Published:Updated:

தோசை முதல் சிக்கன் பிரியாணி வரை...

ஆட்டோமேட்டிக் சமையல் இயந்திரம்
பிரீமியம் ஸ்டோரி
ஆட்டோமேட்டிக் சமையல் இயந்திரம்

அசத்தும் ஆட்டோமேட்டிக் சமையல் இயந்திரம்!

தோசை முதல் சிக்கன் பிரியாணி வரை...

அசத்தும் ஆட்டோமேட்டிக் சமையல் இயந்திரம்!

Published:Updated:
ஆட்டோமேட்டிக் சமையல் இயந்திரம்
பிரீமியம் ஸ்டோரி
ஆட்டோமேட்டிக் சமையல் இயந்திரம்

மிக்ஸி, கிரைண்டர், காபி மேக்கர், ஜூஸ் மேக்கர், காய்கறிகளை வெட்டும் கருவி என நவீன கருவிகள் உபயோகத்தில் இருந்தாலும், சமையலுக்காக மக்கள் செலவிடும் நேரம் என்னவோ குறைந்த பாடில்லை.

இதற்குத் தீர்வுகாணும் முயற்சியில் ‘ரோபோ செஃப்’ என்ற சமைக்கும் இயந்திரத்தை இந்தியாவில் முதன்முதலாக அறிமுகப்படுத்தியுள்ளனர் மதுரையைச் சேர்ந்த மென்பொருள் குழுவினர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இயந்திரத்தை வடிவமைத்த குழுவின் தலைவரான சரவணன் சுந்தரமூர்த்தி, ‘`அடிப்படையில் நான் ஒரு மென்பொருள் நிபுணர். உணவுத்துறையில் ஏதேனும் சாதனை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் கடந்த ஆறு வருடங்களாக என் குழுவினருடன் இணைந்து ஆய்வுசெய்து ‘ரோபோ செஃப்’ என்ற சமைக்கும் இயந்திரத்தை உருவாக்கியுள்ளோம். இந்த இயந்திரத்தின் மூலம் தோசையில் ஆரம்பித்து சிக்கன் பிரியாணிவரை 800 வகையான ரெசிப்பிகளை சமைக்க முடியும்.

சரவணன்
சரவணன்

நாங்கள் கண்டுபிடித்த இயந்திரத்தின் மூலம் ஒரு மணி நேரத்தில் சமைக்க வேண்டிய உணவுகளை அரைமணி நேரத்தில் சமைத்து விடலாம். தவிர, ஆயிரம் முதல் பத்தாயிரம் பேருக்கு ஒரே நேரத்தில் சமைக்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சமைப்பதற்கு முன்னால், உங்களுக்கு என்ன உணவு தயாரிக்க வேண்டுமோ அதற்கான பொருள்களை எடுத்து, அதற்கென பிரத்யேகமாக வடிவமைக்கப் பட்டிருக்கும் சிறிய பெட்டி போன்ற அமைப்பில் வைக்க வேண்டும். பிறகு, என்ன உணவு வேண்டுமோ, அதை நுண்பொருள் பட்டன் மூலம் தேர்ந்தெடுத்தால், சுவையான உணவு தயாராகிவிடும்.

ஆட்டோமேட்டிக் சமையல் இயந்திரம்
ஆட்டோமேட்டிக் சமையல் இயந்திரம்

முக்கியமான விஷயம், இந்த இயந்திரத்தில் இரண்டு பெட்டிகள் இருக்கும். ஒன்றில் சைவம், ஒன்றில் அசைவம் என்று சமைத்துக்கொள்ளலாம். ஒரே நேரத்தில் இரண்டு ரெசிப்பிகள் செய்ய முடியும்’’ என்றவர், நம் கண்முன்னரே பால் பாயசத்தையும் கேசரியையும் ஒரே நேரத்தில் செய்துகாட்டினார்.

‘`சமைத்து முடித்ததும் தானாகவே சுத்தம் செய்துகொள்ளும் வகையில் இந்த இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது இயங்க குறைந்த அளவிலான மின்சாரமே போதும் என்பதால், எரிபொருளும் மிச்சம். அதிக அளவிலான உணவு தயாரிக்கும் ரோபோவை இப்போது ரூ. 6 லட்சம் முதல் 45 லட்சம்வரை விற்பனை செய்து வருகிறோம்.

பத்து பேருக்கு சமைக்கக்கூடிய சிறிய இயந்திரமும் இருக்கிறது. இதை வீடுகளில் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த இயந்திரத்தின் இன்னொரு ப்ளஸ், சமையலுக்குத் தேவையான தண்ணீரை மட்டும் உள்வாங்கிக்கொண்டு, மீதமுள்ள தண்ணீரை ஒரு கன்டெய்னரில் தனியாகச் சேமித்து வெளியே அனுப்பிவிடும்’’ என்றார் சரவணன்.

ரோபோ ராக்ஸ்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism