Published:Updated:

நெல்லை: ஆட்டோவைப் பறிமுதல் செய்த ஃபைனான்ஸ் நிறுவனம்; தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட ஓட்டுநர்!

ஃபைனான்ஸ் நிறுவனம் முன்பாக தீக்குளித்த பழனிவேல்
News
ஃபைனான்ஸ் நிறுவனம் முன்பாக தீக்குளித்த பழனிவேல்

கொரோனா ஊரடங்கு காரணமாக, தொழில்கள் அனைத்தும் முடங்கியதால் லோடு ஆட்டோ சரியான ஓட்டம் இல்லாத நிலையில், ஃபைனான்ஸ் நிறுவனம் ஆட்டோவை எடுத்துச் சென்ற அதிருப்தியில் ஓட்டுநர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகேயுள்ள பாரதி நகரைச் சேர்ந்தவர் பழனிவேல். அவர் தன் மைத்துனர் அன்னாவி என்பவரின் பெயரில் லோடு ஆட்டோ வாங்கி தொழில் செய்துவந்தார். லோடு ஆட்டோ வாங்குவதற்குத் தன்னிடம் போதுமான நிதி வசதி இல்லாததால், நெல்லை ஸ்ரீபுரம் பகுதியிலுள்ள தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றார்.

கொரோனா ஊரடங்கு காரணமாகத் தொழில்கள் அனைத்தும் முடங்கியதால், பழனிவேலின் ஆட்டோவும் சரிவர ஓடவில்லை. அதனால் லோடு ஆட்டோ வாங்குவதற்காக ஃபைனான்ஸ் நிறுவனத்திடம் வாங்கிய கடனை கடந்த மூன்று மாதங்களாகத் திருப்பிச் செலுத்தாமல் பாக்கிவைத்திருக்கிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஃபைனான்ஸ் நிறுவனத்தினர் கடனைத் திருப்பிச் செலுத்தச் சொன்னபோது, பணம் கிடைத்ததும் பழைய பாக்கியையும் சேர்த்துக் கட்டிவிடுவதாகத் தெரிவித்திருக்கிறார். ஆனாலும், அதைக் கேட்க மறுத்த ஃபைனான்ஸ் நிறுவன ஊழியர்கள், இரு தினங்களுக்கு முன்பு ஆட்டோவைப் பறிமுதல் செய்தனர்.

தனியார் நிதி நிறுவனம்
தனியார் நிதி நிறுவனம்

அதனால் பழனிவேல மிகுந்த மன வேதனை அடைந்தார். இது தொடர்பாக, தனியார் நிதி நிறுவனத்துக்குச் சென்று பேசினார். ஆனால், அவருக்கு ஆட்டோவைத் திருப்பிக் கொடுக்க மறுத்த ஃபைனான்ஸ் நிறுவன ஊழியர்கள், பழனிவேலுவை அவமரியாதையாகப் பேசியிருக்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தொழிலுக்கு வைத்திருந்த லோடு ஆட்டோ பறிபோனதால் சோகத்திலிருந்த அவர், ஃபைனான்ஸ் ஊழியர்களின் பேச்சால் மிகுந்த மனவேதனை அடைந்தார். அதனால் அந்த நிதி நிறுவனத்தின் முன்பாகவே தன் உடலில் பெட்ரோல் ஊற்றித் தீவைத்துக் கொண்டார்.

ஃபைனான்ஸ் நிறுவன ஊழியர்கள் அவதூறாகப் பேசியதால் மனமுடைந்த பழனிவேல் தீக்குளித்தார்
பழனிவேலின் உறவினர்கள்

உடல் முழுவதும் பற்றி எரிந்த தீயில் கதறித் துடித்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பழனிவேல் உயிரிழந்தார்.

தனியார் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் நடவடிக்கையால் பழனிவேல் உயிரிழந்ததால், அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும். உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு அரசு நிதியுதவி அளிக்க வேண்டும் என்றும் உறவினர்களும் பொதுமக்களும் சாலைமறியல் போராட்டம் நடத்தினார்கள்.

ஃபைனான்ஸ் நிறுவனம் முன்பு நடந்த மறியல்
ஃபைனான்ஸ் நிறுவனம் முன்பு நடந்த மறியல்

நெல்லை சந்திப்பு காவல்துறையினர் பழனிவேலின் உறவினர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றார்கள். கடன் தொகையைச் செலுத்தாததால் ஆட்டோவை பறிமுதல் செய்ததால் ஓட்டுநர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.