Published:Updated:

`தண்ணீர் அபாயகரமான பிரச்னை’- உலக திறன் போட்டியில் தங்கம் வென்ற இந்தியர்

ராம் பிரசாத்

உலக திறன் அறியும் போட்டியில் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார் அஷ்வத் நாராயணன்.

Aswatha Narayana
Aswatha Narayana ( ANI )

ரஷ்யாவின் காஸன் நகரில் 45-வது உலகதிறன் அறியும் போட்டிகள் நடந்தது. இந்தப் போட்டியில் இந்தியா உள்பட 65 நாடுகளை சேர்ந்த போட்டியாளர்கள் கலந்துக்கொண்டனர். இதில் சுமார் 1,354 போட்டியாளர்கள் பங்கேற்றதாக கூறப்படுகிறது. இந்தியா 44 திறன்களில் பங்கேற்றது. இந்தப்போட்டியில் பங்கேற்பதற்காக நபர்களுக்கான தேர்வு கடந்தாண்டு ஜனவரி மாதமே தொடங்கிவிட்டது. தேசிய திறன் மேம்பாட்டு கழகம் இதற்கான பணிகளை தொடங்கியது. இதற்காக கடந்தாண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மாநில அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டது. அதில் தேர்வானவர்கள் டெல்லியில் நடந்த தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றனர். தேசிய அளவில் வெற்றி பெற்றவர்கள் உலக திறன் அறியும் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்றனர். 1950-ம் ஆண்டில் இருந்து இந்த போட்டிகள் நடந்து வருகிறது. இந்தியா 2007-ம் ஆண்டில் இருந்து பங்கேற்று வருகிறது.

Aswatha Narayana, Pranav Nutalapati, Sanjoy Pramanik,  Shweta Ratanpura
Aswatha Narayana, Pranav Nutalapati, Sanjoy Pramanik, Shweta Ratanpura

ரஷ்யாவில் நடந்த இந்தப்போட்டியில் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரை சேர்ந்த அஸ்வத் நாராயணன் தண்ணீர் தொழில்நுட்பத்தில் தனது திறமையை நிரூபித்தார். இந்தப்பிரிவில் 25 வயதான அஸ்வத் நாராயணன் தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார். இதன் மூலம் இந்தப்போட்டிகளில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார். இதேபோல் வெப் தொழில்நுட்பத்தில் 17 வயதான பிரனவ் வெள்ளிப்பதக்கம் வென்றர். ஆபரணங்கள் மற்றும் கிராபிக் டிசைன் தொழில்நுட்பத்தில் மேற்கு வங்கத்தை சேர்ந்த சஞ்சய் பிரம்னிக் மற்றும் மகாராஷ்ட்ராவை சேர்ந்த ஸ்வேதா ரத்தன்புரா வெண்கலப்பதக்கங்களை வென்றனர். இந்தப்போட்டியில் இந்தியா 1 தங்கம், 1 வெள்ளி மற்றும் 2 வெண்கலப்பதக்கங்களை வென்றுள்ளது. மேலும் 15 சிறப்பு பதக்கங்களையும் வென்றுள்ளனர். உலகளவிலான திறன் சார்ந்த போட்டிகளில் பதக்கம் வென்ற முதல் பெண் என்ற பெருமையை ஸ்வேதா ரத்தன்புரா பெற்றார்.

விலாசம் இல்லை;நினைவுகளை சுமந்து நிற்கிறோம்! -ஒடிசா மக்களுக்காக 50 ஆண்டுகள் சேவை செய்த கன்னியாஸ்திரி

வர்த்தகம், வெல்டிங், ஆட்டோ மொபைல் தொழில்நுட்பம், கார் பெயிண்டிங், வாகன பழுதுபார்ப்பு உள்ளிட்ட 15 துறைகளில் இந்தியா 15 சிறப்பு பதக்கங்களை வென்றுள்ளது. ஒட்டுமொத்தமாக 19 பதக்கங்களை வென்ற இந்திய அணி பதக்கப்பட்டியலில் 13வது இடத்தை பிடித்துள்ளது. 2017-ம் ஆண்டு அபுதாபியில் நடந்த உலக திறன் அறியும் போட்டியில் இந்தியா 11 பதக்கங்களுடன் 19 இடத்தை பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. பதக்கங்களை வென்ற இந்தியர்களுக்கு வாழ்த்துகள் குவித்து வருகிறது.

Aswatha Narayana
Aswatha Narayana

உலக திறன் அறியும் போட்டியில் தங்கம் வென்ற அஸ்வதாவுக்கு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தனது பாராட்டையும் நன்றியையும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அஷ்வத், “ உலகதிறன் அறியும் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்று தண்ணீர் தொழில்நுட்பத்தில் தங்கப்பதக்கம் வாங்கியது பெருமையாக இருக்கிறது. தேசிய போட்டியில் வெற்றி பெற்ற பிறகு 10 மாதங்களாக இந்த பயணம் தொடங்கியது. இது ஒரு கடினமான பயணம் ஆனால் சவாலானதாக இருந்தது. இது ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது. இந்தப்போட்டியில் தண்ணீர் தட்டுப்பாடு குறித்து எடுத்துரைத்தோம். தண்ணீர் அபாயகரமான பிரச்னை. உலகில் 80 சதவிகித தண்ணீர் சுத்தகரிக்கப்படாமல் போகிறது. நீர் மேலாண்மையில் நாடுகள் கவனம் செலுத்த வேண்டும். வீணாகும் நீரை எப்படி மறுசுழற்சி செய்து பயன்படுத்துவது என்பது குறித்து எடுத்துரைத்தாகவும். உலக நாடுகள் இந்தப்பிரச்னையில் கவனம் செலுத்தவேண்டும். கூறினார்.

`புற்றுநோய் மருத்துவராவதுதான் லட்சியம்!' - நீட் தேர்வில் சாதித்த பழங்குடியின மாணவி