நீரால் நிரம்பியிருந்தால்தான் தண்ணீர்க் குடம்; இல்லையெனில், அது வெற்றுக் குடம். காற்றால் நிரம்பியிருந்தால்தான் பலூன்; இல்லையெனில், அது சாதாரண ரப்பர் துண்டு. தானியங்களால் நிரம்பியிருந்தால்தான் மூட்டை; இல்லையெனில், அது வெறும் கோணி... உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால், மனித வாழ்வில் பெண்ணின் பாத்திரம் வருந்தத்தக்கது, கொடுமையானது. ஆனந்தம், நெகிழ்வான தருணங்கள், பரவச அனுபவங்கள், தன்னைத்தானே மெச்சிக்கொண்ட சந்தர்ப்பங்கள், பேருவகை கொண்ட நாள்கள்... இவை எதுவுமே ஒரு சராசரிப் பெண்ணுக்கு வாய்ப்பதில்லை. அந்தப் பெண் வெறும் சூனியத்தால் நிரம்பியிருப்பவள். அவள் வெற்றுக் குடம்; சாதாரண ரப்பர் துண்டு; வெறும் கோணி. இந்த யதார்த்தத் தைச் சுட்டிக்காட்டுகிறது `அற்றவைகளால் நிரம்பியவள்’ நாவல்.

மருத்துவப் பணியின் பொருட்டு லண்டனில் வசிக்கும் பிரியா விஜயராகவனின் முதல் நாவல் இது. ஒரு திரைப்படத்தின் கதையை சுருக்கமாக விவரிப்பதுபோல ஒரு நாவலின் கருவைச் சொல்லிவிட முடியாது. அது, படித்து அனுபவிக்க வேண்டிய பேரனுபவம். நாவலிலிருந்து சில பகுதிகள்...

ஒரு விஷயம் லேசாகப் புரிந்தது. உலகில் எந்த ஊரோ, எந்த நிறமோ, எந்த மொழியோ ஆண்களின் பார்வை பொதுவானதுதான். எந்த வித்தியாசமும் இல்லை.

ஒருமுறை மனம் வலிக்கக் கோபத்தோடு, அம்மாவைக் கடிந்து அழும் சமயம்... நடுங்கும் குரலோடு, `என்னால முடிஞ்சா திரும்ப எடுத்து உன்னை பத்திரமா என் வயித்துக்குள்ளவே வெச்சுக்குவேன்டா... உனக்கு எந்தக் கஷ்டமும் வராம பார்த்துக்குவேன். என்னால முடியலையே...’ என்றபோது அசந்து போனேன். அதிலிருந்து அம்மாவை எதற்கும் கோபிக்கவே கூடாது என்று முடிவுசெய்தேன்.

குடிபோதை என்பது மனிதனின் மென்மையான ஆக்ரோஷம்; பலமான பலவீனம். அதன் பிடியில் மாட்டிக்கொண்ட இன்னொரு மனிதனின் கலங்கிய நிமிடத்தைப் பார்க்கையில் எனக்குப் பாவமாக இருந்தது. இதுவரை எனக்குத் தெரிந்த டாம்பீக ஆடம்பர மனிதர் மறைந்து, தனிமையில் குறுகிக் கொண்டிருக்கும் வயதான மனிதர் முதன்முதலில் எனக்குத் தென்பட்டார்.

மருத்துவத் தொழில் எத்தனை விநோதமான ஒன்று. ஸ்டெதாஸ்கோப் ஒரு கேடயம்தான். சட்டென ஒருவரின் வாழ்க்கை, அந்தரங்கம், நிர்வாணம், இருட்டு, நிஜம், பயம் எல்லாம் திறந்து காட்டுவதை எப்படி ஏற்பது என்று எந்த மருத்துவப் புத்தகமும் சொல்லித்தரவில்லை.

ஐசியூவுக்கென்று ஒரு பிரத்யேக மணம் உண்டு. மருந்து வாடை, டெட்டால் வாசம், ஏசி எல்லாம் கலந்து மேலே அப்பிக்கொள்ளும். அதேபோல பரபரப்பாகவும் நிசப்தமாகவும் ஒரே நேரத்தில் இருக்கும் இடம். ஐசியூ நர்ஸ்கள் என்னைப் போன்ற ஜூனியர் டாக்டர்களுக்கு தெய்வங்கள்போல. நிறைய செய்முறைகளைச் சொல்லித்தருவது அவர்கள்தான்.

அவளை முழுக்கப் பரிசோதனை செய்யும்போது என் நெஞ்சு அதிர்ந்தது. இந்த 19 வயதுப் பெண்ணை எத்தனை பேர், எப்படியெல்லாம் உபயோகித்திருப்பார்களோ என்று தெரியவில்லை. டாக்டர் என்பதைத் தாண்டி, பெண் என்பதுதான் இது போன்ற நிமிடங்களில் நினைவில் இருக்கிறது.

தனக்கு என்ன தேவை என்று தெரிந்தவர்கள் எல்லோரும் பாக்கியவான்கள்தான். `நல்லதோ கெட்டதோ, இதுதான் எனக்கு வேண்டும்' என்ற தீர்மானத்தில் உறுதியாக இருப்பவர்களுக்கு பிரபஞ்சம் கேட்டதைக் கொடுத்துவிடுகிறது.

நூல்: அற்றவைகளால் நிரம்பியவள்

ஆசிரியர்: பிரியா விஜயராகவன்

வெளியீடு: கொம்பு பதிப்பகம்,

1, பப்ளிக் ஆபீஸ் ரோடு,

நாகப்பட்டினம் - 611 001.

அலைபேசி: 99523 26742.

பக்கங்கள்: 712

விலை: ₹ 430