Published:Updated:

அவள் பதில்கள் - 36 - கணவருடைய ஹெபடைட்டிஸ் பி தொற்று, எனக்கும் பரவுமா?

அவள் பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
அவள் பதில்கள்

சமையலோ, கிராஃப்ட்டோ, வேறு எதுவுமோ... உங்கள் திறமை ஒருபக்கம் இருந்தாலும் அதில் உங்கள் விருப்பம் எந்தளவுக்கு என்பதும் முக்கியம்.

அவள் பதில்கள் - 36 - கணவருடைய ஹெபடைட்டிஸ் பி தொற்று, எனக்கும் பரவுமா?

சமையலோ, கிராஃப்ட்டோ, வேறு எதுவுமோ... உங்கள் திறமை ஒருபக்கம் இருந்தாலும் அதில் உங்கள் விருப்பம் எந்தளவுக்கு என்பதும் முக்கியம்.

Published:Updated:
அவள் பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
அவள் பதில்கள்

கணவர் எப்போதாவது மது அருந்துவார். அடிக்கடி ரத்த தானம் செய்வார். சமீபத்தில் கொடுத்தபோது அவருடைய ரத்தத்தில் `ஹெபடைட்டிஸ் பி' வைரஸ் இருப்பதாகவும், பரிசோதனை செய்து கொள்ளும் படியும் ஆய்வகத்தில் கூறினார்கள். பரிசோதனையில் அது உறுதியானது. எனக்கும் அது பரவுமா? கணவரின் தொற்று காரணமாக நான் கர்ப்பம் தரிப்பதில் ஏதேனும் சிக்கல் ஏற்படுமா?

- இப்ரா யூசுப், திருவண்ணாமலை

அவள் பதில்கள் - 36 - கணவருடைய ஹெபடைட்டிஸ் பி தொற்று, எனக்கும் பரவுமா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் பூங்குழலி.

`ஹெபடைட்டிஸ் பி' என்பது ஒருவகையான வைரஸ் தொற்று. இது கல்லீரலை பாதிக்கக்கூடியது. பரிசோதனையில் உங்கள் கணவருக்குத் தொற்று உறுதியானதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். அந்த வைரஸ் அளவு எவ்வளவு இருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டு கல்லீரல் மருத்துவரையோ அல்லது தொற்றுநோய் சிகிச்சை மருத்துவரையோ அணுக வேண்டும். இந்தத் தொற்றுக்கான மருந்துகள் நிறைய உள்ளன. முறையான மருத்துவ ஆலோ சனையைப் பின்பற்றுவதன் மூலம் தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும். சரியான சிகிச்சை மேற் கொள்ளத் தவறினால் இது சிலருக்குத் தீவிர கல்லீரல் பாதிப்பையும், அரிதாகச் சிலருக்கு கல்லீரல் புற்றுநோயையும் ஏற்படுத்தலாம்.

ஹெபடைட்டிஸ் வைரஸும், ஹெச்ஐவி போன்றே பரவக் கூடியது. தாம்பத்திய உறவின் மூலமும், சரியாகச் சுத்திகரிக்கப்படாத ஊசி களாலும், தாயிடமிருந்து கருவிலுள்ள குழந்தைக்கும் பரவக்கூடும். எனவே உங்களுக்கும் பரிசோதனை செய்து தொற்று இருக்கிறதா என்று பாருங்கள்.ஹெபடைட்டிஸ் வைரஸ் தொற்று முழுமையாகத் தவிர்க்கப் படக் கூடியது. அதற்கென தடுப் பூசிகள் இருக்கின்றன.

அவள் பதில்கள் - 36 - கணவருடைய ஹெபடைட்டிஸ் பி தொற்று, எனக்கும் பரவுமா?

