Published:Updated:

அவள் Online!

அவள் Online!
பிரீமியம் ஸ்டோரி
News
அவள் Online!

முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டபோது லேசான தலைவலியும் உடல் அசதியும் இருந்தது

மகிழ்ச்சி, புன்னகை, ஆச்சர்யம், அற்புதம், அனுபவம், பரவசம், பயன்பாடு... இப்படி எண்ணற்ற விஷயங்கள் விகடன் இணையதளத்தில் கொட்டிக்கிடக்கின்றன. அவற்றையெல்லாம் நீங்களும் படித்து, பார்த்து, பயன்பெற கடந்த இரு வாரங்களில் வெளியானவற்றில் சில விஷயங்கள் இங்கே...

மூன்றாம் அலை பீதியை வலுப்படுத்தியிருக்கும் டெல்டா ப்ளஸ் வைரஸ்; யாரையெல்லாம் தாக்கும்?

வேகமாகத் தொற்றுவது, தடுப்பூசி அதிக திறனோடு செயல்படாதது, ஆன்டிபாடி காக்டெயில் மருந்து வேலை செய்யாதது ஆகிய காரணங்களால் இந்தியாவில் இந்த வைரஸ் அதிகம் பரவினால் இதன் மூலம் மூன்றாம் அலை பரவும் என்று கணிக்கின்றனர். இந்த நிலையில் இந்த வைரஸின் உருமாற்றம் குறித்தும் அதன் தாக்கம் குறித்தும் பேசுகிறார் தொற்றுநோய் மருத்துவர் அஷ்வின் கருப்பன். “டெல்டா ப்ளஸ் வைரஸ் அதிக பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பதை யூகத்தின் அடிப்படையில்தான் தெரிவிக்கின்றனர். காரணம், இந்த வைரஸ் தொடர்பான ஆய்வுகள் எதுவும் இல்லை. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களையும் ஆய்வுசெய்த தரவுகள் இல்லை. டெல்டா ப்ளஸ் வைரஸின் முள்போன்ற ஸ்பைக் புரோட்டீன் பகுதியில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அது உடலில் என்ன மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதைக் கண்டறியும் `Sequenzing’ பரிசோதனைதான் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் ஏற்கெனவே இந்தியாவில் பரவி வந்த டெல்டா வைரஸோடு சேர்ந்து, உருமாற்றம் அடைந்து டெல்டா ப்ளஸ் வைரஸாக உருமாறியுள்ளது என்று கண்டறிந்தனர்” என்கிறார்.

மேலும் அவர் அளித்த உண்மை தகவல்களை இந்த https://bit.ly/3juKaxB லிங்க்கில் படிக்கலாம்.

முடிக்கப்பட்ட 30,000 மனுக்கள்; முதலமைச்சர் கேட்ட அப்டேட்ஸ்! - ஷில்பா பிரபாகர் சதீஷ் IAS Exclusive

``புதிய துறையை உருவாக்கும்போது பல்வேறு சிக்கல்கள் உருவாகும். `என்னென்ன பணிகள் இருக்கின்றன… யார் யாருக்கு என்னென்ன பொறுப்புகள்?’ என்று தீர்மானிப்பதற்கே பல நாள்கள் தேவைப்படும். ஆனால், உங்கள் துறையைப் பொறுத்தவரை அதற்கெல்லாம் அவகாசம் இல்லை. 100 நாள்களுக்குள் பணிகளை முடிக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் துறை எப்படிச் செயல்படுகிறது… எத்தனை பேர் பணிபுரிகின்றனர்?” - மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் ஷில்பா பிரபாகர் சதீஷ் ஐ.ஏ.எஸ்ஸைச் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்…

அவர் அளித்த பதில்களை இந்த https://bit.ly/3w7hzkX லிங்க்கில் படிக்கலாம்.

Covid Questions: தடுப்பூசி போட்ட பின் அறிகுறிகள் இல்லையெனில் மருந்து வேலை செய்யவில்லை என அர்த்தமா?

``முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டபோது லேசான தலைவலியும் உடல் அசதியும் இருந்தது. இரண்டாவது டோஸ் போட்டுக்கொள்ளும்போதும் அந்த அறிகுறிகள் இருக்குமா? எத்தனை நாள்களுக்கு அந்த அறிகுறிகள் நீடிக்கும்? ரத்தம் உறைதல் பாதிப்பு வருமா?’’

``தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, அசதி போன்ற அறிகுறிகள் எதுவும் ஏற்படவில்லை என்றால் தடுப்பூசியின் மருந்து வேலை செய்யவில்லை என்கிறார்களே... அது உண்மையா?’’

பதில் சொல்கிறார் கோவையைச் சேர்ந்த மகளிர்நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் சசித்ரா தாமோதரன்.

மேலும் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளையும் அவர் அளித்த பதில்களையும் இந்த https://bit.ly/3y8u5Sx லிங்க்கில் படிக்கலாம்.