மகிழ்ச்சி, புன்னகை, ஆச்சர்யம், அற்புதம், அனுபவம், பரவசம், பயன்பாடு... இப்படி எண்ணற்ற விஷயங்கள் விகடன் இணையதளத்தில் கொட்டிக்கிடக்கின்றன. அவற்றையெல்லாம் நீங்களும் படித்து, பார்த்து, பயன்பெற கடந்த இரு வாரங்களில் வெளியானவற்றில் சில விஷயங்கள் இங்கே...

Doctor Vikatan: தொடைகள் உரசுவதால் புண்ணாகும் சருமம்; தீர்வு என்ன?
``நடக்கும்போது இரண்டு தொடைகளும் ஒன்றோடு ஒன்று உரசி, அந்த இடத்திலுள்ள வியர்வை, ஈரம் எல்லாம் சேர்ந்து அந்தப் பகுதியிலுள்ள சருமம் எரிந்தது போலாகி விடும். சிவந்து விடும். தொட்டாலே எரியும். ஆற ஆற அந்தப் பகுதி கருத்துவிடும். உடல் பருமன் அதிகமுள்ளோருக்கு இந்தப் பிரச்னை அதிகம் ஏற்படும். நிறைய உடற்பயிற்சிகள் செய்வோர், தொடைப்பகுதியில் அதிக வியர்வை இருப்பவர்கள் போன்றோருக்கும் வரும்'' - தொடைகள் உரசிப் புண்ணாவதைத் தவிர்க்க சரும மருத்துவர் சொல்லும் தீர்வுகளை https://bit.ly/392pjyQ லிங்கில் அல்லது அருகில் உள்ள `QR-code'-ஐ ஸ்கேன் செய்து முழுமையாகப் படிக்கலாம்.

`திருமணமான புதிதில் பலமுறை; அதன் பிறகோ... என்னவாகிறது தம்பதியருக்கு? காமத்துக்கு மரியாதை!
``திருமணமான புதிதில் பலமுறை உறவில் ஈடுபடும் ஆண்கள், வருடங்கள் செல்லச் செல்ல வாரத்துக்கு ஒருமுறை அல்லது மாதத்துக்கு ஒருமுறை அல்லது இருமுறை என்று தாம்பத்திய எண்ணிக்கையை அவர்களை அறியாமல் குறைத்துவிடுவார்கள். இதற்குக் காரணம் மனமா, உடலா...'' - பாலியல் மருத்துவர் சொல்லும் தீர்வுகளை https://bit.ly/3kI9v6V லிங்கில் அல்லது அருகில் உள்ள `QR-code'-ஐ ஸ்கேன் செய்து முழுமை யாகப் படிக்கலாம்.