உங்களுக்குத் தொற்று இல்லை என உறுதியானால் நீங்கள் ஆரம்ப கால கட்டத்தில் இருக்கிறீர்களா என்று பார்த்துவிட்டு, தடுப்பூசிகளை எடுத்துக்கொள்ளலாம். ஆணுறை உபயோகித்து வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகாமலும் கருவுறாமலும் தடுத்துக்கொள்ளலாம். ஒருவேளை உங்களுக்குத் தொற்று உறுதியானால் நீங்களும் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். அதன் மூலம் தொற்று தீவிரமடையாமலும், பிறக்கும் குழந்தை பாதிக்கப்படாமலும் பாது காக்கலாம்.

நான் நன்றாக சமைப்பேன். நிறைய கைவினைக் கலைகள் செய்யத் தெரியும். இவற்றுக்காக யூடியூப் சேனல் தொடங்கினால் கைநிறைய காசு பார்க்கலாம் என்கிறார்கள் சிலர். நான் துணிந்து இறங்கலாமா?

- பி. அஸ்வினி, திருச்சி

அவள் பதில்கள் - 36 - கணவருடைய ஹெபடைட்டிஸ் பி தொற்று, எனக்கும் பரவுமா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சமூக வலைதள பிசினஸ் ஆலோசகர் தரணீதரன்

சமையல், கிராஃப்ட் அல்லது Vlog என்ற பெயரில் உங்கள் வாழ்க்கையின் அன்றாட நிகழ்வுகள், நீங்கள் இந்தச் சமூகத்தைப் பார்க்கும் விதம் ஆகியவற்றை உள்ளடக்கிய கன்டென்ட் என எதை வைத்து வேண்டு மானாலும் யூடியூப் சேனல் ஆரம்பிக்கலாம். கொரோனா காலத்தில் தமிழ்ச் சமூகத்துடன் தொடர்புள்ள கன்டென்ட்டுகளுக்கான தேவை அதிகரித்திருக்கிறது. தங்களை மாதிரியே உள்ள மக்களுடன் கனெக்ட் ஆகவே மக்கள் விரும்புகிறார்கள். அதாவது இயல்பாகப் பேசக்கூடியவர்கள், மனதிலிருந்து பேசக் கூடியவர்கள், தன்னைப் போலவே பேசக்கூடியவர்களுடன் மக்கள் எளிதில் ஒன்றி விடுகிறார்கள்.

யூடியூப் சேனல் தொடங்கும் முன் ஒரு விஷயத்தில் நீங்கள் தெளிவாக இருக்க வேண்டும். சமையலோ, கிராஃப்ட்டோ, வேறு எதுவுமோ... உங்கள் திறமை ஒருபக்கம் இருந்தாலும் அதில் உங்கள் விருப்பம் எந்தளவுக்கு என்பதும் முக்கியம். முதல் வீடியோவுக்கு மட்டுமல்ல, அடுத்த 200 வீடியோக்களுக்கு நீங்கள் ஐடியாக்களோடு தயாராக இருந்தால் மட்டுமே சேனல் தொடங்குங்கள். அந்த 200 வீடியோக்களில் ஏதேனும் ஒன்றுதான் முதலில் க்ளிக் ஆகும். ஹிட் அடிக்கிற அந்த வீடியோ வந்த பிறகுதான் உங்களுடைய மற்ற வீடியோக்களையும் மக்கள் பார்ப்பார்கள். உங்கள் சேனல் வெற்றிபெறும்.

நீங்கள் செய்கிற விஷயம் உங்களுக்கு போரடிக்கக்கூடாது. உங்களுக்கே போரடித்தால் பார்வையாளர்களை உள்ளே வரவழைக்க முடியாது. உங்கள் விருப்பத்தோடு மக்களுக்கு என்ன தேவை, என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதையும் தெரிந்துகொண்டு இறங்குங்கள். இந்த விஷயங்களைச் சரியாகச் செய்துவிட்டால் நீங்களும் மைக்ரோ இன்ஃப்ளுயென்சராக மாற முடியும். எத்தனை யூடியூபர்கள் இருந்தாலும் உங்களுடைய தனித்தன்மை நிச்சயம் உங்களை வெற்றிபெறச் செய்யும். வாழ்த்துகள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism