Published:Updated:

அவள் பதில்கள் 29 - வாரம் ஒருமுறை வீட்டிலேயே ஃபேஷியல் செய்துகொள்ளலாமா?

அவள் பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
அவள் பதில்கள்

- சாஹா

என் வயது 28. முதல் குழந்தைக்கு `டௌன் சிண்ட்ரோம்' பாதிப்பு உள்ளது. இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்வதில் பயம் தொடர்கிறது. ஒருவேளை அந்தக் குழந்தைக்கும் அதே பாதிப்பு வந்துவிடுமோ என்ற பயத்தில் அதைத் தள்ளிப்போட்டுக் கொண்டிருக் கிறோம். இரண்டாவது குழந்தைக்கும் அதற்கான ஆபத்து இருக்கிறதா? அப்படி இருப்பதை முன்கூட்டியே கண்டறியவோ, சரிசெய்யவோ முடியுமா?

- மாலினி சந்திரன், ஸ்ரீவில்லிபுத்தூர்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, கருவில் உள்ள குழந்தைகளுக்கான மருத்துவர் மதுரா ஜோஷி

அவள் பதில்கள் 29 - வாரம் ஒருமுறை வீட்டிலேயே ஃபேஷியல் செய்துகொள்ளலாமா?

முதல் குழந்தை `டௌன் சிண்ட்ரோம்' பாதிப்புடன் பிறந்தால் அடுத்தடுத்த குழந்தைகளும் அப்படியே பிறக்க வேண்டும் என்று அவசியமில்லை. உங்கள் பயம் அனாவசியமானது.

நாம் எல்லோரும் 23 எக்ஸ், 23 ஒய் என 46 குரோமோசோம்களுடன் பிறக்கிறோம். அதாவது மொத்தம் 23 இணை குரோமோசோம்கள் (46) இருக்கும். இந்த குரோமோசோம்களில் 21-வது இணையில் மூன்று குரோமோ சோம்கள் இருந்தால், டௌன் சிண்ட்ரோம் ஏற்படும் (21 ட்ரைசோமி). அதிகமாக உள்ள ஒரு குரோமோசோம் பெற்றோரில் ஒருவரிடமிருந்து வந்திருக்கலாம். இதை நாம் மாற்ற முடியாது. டௌன் சிண்ட்ரோம் பாதிப்புக்கு சிகிச்சைகள் கிடையாது. கருவிலுள்ள குழந்தைக்கு டௌன் சிண்ட்ரோம் பாதிப்பு இருப்பதைக் கண்டறிய இன்று நவீன பரிசோதனைகள் இருக்கின்றன. கர்ப்பத்தின் 11- 13 வாரங்களில் செய்யப்படும் ஸ்கேன் மிக முக்கியமானது. அதில் குரோமோசோம் அசாதாரணங்களைக் கண்டறிய முடியும்.

பாதிப்பு உறுதிசெய்யப்பட்டால் ஒன்று அந்தக் குழந்தையை அப்படியே ஏற்றுக்கொள்வது அல்லது அந்தக் கர்ப்பத்தைக் கலைப்பது என பெற்றோர் இரண்டில் ஒன்றை முடிவு செய்ய வேண்டும்.

டௌன் சிண்ட்ரோம் பாதிப்புள்ள குழந்தைகளுக்கு தைராய்டு, இதய நோய்கள், குடல் தொடர்பான அசௌகர்யங்கள் உள்ளிட்ட பல பிரச்னைகள் வர வாய்ப்புண்டு. சில பிரச்னைகளை சிகிச்சைகளின் மூலம் சரிசெய்ய முடியும். ஆனால் டௌன் சிண்ட்ரோம் பாதித்த குழந்தைகளின் அறிவாற்றல் குறைபாட்டை சரிசெய்ய சிகிச்சைகள் கிடையாது.

அந்தக் குழந்தைகளுக்குப் பெற்றோரின் அதிகபட்ச அக்கறை, ஆதரவு, சிறப்பு பள்ளிக்கூடங்களில் பயிற்சி போன்றவற்றின் மூலம் அவர்களை தன்னம்பிக்கையுடன் வளரச் செய்யலாம்.

செல்ஃப் ஃபேஷியல் கிட் வாங்கி, வீட்டிலேயே ஃபேஷியல் செய்துகொள்வது சரியா? வாரம் ஒருமுறை செய்து கொள்ளலாமா?

- ஆர். சங்கீதா, காஞ்சிபுரம்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, அழகுக் கலை நிபுணர் வசுந்தரா

வசுந்தரா
வசுந்தரா

பருக்கள் அதிகமுள்ளோருக்கான கிட், வறண்ட சருமம் உள்ளவர்களுக்கான கிட், எண்ணெய்ப் பசையான சருமம் கொண்டவர்களுக்கானது என செல்ஃப் ஃபேஷியல் கிட்டில் நிறைய வகைகள் இருக்கின்றன. அதைப் பயன்படுத்தத் தொடங்குவதற்கு முன் உங்கள் சருமத்தின் தன்மையைத் தெரிந்துகொள்ள வேண்டும். உங்கள் சருமம் எண்ணெய்ப்பசையானதா, வறண்டதா, நார்மலானதா, சென்சிட்டிவ்வானதா என்று தெரிந்துகொள்ள வேண்டும். அது தெரிந்து அதற்கேற்ற ஃபேஷியல் கிட்டை தேர்ந்தெடுக்க வேண்டும். அப்படி உங்களுக்கு சருமத்தில் குறிப்பிட்ட பிரச்னை எதுவும் இல்லை என்றால் நார்மல் சருமத்துக்கான ஃபேஷியல் கிட்டை வாங்கிப் பயன்படுத்தலாம். தரமான தயாரிப்பாக இருக்க வேண்டியது முக்கியம். ஸ்பெஷல் ஃபேஷியலுக்கான கிட்டும் நிறைய கிடைக்கிறது. உதார ணத்துக்கு ஸ்கின் வொயிட்டனிங், ஸ்கின் பிரைட்டனிங் என்றெல்லாம் பிரத்யேகமாகக் கிடைக்கும். உங்கள் தேவையறிந்து அதை வாங்கலாம்.

அவள் பதில்கள் 29 - வாரம் ஒருமுறை வீட்டிலேயே ஃபேஷியல் செய்துகொள்ளலாமா?

ஃபேஷியல் கிட்டின் பின்பகுதியில் அதைப் பயன் படுத்துவதற்கான குறிப்புகள் இருக்கும். உபயோகிப்பதற்கு முன் அவற்றைப் படித்துக்கொள்ளுங்கள். க்ளென்சர், ஸ்க்ரப், டோனர், மசாஜ் ஜெல் அல்லது மசாஜ் க்ரீம், ஃபேஸ்பேக் போன்றவை இருக்கும். ஃபேஷியல் செய்வதற்கான ஸ்ட்ரோக்ஸ் படங்களும் கிட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும். அதைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். செல்ஃப் ஃபேஷியலில் ஸ்டீம் செய்வதைத் தவிர்த்துவிடலாம்.

வீட்டில்தானே செய்துகொள்கிறோம் என்பதற்காக வாரம் ஒருமுறை செய்துகொள்வதெல்லாம் தேவையற்றது. உங்கள் வயது, சருமத்தின் தன்மைக்கேற்ப, பதினைந்து நாள்களுக்கொரு முறை அல்லது மாதம் ஒருமுறை செய்துகொள்ளலாம். ரொம்பவும் சென்சிட்டிவ்வான சருமம் உள்ளவர்கள் அடிக்கடி செய்துகொள்ளக் கூடாது. ரொம்பவும் வறண்ட சருமம் உள்ளவர்கள் பதினைந்து நாள்களுக்கொரு முறை செய்து கொள்ளலாம்.