மகிழ்ச்சி, புன்னகை, ஆச்சர்யம், அற்புதம், அனுபவம், பரவசம், பயன்பாடு... இப்படி எண்ணற்ற விஷயங்கள் விகடன் இணையதளத்தில் கொட்டிக்கிடக்கின்றன. அவற்றையெல்லாம் நீங்களும் படித்து, பார்த்து, பயன்பெற கடந்த இரு வாரங்களில் வெளியானவற்றில் சில விஷயங்கள் இங்கே...

முதல்ல அதைப்பத்தியெல்லாம் கவலைப்படாமதான் இருந்தேன்; ஆனா, அப்புறம்..?! - சரண்யா மோகன்
``நான் கொஞ்சம் வெயிட் போட்டிருந்ததைப் பத்தி பலரும் பலவிதமா சோஷியல் மீடியாவுல பேசினாங்க. ஒவ்வொருத்தரோட வாழ்க்கையிலயும் எத்தனையோ பிரச்னைகள் இருக்கும்போது, தேவையில்லாம என்னைப் பத்தி இப்படிப் பேசுறவங்களையெல்லாம் எதுவும் செய்யவே முடியாதுனு நினைச்சு நான் பெரிசா ரியாக்ட் பண்ணல. ஆனா...'' - ரீஎன்ட்ரிக்குத் தயாராகும் நடிகை சரண்யா மோகனின் விரிவான பேட்டியை https://bit.ly/3u4Orxh லிங்கில் முழுமையாகப் படிக்கலாம்.

மூளைச்சலவை, முட்டாள் முத்திரை; இந்தச் சிறையை நீங்கள்தான் உடைக்க வேண்டும்! - பெண்ணே ரிலாக்ஸ் ப்ளீஸ் 3.0
``டூ வீலர் பழகுகிறவர்கள், கற்றுக்கொள்ளும் புதிதில் வண்டியை ஒன்றிரண்டு முறை கீழே போடத்தான் செய்வார்கள். `நான்தான் அப்பவே சொன்னேனே. இதெல்லாம் உனக்கு வராது' என்று யார் சொன்னாலும் அதை நம்பாதீர்கள். தவறு செய்தால்தான், அடுத்த முறை எப்படி தவறு செய்யாமல் இருப்பது என்று கற்றுக்கொள்ள முடியும்'' - பெண்களுக்கான தன்னம்பிக்கை தொடரில் சுவாமி சுகபோதானந்தா அறிவுறுத்தும் விஷயங்களை https://bit.ly/3o1380v லிங்கில் அல்லது அருகில் உள்ள ‘QR Code’ஐ ஸ்கேன் செய்து முழுமையாகப் படிக்கலாம்.

விஜய்யை திடீர்னுலாம் அவர், இவர்னு கூப்பிட முடியாது! - வனிதா விஜயகுமார்
``அன்னிக்கு நான் நடிகர் விஜய்யை அணுகிய முறைக்கும், இன்னிக்கு அவர் இருக்கும் உயரத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது வியப்பா இருக்கு. அன்னிக்கு நான் எப்படி பேசிப் பழகினேனோ அப்படியே இன்னிக்கும் என்னால பேச முடியும். இன்னிக்கு திடீர்னு `அவர்', `இவர்'னு மாத்திப் பேச முடியாது. இன்னிக்கு நான் பேசுறதைக் கேட்கிறவங்களுக்கு நான் ஏதோ மரியாதைக்குறைவா பேசுறது போல தெரியும். ஆனா....'' - நடிகை வனிதா விஜயகுமாரின் அதிரடி பேட்டியை https://bit.ly/34dcW0g லிங்கில் அல்லது அருகில் உள்ள ‘QR Code’ஐ ஸ்கேன் செய்து முழுமையாகப் படிக்கலாம்.