`கேளுங்கள், பதில் கிடைக்கும்’ பகுதியில், வருமான வரிக் கணக்கு தாக்கல் (இன்கம் டாக்ஸ் ரிட்டர்ன்) செய்வது தொடர்பான கேள்விகளுக்கு பதில் சொல்கிறார் சென்னையின் முன்னணி ஆடிட்டர்களில் ஒருவரான எஸ்.சதீஷ்குமார்.

நான் சம்பளம் வாங்கும் நபர். 2019-20–ம் நிதியாண்டில் என் மொத்த ஆண்டுச் சம்பளம் சுமார் ரூ.5 லட்சம். சம்பளம் போக இரண்டு வருமானங்கள் இருக்கின்றன. 2012–ம் ஆண்டு கிஷான் விகாஸ் பத்திரத்தில் என் பெயர் மற்றும் மகள் பெயரில் செய்த முதலீட்டுக்கு 2019, அக்டோபரில் மொத்தம் ரூ.1.70 லட்சம் (இதில் வட்டி வருமானம் ரூ.85,000) கிடைத்தது. நான் இதர வருமானமாக ரூ.1.70 லட்சம் என்று காட்டுவதா அல்லது வட்டி வருமானமான ரூ.85,000-ஐ மட்டும் காட்டுவதா... நான் ஐ.டி.ஆர் 2 படிவம் தாக்கல் வேண்டுமா?

- பி.ராஜதுரை, மதுரை

‘‘சம்பளம், ஒன்றுக்கு மேற்பட்ட வீட்டு சொத்துகளிலிருந்து வாடகை வருமானம், இதர வருமானம் மற்றும் மூலதன ஆதாயம் இருந்தால் மட்டுமே ஐ.டி.ஆர் 2–வில் வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும். தபால் அலுவலகம் மூலம் பெற்ற வட்டி வருமானத்தை மட்டும் இதர வருமானம் எனக் காட்டினால் போதும்.”

2009-லிருந்து வரிக் கணக்கு தாக்கல் செய்துவருகிறேன். வரி எதுவும் கட்டவில்லை. நான் வரிக் கணக்கு தாக்கல் செய்யத் தொடங்கும்போது இருந்த சில வங்கிக் கணக்குகள் செயல்பாட்டில் இல்லை. அதை இப்போது கணக்கு தாக்கல் செய்யும்போது காண்பிக்க வேண்டுமா... அல்லது செயல்பாட்டிலிருக்கும் வங்கிக் கணக்குகளை மட்டும் சொல்வது போதுமானதா..?

- ரா.பிரசன்னா, மதுரை-62501

“வருமான வரிக் கணக்கு அறிக்கையைத் தாக்கல் செய்யும்போது, செயல்படும் அல்லது செயல்படாத வங்கிக் கணக்குகள் காட்டப்பட வேண்டும். 2019, ஏப்ரல் மாதத்துக்கு முன் மூடப்பட்ட கணக்குகளை 2019-2020-ம் நிதியாண்டுக்கான வரிக் கணக்கு தாக்கலில் காட்ட வேண்டியதில்லை.’’

நான் கடந்த சில ஆண்டுகளாக மாதம் ரூ.10,000 வீதம் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டில் குரோத் ஆப்ஷனில் முதலீடு செய்துவந்தேன். இந்த ஃபண்ட் சரியாகச் செயல்படவில்லை. அதைச் சுமார் 25% இழப்பில் அண்மையில் விற்றுவிட்டேன். இந்த இழப்பு விவரம் 26AS-ல் தெரியுமா? நான் வரிக் கணக்கு தாக்கல் செய்யும்போது, இந்த இழப்பை எப்படிக் காட்டி அடுத்துவரும் ஆண்டுகளில் வரிச் சலுகை பெறுவது?

- பொன்செல்வி, கோயம்புத்தூர்

“உங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு, நிதியாண்டுக்கான மூலதன இழப்பாக மூலதன ஆதாயத்திலிருந்து கிடைக்கும் வருமானம் என்ற பிரிவில் காட்டப்பட வேண்டும். இழப்புகளை அடுத்த எட்டு ஆண்டுகளுக்கு எடுத்துச் செல்ல முடியும். மூலதன ஆதாயத்தைத் தவிர, வேறு எந்த வருமானத்துக்கு எதிராகவும் இதை ஈடுசெய்ய முடியாது.”

முடிந்த 2019-20-ம் ஆண்டுக்கு என் நிறுவனத்திலிருந்து இன்னும் படிவம் 16 தரவில்லை. நான் எப்படி வரிக் கணக்கு தாக்கல் செய்வது... அதற்கு கெடு தேதி ஏதாவது இருக்கிறதா?

- சொ.பாலகிருஷ்ணன், கூடுவாஞ்சேரி

“வழக்கமாக, ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 31-ம் தேதி வரிக் கணக்கு தாக்கல் செய்ய வேண்டிய தேதி. கோவிட்-19 பரவலால், 2019-20-ம் நிதியாண்டுக்கான தேதி 30.11.2020-ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது. நிறுவனங்கள் படிவம் 16 கொடுக்க வேண்டிய கெடு தேதி இப்போது 2020, ஆகஸ்ட் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.”

`வருமான வரிக் கணக்கைச் சரியான தேதிக்குள் தாக்கல் செய்யவில்லையென்றால் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்’ என்று என் தோழி சொல்கிறாள். உண்மையா?

- கோமாதா, சங்கரன்கோவில்

“வருமான வரி அறிக்கையை உரிய தேதிக்குள் தாக்கல் செய்யாவிட்டால், தாமதக் கட்டணம் வருமான வரித்துறையால் விதிக்கப்படும். வேண்டுமென்றே வருமான வரி ஏய்ப்பு அல்லது வருமானத்தை வேண்டுமென்றே மறைத்தல் ஆகியவை வருமான வரித்துறையால் கண்டுபிடிக்கப்பட்டால், சிறைவாசம் அல்லது அபராதம் அல்லது இரண்டு தண்டனைகளும் விதிக்கப்படும். எனவே, சரியான நேரத்தில் வரியைக் கட்டுவதோடு, வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதும் அவசியம்.”

2019-20-ம் நிதியாண்டில் செய்திருந்த வரிச் சலுகை முதலீடு ஒன்றைக் கணக்கில் காட்ட மறந்துவிட்டேன். அதை இப்போது காட்டி, ரீஃபண்ட் பெற வழி இருக்கிறதா?

- சாந்தினி, ஆறுமுகநேரி

“திருத்தப்பட்ட வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய முடியும். 2019-20–ம் நிதியாண்டுக்கான வருவாயைத் தாக்கல் செய்வதற்கான தேதி 30.11.2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், திருத்தப்பட்ட வரிக் கணக்கை 31 மார்ச், 2021 வரை மேற்கொள்ளலாம். எனவே, பணத்தைத் திரும்பப் பெறுவதற்கு உரிமை கோர, அந்தத் தேதிக்கு முன் திருத்தப்பட்ட வரிக் கணக்கைத் தாக்கல் செய்துகொள்ளலாம்.”

யாரெல்லாம் கட்டாயம் வரிக் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்?

- சந்தியா குமார், நாகர்கோவில்

“பொதுவாக, 60 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ஆண்டுக்கு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்குமேல் இருந்தால், 60 வயது மற்றும் 80-க்குக்கீழ் உள்ள மூத்த குடிமக்களுக்கு ரூ.3 லட்சத்துக்குமேல் இருந்தால், 80 வயதுக்கு மேல் உள்ள மிகவும் மூத்த குடிமக்களுக்கு ரூ.5 லட்சத்துக்குமேல் இருந்தால் வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும். ஆனால், வரி வரம்புக்குள் வரவில்லை என்றாலும், கூடுதலாக வரி கட்டி அதைத் திரும்ப பெற வேண்டும் என்றாலும், முதலீடு மூலம் மூலதன இழப்பு ஏற்பட்டு அதை அடுத்துவரும் ஆண்டுகளுக்கு எடுத்துச்செல்ல வேண்டும் என்றாலும், இந்தியாவுக்கு வெளியே சொத்து ஏதாவது இருக்கிறது என்றாலும், கடன் மற்றும் விசாவுக்கு விண்ணப்பிக்கும்போது வரிக் கணக்கு தாக்கல் விவரம் தேவைப்படும் என்றாலும் வரிக் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்.”

எனக்கு பான் கார்டு இருக்கிறது. என் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்குள்தான். நான் வரிக் கணக்கு தாக்கல் செய்ய வேண்டுமா?

- சுரேஷ், மத்தளம்பாறை

“உங்களின் வருமானம் நிதியாண்டில் ரூ.2.5 லட்சத்துக்குக்கீழ் இருந்தால், நீங்கள் வரிக் கணக்கு தாக்கல் செய்யத் தேவையில்லை. பான் கார்டு இருக்கிறது என்பதற்காக யாரும் வரிக் கணக்கு தாக்கல் செய்யத் தேவையில்லை. இப்போது பிறந்த குழந்தைக்குக்கூட பான் கார்டு இருக்கிறது.”

வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கு மூத்த குடிமக்களுக்கு ஏதாவது சலுகை இருக்கிறதா?

- செந்தமிழன், கடையம்

“80 வயதுக்கு மேற்பட்ட மிகவும் மூத்த குடிமக்கள் என்றால் வாய்ப்பு வசதிக்கு ஏற்ப ஆன்லைன் அல்லது வருமான வரித்துறையில் நேரடியாக வரிக் கணக்கு தாக்கல் செய்யலாம்.”

சரியாக வருமான வரி கட்டுபவர்கள், வரிக் கணக்கு தாக்கல் செய்பவர்களுக்கு மத்திய அரசு ஏதாவது சலுகை அளிக்கிறதா?

- சிவக்குமார், திருச்சி 2

“அரசுக்கு முறையாக வருமான வரி செலுத்தும் நபர்களுக்கு வெண்கலம் (ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை வரி கட்டியவர்கள்), வெள்ளி (ரூ.10 லட்சம் முதல் 50 லட்சம் வரை ), தங்கம் ( ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை), பிளாட்டினம் (ரூ.1 கோடிக்கு மேல்) போன்ற சான்றிதழ்கள் இந்திய அரசால் வழங்கப்படுகின்றன. தற்போது வேறு எந்தச் சலுகைகளும் கிடையாது. வரும் காலத்தில் சரியாக வரி கட்டுபவர்கள் மற்றும் அதிக வரி கட்டுபவர்களுக்கு மத்திய அரசு ஏதாவது சலுகை அளிக்கும் என்று நம்புவோம்.”

கேளுங்கள், பதில் கிடைக்கும்!

நிம்மதியான ஓய்வுக்காலத்துக்கு எப்படி நிதித் திட்டமிட வேண்டும் என்பது குறித்து உங்களுக்கு இருக்கும் பல சந்தேகங்களுக்கு மும்பையைச் சேர்ந்த நிதி ஆலோசகர் சுரேஷ் சடகோபன் (Ladder7.co.in) பதிலளிக்கிறார்.

உங்கள் கேள்விகளை navdesk@vikatan.com என்ற இ-மெயிலுக்கு அனுப்பி வைக்கலாம்.