Published:Updated:

அவள் பதில்கள் - 21 - கிளப் ஹவுஸ் மூலம் பிசினஸை வளர்க்க முடியுமா?

அவள் பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
அவள் பதில்கள்

சாஹா

அவள் பதில்கள் - 21 - கிளப் ஹவுஸ் மூலம் பிசினஸை வளர்க்க முடியுமா?

சாஹா

Published:Updated:
அவள் பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
அவள் பதில்கள்

முகம் இளைக்காமல் உடலை மட்டும் இளைக்கச் செய்ய முடியாதா? வெயிட்லாஸ் முயற்சியில் முதலில் முகம் உள்ளே போய், மெலிந்து தோற்றமே மாறிவிடுகிறதே.... சூயிங்கம் மெல்வதால் கன்னங்கள் அழகாகுமா?

- கே. தங்கமலர், கோவை

பதில் சொல்கிறார் ஜெர்மனியைச் சேர்ந்த ஃபிட்னெஸ் எக்ஸ்பர்ட்டும் ஊட்டச்சத்து ஆலோசகருமான கனி செல்வம்.

அவள் பதில்கள் - 21 - கிளப் ஹவுஸ் மூலம் பிசினஸை வளர்க்க முடியுமா?

நம் உடலின் எந்தப் பகுதியில் கொழுப்பு குறைய வேண்டும் என்பதை நாம் தீர்மானிக்க முடியாது. எடைக்குறைப்பு முயற்சியில் இருக்கும்போது நம் உடலின் எந்தப் பகுதியிலுள்ள கொழுப்பை முதலில் வெளியேற்றுவது என்பதை நம் உடல்தான் முடிவு செய்யும். ஒவ்வோர் உடலிலும் `ஸ்டபன் ஃபேட்’ (Stubborn fat) என்கிற கொழுப்பு இருக்கும். சிலருக்கு அது வயிற்றுப் பகுதியில் இருக்கலாம். சிலருக்கு தொடைகளில் இருக்கலாம். இந்தக் கொழுப்பானது அவ்வளவு சீக்கிரத்தில் கரையாது.

அவள் பதில்கள் - 21 - கிளப் ஹவுஸ் மூலம் பிசினஸை வளர்க்க முடியுமா?

உடலின் பிற பகுதிகளிலுள்ள கொழுப்பையெல்லாம் கரைத்த பிறகுதான் `ஸ்டபன் ஃபேட்' குறையும். அதாவது, முகத்திலுள்ள கொழுப்பையும் கரைத்தபிறகு. எனவே இதெல்லாம் உங்கள் மரபியல், உடலமைப்பு, ஒவ்வொரு விஷயத்துக்கும் உடல் எப்படி ரியாக்ட் செய்கிறது போன்ற விஷயங்களைப் பொறுத்தது. நீங்கள் கேட்டதுபோல முகத்திலுள்ள கொழுப்பு குறையாமல் மற்ற பகுதி

களிலுள்ள கொழுப்பை மட்டும் குறைக்க முடியாது. சூயிங்கம் மெல்வதால் கன்னப் பகுதிகளின் தசைகள் வேலை செய்யுமே தவிர, அதற்கும் முக அழகுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

வீட்டிலேயே தையல்மெஷின் வைத்து அக்கம் பக்கத்து வீட்டாருக்கு ஜாக்கெட், சுடிதார் என தைத்துக்கொடுத்துக் கொண்டிருந்தேன். கொரோனாவுக்குப் பிறகு சுத்தமாக வருமானமில்லை. தையல் மெஷினை விற்றுவிடு என்கிறார் கணவர். இத்தனை நாள்களாக சோறுபோட்ட மெஷினை விற்க எனக்கு மனம் வரவில்லை. மெஷினைவைத்து நான் வேறு என்ன பிசினஸ் செய்ய முடியும்?

- எஸ். உஷாராணி, சென்னை - 17

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, அரசு அங்கீகாரம் பெற்ற மாஸ்டர் சணல் தொழில் பயிற்சி யாளர் உமா ராஜ்.

அவள் பதில்கள் - 21 - கிளப் ஹவுஸ் மூலம் பிசினஸை வளர்க்க முடியுமா?

பிழைப்புக்காகத் தையல் வேலையை நம்பிக் கொண்டிருந்த பலரின் வாழ்க்கையும் கொரோனா காலத்தில் இப்படித்தான் மாறியிருக்கிறது. தையல் மெஷினை விற்க வேண்டிய அவசியமில்லை. அதையே உங்கள் எதிர்கால வளர்ச்சிக்கான மூலதனமாக மாற்ற யோசிக்கலாம். அந்த வகையில் இதே மெஷினை வைத்துக்கொண்டு நீங்கள் சணல் பைகள் மற்றும் சணல் பொருள்கள் தைக்கும் பிசினஸில் இறங்கலாம்.

சணல் பைகளை சாதாரண மெஷனில் தைக்க முடியுமா என்று யோசிக்க வேண்டாம். தாராளமாகத் தைக்கலாம். ஊசியை மட்டும் மாற்றினால் போதுமானது. பெரிய முதலீடு தேவையில்லாமல் மெட்டீரியலுக்கு மட்டும் செலவழித்தாலே போதுமானது. சணல் பை தயாரிப்பை பிசினஸாக செய்வது என முடிவெடுத்தால், முதலில் அதற்கான அடிப்படை பயிற்சியைக் கற்றுக்கொள்வது நல்லது. ஏனெனில் பிசினஸ் ஆரம்பித்த பிறகு உங்கள் வாடிக்கையாளர்கள் கேட்கும் மாடல்களில் தைத்துக் கொடுக்க உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

உங்கள் வசதிக்கேற்ப எங்கு வேண்டுமானாலும் அந்தப் பயிற்சியை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அங்கே முறைப்படி எல்லாவற்றையும் கற்றுத் தருகிறார்களா என்பது முக்கியம். உதாரணத்துக்கு பையின் பக்கவாட்டில் வைக்கும் துண்டுப் பகுதியை ‘கெஸட்’ என்று சொல்வோம். அதை எப்படி வைப்பது என்பது அடிப்படையான, அவசியமான விஷயம். பல இடங்களில் அதையே சொல்லித் தருவதில்லை. ஒவ்வொரு பையையும் எப்படித் தைக்க வேண்டும் என முறை இருக்கிறது.

அது தெரிந்து தைத்தால் உங்களால் இந்தத் துறையில் போட்டிகளைத் தாண்டியும் சாதிக்க முடியும். சணல் பைகள் மற்றும் சணல் பொருள்கள் சூழலுக்கு உகந்தவை என்பதால் அவற்றுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. குறிப்பிட்ட சீசனில் மட்டுமன்றி வருடம் முழுக்க உங்களுக்கு ஆர்டர் வரக்கூடிய பிசினஸ் இது.

உங்களுடைய திறமை மற்றும் உழைப்பு, ஏற்றுமதி செய்யும் அளவுக்கு இந்தத் துறையில் உங்களை உயர்த்தும்.

கிளப் ஹவுஸ் மூலம் பிசினஸுக்கான மார்க்கெட்டிங் செய்வது சாத்தியமா?

- மாலினி சந்திரன், தென்காசி

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த சமூக வலைதள பிசினஸ் ஆலோசகர் தரணீதரன்.

அவள் பதில்கள் - 21 - கிளப் ஹவுஸ் மூலம் பிசினஸை வளர்க்க முடியுமா?

நிச்சயம் சாத்தியம். ஆனால், அதற்கு முன் நீங்கள் முக்கியமான சில விஷயங் களை கவனத்தில் கொள்ள வேண்டும். முதலில் நீங்கள் கிளப் ஹவுஸை தொடர்ந்து கவனிக்க வேண்டும். அடுத்து அதில் உங்கள் பிசினஸுக்கு ஏற்ற குழு எது, எவையெல்லாம் உங்கள் பிசினஸ் வளர்ச்சிக்கு உதவும் என அறிந்து அந்தக் குழுக்களில் நீங்கள் பங்கேற்க வேண்டும்.

