ஆசிரியர் பக்கம்
தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

அவள் Online!

 அவள் Online!
பிரீமியம் ஸ்டோரி
News
அவள் Online!

கொசுக்கடி சிரமங்கள், அம்மாவின் இழப்பு, அந்த ஏக்கம்!

மகிழ்ச்சி, புன்னகை, ஆச்சர்யம், அற்புதம், அனுபவம், பரவசம், பயன்பாடு... இப்படி எண்ணற்ற விஷயங்கள் விகடன் இணையதளத்தில் கொட்டிக்கிடக்கின்றன. அவற்றையெல்லாம் நீங்களும் படித்து, பார்த்து, பயன்பெற கடந்த இரு வாரங்களில் வெளியானவற்றில் சில விஷயங்கள் இங்கே...

Covid Questions: ஆவி பிடித்தால் கறுப்புப் பூஞ்சைத் தொற்று வரும் என்பது உண்மையா?

``முதலில் ஆவி பிடித்தலின் சரியான முறையை விளக்குகிறேன். வெறும் வெந்நீரில் தைலமோ, வேறு மருந்துகளோ எதுவும் சேர்க்காமல் ஆவி பிடிக்க வேண்டும். மூக்கு அல்லது வாயால் ஆவியைப் பிடிக்கலாம். ஒன்று முதல் இரண்டு நிமிடங்களுக்கு மேல் ஆவி பிடிக்கக் கூடாது. பெட்ஷீட் மாதிரி எதையும் கொண்டு மூடிக்கொண்டும் பிடிக்க வேண்டியதில்லை.

முழு கட்டுரையையும் இந்த https://bit.ly/3uK4kWt லிங்க்கில் படிக்கலாம்.

கொசுக்கடி சிரமங்கள், அம்மாவின் இழப்பு, அந்த ஏக்கம்! - `கடைக்குட்டி சிங்கம்’ தீபா ஷேரிங்ஸ்

``சின்ன வயசுல வெளியுலக அனுபவம் எதுவுமே தெரியாம, என்னோட போக்குல ரொம்பவே சந்தோஷமா இருந்தேன். அப்பல்லாம் வேப்பமரக் கிளையில உட்கார்ந்து தூங்கின நாள்கள்தாம் அதிகம். ஆனா, ஒருநாள்கூட தூக்கக் களைப்புல மரத்துல இருந்து கீழ விழுந்ததில்ல. தலைநார் பயன்படுத்தாமலேயே அசால்டா பனை மரம் ஏறி இறங்குவேன். மனுஷங்ககிட்ட பேசிப் பழகினதைவிட, நாய், ஆடு, மாடு, கிளினு பிராணிகள்கிட்டதான் அதிகம் பேசி மகிழ்வேன். அந்தக் குழந்தைத்தனம் வயசு கூடக்கூட பக்குவப்பட்டு, பொறுப்புணர்வா மாறணும். ஆனா, இயல்பா அப்படி என்னால மாற முடியல...’’

முழு கட்டுரையையும் இந்த https://bit.ly/3uKBNjt லிங்க்கில் படிக்கலாம்

ஒரு சிறுமியின் தைரியம் என்ன செய்யும்? - பத்மா சேஷாத்ரி பள்ளி சர்ச்சையும் அலசலும்! #VoiceOfAval

20 ஆண்டுகளாக ஒரு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் பற்றி இப்போது புகார் வெடித்திருக்கிறது என்றால், இத்தனை ஆண்டுகளில் இதே ஆசிரியரின் தொல்லைகள் எத்தனை மாணவிகளின் மௌனம், அச்சம், கண்ணீரின் மீது நிகழ்ந்திருக்கும் என்பது தெரியவில்லை. அந்தச் சங்கிலியை அறுக்கும் முதல் கல்லை எறிந்த அந்த முகமறியா சிறுமியும், அவரின் தைரியத்தைத் தாங்களும் பற்றிக்கொண்ட பிற சிறுமிகளும் கொண்டாடப்பட வேண்டியவர்கள். அந்தப் புகார்களை, சமூக வலைதளத்தையே கருவியாகவும், ஆவணமாகவும், போராட்டக் களமாகவும் பயன்படுத்தி, பள்ளியின் 1,000 முன்னாள் மாணவர்களை ஒரே நாளில் ஒருங்கிணைத்து, தங்கள் கையெழுத்துடன் அறிக்கை தயாரித்து பள்ளி நிர்வாகத்துக்கு அனுப்பி என, அந்தப் பெண்கள் அனைவரும்... Bravo!

முழு கட்டுரையையும் இந்த https://bit.ly/3g4SvVI லிங்க்கில் படிக்கலாம்.