லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
தன்னம்பிக்கை
Published:Updated:

அவள் பதில்கள்! - 16 - சாப்பாட்டுக்கு பதில் ‘எனர்ஜி பார்’... ஆரோக்கியமான சாய்ஸா?

அவள் பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
அவள் பதில்கள்

சாஹா

சமீபத்தில்தான் எனக்குக் குழந்தை பிறந்தது. தலையில் முடியே இல்லாமல் பிறந்திருக்கிறது குழந்தை. இப்படி முடி இல்லாமல் குழந்தை பிறந்து நான் பார்த்ததில்லை. எதிர்காலத்தில் முடி வளருமா அல்லது வழுக்கையாகவேதான் இருக்குமா?

- ராகிணி மகேஷ், திருச்சி.

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ட்ரைகாலஜிஸ்ட் தலத் சலீம்.

அவள் பதில்கள்! - 16 - சாப்பாட்டுக்கு பதில் ‘எனர்ஜி பார்’... ஆரோக்கியமான சாய்ஸா?

சில குழந்தைகள் கருகருவென அடர்த்தியான தலைமுடியுடன் பிறப் பார்கள். இன்னும் சில குழந்தைகள் மண்டையில் முடியே இல்லாமலும் பிறக்கலாம். இரண்டுமே சகஜம்தான். எப்படியிருப்பினும் இந்த முடியானது உதிர்ந்து மறுபடி வளரும். அதுதான் இயற்கை என்பதால், அது குறித்து பயப்படத் தேவையில்லை.

குழந்தை பிறந்ததும் காணப்படுகிற முடி வளர்ச்சியோடு, அதன் எதிர்கால முடி வளர்ச்சியை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம். குழந்தையின் முடி வளர்ச்சி என்பது கருவிலிருக்கும் போதான நிலை, பிரசவத்துக்குப் பிறகான நிலை என இரண்டு கட்டங்களைக் கொண்டது. பிரசவத்துக்குப் பிறகான குழந்தை

யின் முடி வளர்ச்சியானது 18 மாதங் களில்கூட ஆரம்பிக்கலாம். இரண்டாம் கட்ட வளர்ச்சியானது ஒவ்வொரு குழந்தைக்கும் வேறுபடலாம். ஒரு சில குழந்தைகளுக்கு முதல் கட்ட வளர்ச்சி முடிவதற்கு முன்பே, இரண்டாம்கட்ட வளர்ச்சி ஆரம்பிக்கும். அது வெளிப்படை யாகத் தெரிவதில்லை. இன்னும் சில குழந்தைகளுக்கு முதல்கட்ட முடி வளர்ச்சியானது முற்றிலும் உதிர்ந்து, அதையடுத்து நீண்ட நாள்களுக்குப் பிறகே இரண்டாம்கட்ட வளர்ச்சி ஆரம்பமாகும். இந்த இடைப்பட்ட காலத்தில் சில மாதங்களுக்கோ, சில வருடங்களுக்கோகூட குழந்தையின் மண்டையில் முடியே இல்லாமல் இருப்பதையும் பார்க்கலாம். ஒவ்வொரு குழந்தையும் தனித்தன்மை கொண்டது. தேவையற்ற ஒப்பீடுகளால் உங்கள் நிம்மதியைக் கெடுத்துக்கொள்ளாதீர்கள்.

 தலத் சலீம்,  ஸ்ரீதேவி,   கற்பகம்
தலத் சலீம், ஸ்ரீதேவி, கற்பகம்

உங்கள் குழந்தைக்கு குறிப்பிட்ட மாதங்கள் வரை தாய்ப்பால் கொடுப்பது, அதன் பிறகு மருத்துவர் பரிந்துரைக்கும் சரிவிகித உணவுகளைப் பழக்குவது என ஆரம்பத்திலிருந்தே ஆரோக்கியமாக வளர்க்கப் பாருங்கள். முடி வளர்ச்சியும் ஆரோக்கியமாகவே இருக்கும்.

அவள் பதில்கள்! - 16 - சாப்பாட்டுக்கு பதில் ‘எனர்ஜி பார்’... ஆரோக்கியமான சாய்ஸா?

குழந்தைப் பெற்றுக்கொள்ளத் திட்டமிடுபவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பை ஏற்படுத்துமா?

- கே.ஜெயபாரதி, சென்னை-12

பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர்நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி.

புதிய வகை வைரஸான கோவிட் 19, இனப்பெருக்கச் செயல்பாடுகளில் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதற்கான சரியான, விஞ்ஞானபூர்வ தகவல்கள் நம்மிடம் இல்லை. ஆனால், கோவிட் தொற்றின்போது ஏற்படும் தீவிர காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளுக்குக் கொடுக்கப்படும் மருந்துகள், சிகிச்சைகள் ஆண், பெண் இருவரின் இனப்பெருக்க செயல்பாடுகளையும் பாதிக்கலாம் என்பது மருத்துவர்களின் கணிப்பு. அதனால்தான் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டு, மருத்து வரின் அறிவுரைப்படி குறிப்பிட்ட இடைவெளிக் குப் பிறகு, குழந்தைக்குத் திட்டமிடச் சொல்லியும் தம்பதியருக்கு அறிவுறுத்துகிறோம்.

அவள் பதில்கள்! - 16 - சாப்பாட்டுக்கு பதில் ‘எனர்ஜி பார்’... ஆரோக்கியமான சாய்ஸா?
zoom-zoom

என்னுடைய தோழி எப்போதும் தன் ஹேண்ட்பேகில் எனர்ஜி பார் வைத்திருக்கிறாள். பசிக்கும்போது சாப்பாடு கிடைக்காத வேளைகளில் எனர்ஜி பார் சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறாள். இது சரியானதா? எனர்ஜி பார் என்பது ஆரோக்கிய உணவா?

- ஃபர்ஹானா ஃபாத்திமா, நாகை.

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் கற்பகம்.

`எனர்ஜி பார்' என்பது ஆரோக்கியமானது தான். ஆனால், அதை நீங்கள் எப்போது சாப்பிடுகிறீர்கள் என்பதைப் பொறுத்தது. சாப்பாட்டைத் தவிர்த்துவிட்டு அதற்குப் பதிலாக எனர்ஜி பார் எடுத்துக்கொள்ளக் கூடாது. பொதுவாக, எனர்ஜி பார் என்பது மாலை நேர நொறுக்குத் தீனிக்குப் பதிலாகவோ, வொர்க் அவுட்டுக்குப் பிறகோ சாப்பிடப் பரிந்துரைக்கப்படுவது. நீங்கள் எடுத்துக்கொள்ளும் எனர்ஜி பாரில் என்ன வெல்லாம் சேர்க்கப்பட்டுள்ளன என்று கவனிக்க வேண்டும். கார்போஹைட்ரேட்டின் அளவு எவ்வளவு, எந்த மாதிரியான கார்போஹைட்ரேட் சேர்க்கப்பட்டிருக்கிறது, புரத அளவு, என்ன மாதிரியான புரதம் என்றெல்லாம் பார்க்க வேண்டும். பெரும்பாலும் புரதத் தேவையைப் பூர்த்தி செய்யவே எனர்ஜி பார் பரிந்துரைக்கப்படும். அதனாலேயே வொர்க் அவுட்டுக்கு முன்போ, பிறகோ அதைச் சாப்பிடச் சொல்வோம். சர்க்கரையின் அளவு மிக முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டும். 30 கிராம் அளவுள்ள எனர்ஜி பார் ஒன்றில் 12 முதல் 15 கிராம் சர்க்கரை சேர்க்கப்பட்டிருக்க லாம். அது ஆரோக்கியமானதல்ல. அடுத்து நார்ச்சத்து இருக்கிறதா என்பதும் பார்க்கப்பட வேண்டும். குறைந்தது 2 முதல் 3 கிராம் அளவுக்காவது நார்ச்சத்து இருக்க வேண்டும். ப்ரிசர்வேட்டிவ் ஏதும் சேர்க்கப்பட்டிருக்கக் கூடாது. உங்களுக்குப் பரிச்சயமில்லாத, கேள்வியே படாத பொருள்கள் சேர்க்கப் பட்டிருப்பது தெரிந்தால் அதைத் தவிர்ப்பதே சிறந்தது.

****

உடல், மனநலம், உறவுகள், படிப்பு, வேலை என வழக்கமான ஏரியாக்கள் மட்டுமன்றி, யாரிடம் கேட்பது எனத் தயங்க வைக்கிற விஷயங்களுக்கும் தீர்வுகள் தரக் காத்திருக்கிறது அவள் விகடன். கேட்க நினைப்பதைத் தயங்காமல் கேளுங்கள்... அந்தந்தத் துறை நிபுணர்களிடமிருந்து பதில்கள் பெற்றுத் தரக் காத்திருக்கிறோம். உங்கள் கேள்விகளை

`அவள் பதில்கள்', அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை - 600 002 என்ற முகவரிக்கோ,

avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கோ அனுப்பி வைக்கவும்.