உதாரணத்துக்கு, எனக்குத் தெரிந்த ஒரு நபர், ஆர்கிடெக்ட்டாக இருக்கிறார். அவர் துறையையும் போட்டோகிராபியையும் இணைத்து தொடர்ந்து கிளப் ஹவுசில் கன்டென்ட் கொடுத்துக்கொண்டே இருந்தார். அவரது விடாமுயற்சியின் மூலம் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் ஆறு ஆர்டர்கள் வரை கிளப் ஹவுஸ் மூலமே பெற்றிருக்கிறார். அதாவது தொடர்ந்து ஒரு கருத்தை தெரிவிப்பதன் மூலம், அதற்கான மதிப்பீட்டை உருவாக்குவதன் மூலம் உங்கள் மீதான நம்பகத் தன்மை அதிகரிக் கும். அது மூலமாக உங்களுக்கு அடை யாளம் கிடைக்கும், அதன் மூலம் உங்களு டைய விற்பனை வாய்ப்பு பெருகும்.அதாவது எந்த கிளப்புகளில் இருப்பது என்ற முடிவு, அதையடுத்து தொடர்ந்து கிளப்புகளில் ஆக்டிவ்வாக இருப்பது, அவற்றில் மற்றவர்கள் பேசுவதை கவனமாகக் கேட்டு, பிறகு கருத்து தெரிவிப்பது இரண்டும் மிக முக்கியம்.

ஓரிடத்தில் உங்களால் கருத்தை முன்வைக்க முடியாவிட்டால் அங்கே வெறும் கவனிப்பாளராக மட்டுமே இருக்கலாம். மூன்றாவது முக்கிய விஷயம் தொடர் முயற்சி. ஒரு விஷயத்தைத் தொடர்ந்து செய்யும்போதுதான் நமக்கான அடையாளம் அங்கே ஏற்படும். அப்படியில்லாத பட்சத்தில் உங்களுக்கான அடையாளத்தை உருவாக்குவது சிரமமாக இருக்கும். உங்கள் துறை சார்ந்த விஷயங்களில் நீங்கள் அப்டேட் ஆகாமல் அதைப் பற்றி மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியாது. எனவே தினமும் அப்டேட்ஸ் அவசியம்.

உங்கள் மீதான நம்பிக்கை என்பது கிளப் ஹவுஸை மட்டும் பொறுத்து அமையப்போவதில்லை. உங்கள் வாடிக்கையாளர்களை ஈர்க்கும்வகையில் கிளப் ஹவுஸில் உங்களுடைய பயோ மிகத் தெளிவாக இருக்க வேண்டும். நீங்கள் என்ன பிசினஸ் செய்கிறீர்கள், எத்தனை வருடங்களாகச் செய்கிறீர்கள், உங்களை எப்படித் தொடர்பு கொள்வது, உங்களுடைய இணையதள முகவரி, சமூகவலைத்தள லிங்க்குகள் போன்றவற்றைத் தெளிவாகக் கொடுப்பதன் மூலம் உங்களைப் பற்றிய தகவல்கள் சரிதானா என அவர்கள் தெரிந்துகொள்ள முடியும். தவிர அதன் மூலம் உங்களுடைய பிசினஸும் வளரும். அங்கிருந்து உங்கள் வாடிக்கையாளர் உங்களுடன் இன்டர் ஆக்ட் செய்ய என்ன செய்ய வேண்டும். அதாவது, உங்களை தொலைபேசியில் அழைக்க வேண்டுமா, அல்லது வெப்சைட்டில் உள்ள கான்டாக்ட் விண்ணப்பத்தை நிரப்பி அனுப்ப வேண்டுமா என்பதை நீங்கள் முடிவுசெய்து அதை நோக்கி உங்கள் பிசினஸை நகர்த்த வேண்டும்.

வெறும் கிளப் ஹவுஸின் மூலம் மட்டுமே உங்கள் பிசினஸை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்ல முடியும். என்னையே அதற்கு உதாரணமாகச் சொல்வேன். என்னுடைய ஆன்லைன் 5 ஏ.எம் வகுப்புகளுக்கு ஒரே பேட்ச்சில் 380 பேர் 777 ரூபாய் கட்டி, சேர்ந்ததற்கு ஒரே காரணம், மேற் குறிப்பிட்ட விஷயங்களை நானும் பின்பற்றியது தான்.

உடல், மனநலம், உறவுகள், படிப்பு, வேலை என வழக்கமான ஏரியாக்கள் மட்டுமன்றி, யாரிடம் கேட்பது எனத் தயங்க வைக்கிற விஷயங்களுக்கும் தீர்வுகள் தரக் காத்திருக்கிறது அவள் விகடன். கேட்க நினைப்பதைத் தயங்காமல் கேளுங்கள்... அந்தந்தத் துறை நிபுணர்களிடமிருந்து பதில்கள் பெற்றுத் தரக் காத்திருக்கிறோம். உங்கள் கேள்விகளை

`அவள் பதில்கள்', அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை - 600 002 என்ற முகவரிக்கோ,

avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கோ அனுப்பி வைக்கவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism