படிப்பைத் தேர்வு செய்திருக்கிறார். மேலும் தனக்கு உதவிய விகடனுக்கு சிவகார்த்திகேயன் அவர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார். 2022 -ம் வருடம் விகடனின் செய்தியால் தேவசங்கரிக்கும் அவரது குடும்பத்துக்கும் நல்லதொரு ஆண்டாய் நம்பிக்கையளித்திருக்கிறது.