Published:Updated:

அவள் பதில்கள் 46 - முகத்துக்கு சோப் உபயோகிக்கக்கூடாது என்பது உண்மையா?

முகத்துக்கு சோப்
பிரீமியம் ஸ்டோரி
முகத்துக்கு சோப்

சாஹா

அவள் பதில்கள் 46 - முகத்துக்கு சோப் உபயோகிக்கக்கூடாது என்பது உண்மையா?

சாஹா

Published:Updated:
முகத்துக்கு சோப்
பிரீமியம் ஸ்டோரி
முகத்துக்கு சோப்

இரவு அதிக நேரம் படிக்கும் என் மகள், காலையில் எழுந்துகொள்ள சிரமப்படுகிறாள். அவசர அவசரமாகப் பள்ளிக்குச் செல்கிறாள். அதிகாலையில் எழுந்து படிக்கலாமே என்றால், இரவு நேரத்தில் படித்தால்தான் பாடங்களை நினைவில் வைத்துக்கொள்ள முடிகிறது என்கிறாள். இரவு அதிக நேரம் விழித்திருப்பது நல்லதல்ல; உடல்நலம் பாதிக்கும் என்று தெரிந்தாலும் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு என்ன? - கே.ஜான்சி, நெல்லை

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, பொது மருத்துவர் அருணாசலம்

அருணாசலம்
அருணாசலம்

உங்கள் மகள் இதை எப்படி எடுத்துக்கொள்கிறார் என்பதைப் பொறுத்தது இது. இரவில் கண்விழித்துப் படிப்பதுதான் அவருக்கு சௌகர்யமாக இருக்கிறது என்ற பட்சத்தில் அதை அப்படியே அனுமதிப்பது தான் நல்லது. இரவில் நீண்ட நேரம் கண்விழித்துப் படித்துவிட்டு, மறுநாள் காலை பள்ளிக்குச் சென்று புதிய பாடங்களைப் படிப்பதில் அவருக்கு எந்தச் சிரமமும் இருக்கக்கூடாது. எனவே, இதை உங்கள் மகளின் விருப்பத்துக்கே விட்டுவிடுவதுதான் நல்லது.

அவள் பதில்கள் 46 - முகத்துக்கு சோப் உபயோகிக்கக்கூடாது என்பது உண்மையா?

ஒருசிலருக்கு இந்த ஸ்டைல் பழகிவிடும். எனவே, சில நாள்களுக்கு உங்கள் மகளின் போக்கி லேயே விட்டுப் பாருங்கள். மகளிடம் பொறுமை யாகப் பேசியும் பாருங்கள். இரவில் கண் விழித்துப் பாடப் புத்தகங்களைப் படிப்பது மட்டுமே முக்கியமல்ல. அதற்கு முன் வகுப்பறையில் ஆசிரியர் பாடங்கள் நடத்தும்போது அவற்றை உள்வாங்கிக் கொள்ள வேண்டியது அவசியம். அப்படி உள்வாங்குவதற்கு இரவில் கண் விழிக்கும் பழக்கம் தடையாக இருக்கக்கூடாது என்று புரிய வையுங்கள். அதையும் மீறி உங்கள் மகள் தன்னால் இதை பேலன்ஸ் செய்ய முடியும் என்று சொன்னால் அப்படியே விட்டுவிடுங்கள்.

உங்கள் மகள் இந்த விஷயத்தில் பிடி வாதமாக இருந்தால் ஒரு கால அவகாசம் கொடுங்கள். காலாண்டுத் தேர்வு வரையோ, அரையாண்டுத் தேர்வு வரையோ அவர் போக்கில் விட்டுப் பார்த்து அதன்பிறகு ரிசல்ட்டை பார்த்துவிட்டு, தேவைப்பட்டால் மாற்றிக்கொள்ளச் சொல்லலாம்.

முகத்துக்கு ஃபேஸ்வாஷ்தான் உபயோகிக்க வேண்டும், சோப் போடக்கூடாது என்கிறாள் என் தோழி... அது உண்மையா?

- ஷாலினி சாமுவேல், திருச்சி

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த அழகுக்கலை நிபுணர் வசுந்தரா

வசுந்தரா
வசுந்தரா

நம்முடைய சருமம் அமிலத்தன்மை கொண்டது. அமிலத்தன்மையின் அளவு 4.5 முதல் 5.5 வரை இருக்கும். நம் உடல் வெளியிடும் எண்ணெய்ப் பசையை சீபம் என்று சொல்வோம். அதைச் சுத்தப் படுத்துவதற்கு காரத்தன்மையுள்ள ஒன்று தேவைப் படுகிறது. அதுதான் சோப். அதாவது எண்ணெய் என்கிற அமிலத்தைச் சுத்தப்படுத்த சோப் என்கிற காரத்தை நாம் பயன்படுத்துகிறோம். உடலின் சருமத்தைச் சுத்தப்படுத்த அது போதுமானது. ஆனால், முகத்திலுள்ள சருமம் மிகவும் மென்மை யானது. அதனால் முகத்துக்கு சோப் பயன்படுத்தும் போது முகச் சருமத்திலுள்ள எண்ணெய்ப் பசை முழுவதையும் சோப் நீக்கிவிடும். அதன் காரணமாக முகம் வறண்டும், சுருக்கங்களுடனும் காட்சி யளிக்க வாய்ப்புகள் உண்டு. இது வயதாக, ஆகவே வெளியில் தெரியும்.

அதனால்தான் முகத்துக்கு ஃபேஸ் வாஷ் பயன்படுத்தச் சொல்லி அறிவுறுத்தப் படுகிறது. அதில் சோப் அளவுக்கு காரத் தன்மை இருக்காது. சருமத்தின் ஆழம்வரை ஊடுருவி அழுக்குகளை வெளியே கொண்டு வரும். ஆனாலும் சிறிதளவு எண்ணெய்ப் பசையை பேலன்ஸ் செய்துகொண்டே இருக்கும். அதாவது முகத்திலுள்ள ஒட்டுமொத்த எண்ணெய்ப் பசை யையும் அது நீக்குவதில்லை. இதற்காகவே ஃபேஸ் வாஷ் பிரத்யேகமாகத் தயாரிக்கப்படுகிறது.

அவள் பதில்கள் 46 - முகத்துக்கு சோப் உபயோகிக்கக்கூடாது என்பது உண்மையா?

பிரைட்டனிங் ஃபேஸ்வாஷ், பருக்கள் உள்ளவர் களுக்கான ஃபேஸ்வாஷ், ஆன்டி ஏஜிங் ஃபேஸ் வாஷ் என ஃபேஸ்வாஷில் நிறைய வகைகள் உள்ளன. அவரவர் சருமத்துக் கேற்றதைத் தேர்ந்தெடுக்கலாம்.

பொதுவாகச் சொல்வதென்றால் சோப்பைவிட ஃபேஸ்வாஷ் நிச்சயம் சிறந்ததுதான். அதே நேரம், பிரத்யேக சோப்புகளும் உள்ளன. அதிகபட்ச சரும வறட்சி உள்ளவர்களுக்கு மாய்ஸ்ச்சரைசர் அளவு அதிகமாக உள்ள சோப், மங்கு பாதிப்பு உள்ளவர் களுக்கு அதற்கான பிரத்யேக சோப் மாதிரி நிறைய உள்ளன. இப்படி அவரவர் பிரச்னைக்கேற்ப கிடைக்கும் பிரத்யேக சோப்பை முகத்துக்குப் பயன் படுத்தலாம். ஆனால், ஏதோ ஒரு சோப்பை முகத்துக்குப் பயன்படுத்த வேண்டாம். அதற்கு பதில் ஃபேஸ் வாஷே சிறந்தது.

உடல், மனநலம், உறவுகள், படிப்பு, வேலை என வழக்கமான ஏரியாக்கள் மட்டுமன்றி, யாரிடம் கேட்பது எனத் தயங்க வைக்கிற விஷயங்களுக்கும் தீர்வுகள் தரக் காத்திருக்கிறது அவள் விகடன். கேட்க நினைப்பதைத் தயங்காமல் கேளுங்கள்... அந்தந்தத் துறை நிபுணர்களிடமிருந்து பதில்கள் பெற்றுத் தரக் காத்திருக்கிறோம். உங்கள் கேள்விகளை

`அவள் பதில்கள்', அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை - 600 002 என்ற முகவரிக்கோ,

avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கோ அனுப்பி வைக்கவும்.