Published:Updated:

அவள் பதில்கள் - 35 - உடை நனையும் அளவுக்கு அதீத வியர்வை... தீர்வு உண்டா?

அவள் பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
அவள் பதில்கள்

சாஹா

அவள் பதில்கள் - 35 - உடை நனையும் அளவுக்கு அதீத வியர்வை... தீர்வு உண்டா?

சாஹா

Published:Updated:
அவள் பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
அவள் பதில்கள்

என்னுடைய தோழி சமீபத்தில் எடையைக் குறைத்தாள். அதன் பிறகு அவளது முகம் மிகவும் மெலிந்து, பார்ப்பதற்கே நோயாளி போலாகி விட்டாள். உடலின் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் உள்ள பருமனைக் குறைக்க முடியாதா? எடைக்குறைப்பில் எல்லோருக்கும் முகம் உள்ளடங்கிப் போவதும் நோயாளி தோற்றம் வருவதும் ஏன்?

- கே.அஸ்வினி, திருச்சி

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஃபிட்னெஸ் பயிற்சியாளர் ஷீபா தேவராஜ்

உடலின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் குறைக்கும் ‘ஸ்பாட் ரிடக்‌ஷன்’ எனும் விஷயம் சாத்தியம் என்பதே தவறான நம்பிக்கை தான். உடலில் குறிப்பிட்ட ஒரு பகுதியை மட்டும் தேர்ந்தெடுத்து, அந்த இடத்தின் எடையை மட்டும் குறைக்க வாய்ப்பில்லை. முழுக் கோழியை மெழுகுவத்தி ஒளியில் சமைப்பது போன்ற முயற்சி இது.

அவள் பதில்கள் - 35 - உடை நனையும் அளவுக்கு அதீத வியர்வை... தீர்வு உண்டா?

எடைக்குறைப்புக்கான பயிற்சிகள் என்பவை ஒட்டுமொத்த உடலுக்குமானவை. அந்தப் பயிற்சிகளைச் செய்யும்போது உடலின் எல்லாப் பகுதிகளிலும் உள்ள தேவையற்ற கொழுப்பும் குறையும். அந்த வகையில் எங்கெல்லாம் அதிக கொழுப்பு உள்ளதோ, அங்கெல்லாமும் அது குறையும்.

உடலின் எந்தப் பகுதியில் உங்களுக்கு முதலில் எடை அதிகரித்ததோ, அந்தப் பகுதியின் எடைதான் கடைசியாகக் குறையும். கைகள், முகம், பிட்டம், வயிறு போன்ற பகுதிகளின் எடையைப் பொறுத்தவரை, முறையான உணவுப்பழக்கம் மற்றும் திட்டமிடப்பட்ட உடற்பயிற்சிகளின் மூலம் நன்றாகவே குறையும்.

எடையைக் குறைக்க நினைப்போர் குறைவாகச் சாப்பிட வேண்டும் என நினைக்கிறார்கள், அது தவறு. சரியாகச் சாப்பிட வேண்டும். எனவே மிகவும் குறைந்த கலோரி உள்ள உணவுகளைச் சாப்பிட்டு எடையைக் குறைக்க முயற்சி செய்யாதீர்கள். சரியான உணவுடன் வெயிட் டிரெயினிங் பயிற்சிகளையும் சேர்த்துச் செய்தால், உங்களுக்கு தசை இழப்பு ஏற்படாது. நீங்கள் குறிப்பிடும் அந்த ‘நோயாளி லுக்’கும் தவிர்க்கப்படும்.

ஷீபா தேவராஜ், செல்வி ராஜேந்திரன்
ஷீபா தேவராஜ், செல்வி ராஜேந்திரன்

என் அம்மாவுக்கு வயது 65. நீரிழிவோ, ரத்த அழுத்தமோ இல்லை. கழுத்துவலி பிரச்னை மட்டும் உண்டு. அதற்கும் மருந்துகள் எடுத்துக் கொள்வதில்லை. கடந்த இரண்டு மாதங்களாக அவருக்கு வியர்வை அதிகரித்திருக்கிறது. ஜாக்கெட்டையே நனைக்கும் அளவுக்கு வியர்க் கிறது. அம்மாவின் வியர்வைப் பிரச்னைக்கு ஏதாவது தீர்வு சொல்லுங்களேன்...

- எல்.சுனிதா, சென்னை-18

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன்

வெப்ப மண்டலங்களில் வசிக்கும் நமக்கு வியர்வை என்பது சகஜமான ஒன்றுதான். அதிலும் குறிப்பாக பெண்களுக்கு வீட்டுக்கு வெளியே இருக்கும்போதும், சமையலறையில் வேலை செய்யும்போதும் அதிகம் வியர்வை வெளிப்படுவது இயல்புதான். அடுத்து வர விருக்கும் கோடைக்காலத்தில் இந்தப் பிரச்னை இன்னும் தீவிரமாகும். இரண்டு, மூன்று முறை குளிப்பது இந்தப் பிரச்னைக்கான முதல் தீர்வு.

அவள் பதில்கள் - 35 - உடை நனையும் அளவுக்கு அதீத வியர்வை... தீர்வு உண்டா?

உங்கள் அம்மாவுக்கு வியர்வை மட்டும் இருக்கிறதா, கூடவே இன்ஃபெக்‌ஷனும் இருக் கிறதா என்று பாருங்கள். ஒருவேளை பூஞ்சைத் தொற்றும் இருந்தால், சருமத்தின் மடிப்புகளுக்கு இடையில் டஸ்ட்டிங் பவுடர் உபயோகித்து, அந்தப் பகுதிகளை ஈரமின்றி வைத்துக்கொள்ளச் செய்யலாம். அதீத வியர்வை பிரச்னைக்கு அலுமினியம் குளோரைடு ஹெக்ஸா ஹைட்ரேட் லோஷனை இரவில் தடவிக் கொண்டு தூங்கி விட்டு, மறுநாள் காலை குளித்துவிடலாம். வியர்வையைத் தடுக்கும் ஆன்டிபெர்ஸ்பிரேஷன் லோஷன்களும் கடைகளில் கிடைக்கின்றன. பகல் நேரத்தில் இதைத் தடவிக்கொள்வதன் மூலம் வியர்வை மட்டுப்படும். இவற்றுக்கெல்லாம் கட்டுப்படாத வியர்வை என்றால், சரும மருத்து வரை அணுகுவதே சிறந்தது. கோடையின் உச்சத்தில் உங்கள் அம்மாவை ஃபேன் காற்று அல்லது ஏசி வசதியுள்ள இடங்களில் இருக்கச் செய்வது பிரச்னையை மேலும் தீவிரமாக்காமல் தடுக்கும்.

உடல், மனநலம், உறவுகள், படிப்பு, வேலை என வழக்கமான ஏரியாக்கள் மட்டுமன்றி, யாரிடம் கேட்பது எனத் தயங்க வைக்கிற விஷயங்களுக்கும் தீர்வுகள் தரக் காத்திருக்கிறது அவள் விகடன். கேட்க நினைப்பதைத் தயங்காமல் கேளுங்கள்... அந்தந்தத் துறை நிபுணர்களிடமிருந்து பதில்கள் பெற்றுத் தரக் காத்திருக்கிறோம். உங்கள் கேள்விகளை

`அவள் பதில்கள்', அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை - 600 002 என்ற முகவரிக்கோ,

avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கோ அனுப்பி வைக்கவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism