Published:Updated:

அவள் பதில்கள் - 47 - நடைப்பயிற்சிக்கு நேரம் முக்கியமா?

சாதம்
பிரீமியம் ஸ்டோரி
சாதம்

- சாஹா

அவள் பதில்கள் - 47 - நடைப்பயிற்சிக்கு நேரம் முக்கியமா?

- சாஹா

Published:Updated:
சாதம்
பிரீமியம் ஸ்டோரி
சாதம்

நான் தினமும் மூன்று வேளைகளுக்கும் சாதம்தான் சாப்பிடுகிறேன். இப்படிச் சாப்பிட்டால் நோய் வரும் என பயமுறுத்துகிறார்கள். அது எந்த அளவுக்கு உண்மை?

- வே.தேவஜோதி, மதுரை-17

அவள் பதில்கள் - 47 - நடைப்பயிற்சிக்கு நேரம் முக்கியமா?

பதில் சொல்கிறார் ஜெர்மனியைச் சேர்ந்த ஃபிட்னஸ் எக்ஸ்பர்ட்டும் ஊட்டச்சத்து ஆலோசகருமான கனி செல்வம்.

நீங்கள் சாதம் என்று குறிப்பிட்டிருப்பது, காய்கறிகளுடன் கூடிய சாதம் என்கிற கணக்கில் எடுத்துக்கொண்டே இங்கே பதில் சொல்கிறேன். அதாவது, உணவு என்பது அனைத்துவிதமான சத்துகளும் குறிப்பிட்ட அளவில் உடலில் சேரும் வகையில் இருக்க வேண்டும். அப்படிப் பார்க்கும்போது, ஒன்றி ரண்டு காய்கறிகள், சாம்பார்/காரக் குழம்பு, ரசம், மோர் என்று மூன்று வேளைகளுக்கும் சாப்பிடுகிறீர்கள் என்றால், அதனால் எந்தப் பிரச்னையும் இல்லை. இது சரி விகிதமான உணவே. இதனால், நோய்கள் வரும் என்று பயப்படத் தேவையில்லை. அதேசமயம், அரிசி சாதத்தை மட்டுமே அதிகமாக சாப்பிட்டால், அது கார்போஹைட்ரேட்டின் அளவை அதிகரித்துவிடும். ஒருவேளை நீங்கள் எந்தவித உடலுழைப்பும் இல்லாத நபராக இருந்து, தினமும் அரிசி சாதம் உள்ளிட்ட கார்போஹைட்ரேட் உணவு களை அதிகமாக எடுத்துக்கொண்டால், அது உங்கள் உடல் எடையை அதிகரிக்கச் செய்வதோடு, நீரிழிவு உள்ளிட்ட நோய்களுக்கும் வழிவகுக்கும். எனவே, அரிசி சாதத்துடன் (கார்போஹைட்ரேட்), புரதம், கொழுப்பு உள்ளிட்டவையும் போதுமான அளவு இருக்கும்படி சரிவிகித உணவாகச் சாப்பிட வேண்டியது அவசியம். அப்போதுதான் நோய்கள் வராமல் தவிர்க்க முடியும்.

அவள் பதில்கள் - 47 - நடைப்பயிற்சிக்கு நேரம் முக்கியமா?

வெள்ளையாக பட்டைத் தீட்டப்பட்ட அரிசியைத் தான் தற்போது நாம் பயன்படுத்துகிறோம். இதற்குப் பதில் சிறுதானிய அரிசி வகைகள், பட்டைத் தீட்டப்படாத பழுப்பரிசி, கைகுத்தல் அரிசி போன்ற வற்றைச் சாப்பிடுவது மிகச் சிறந்தது. அவற்றில் நார்ச்சத்து அதிகமிருக்கும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டில் வைக்கும். அடிக்கடி பசியெடுப்பதையும் தடுக்கும்.

நான் தினமும் நடைப்பயிற்சி செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் நடைப்பயிற்சி செய்ய முடியவில்லை. நேரம் கிடைக்கும்போது நடைப்பயிற்சிக்குச் செல்லலாமா? எவ்வளவு நேரம், எப்படி நடக்க வேண்டும்?

- கே.ரமணி, செங்கல்பட்டு

பதில் சொல்கிறார் இங்கிலாந்தைச் சேர்ந்த குடும்ப நல மருத்துவர் கே.பாஸ்கர்.

அவள் பதில்கள் - 47 - நடைப்பயிற்சிக்கு நேரம் முக்கியமா?

சாப்பிட்ட உடனே நடைப்பயிற்சி செய்யக் கூடாது, அவ்வளவுதான். மற்றபடி சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து எப்போது வேண்டு மானாலும் நடைப்பயிற்சி செய்யலாம். வாரம் ஐந்து நாள்களுக்காவது தினமும் 30 நிமிடங்

களுக்கு குறையாமல் நடைப்பயிற்சி செய்யலாம். ஒய்யார நடையாக இல்லாமல் சற்று வேகமாக நடக்க வேண்டும். அது வயதைப் பொறுத்தது என்று எடுத்துக் கொள்ளலாம். தினமும் 4 முதல் 5 கிலோமீட்டர் வரை நடக்கலாம். உங்கள் வீட்டின் அருகில் பார்க் இருந்தால் அதில் நடக்கலாம். அதிலேயே தூரம் குறிப்பிடப்பட்டிருக்கும் என்பதால் நீங்கள் எவ்வளவு தூரம் நடக்கிறீர்கள் என்று கணக்கிட முடியும். பார்க்கில் நடைப்பயிற்சி செய்ய முடியாதவர்கள், வீட்டில் டிரெட்மில் இருந்தால் அதில் நடக்கலாம். அதிகாலையில் திறந்தவெளிக் காற்றை சுவாசித்தபடி நடப்பது, உடலுக்கு அதிக ஆக்ஸிஜனை தரும். அந்த நேரத்தில் நடப்பது ஆகச் சிறந்தது. ஆனாலும் அது முடியாதவர்கள் ஏதோ ஒரு நேரம் நடக்கலாம். எந்த நேரம், எந்த இடமாக இருந்தாலும் உங்களுடைய பாதுகாப்பு முக்கியம். எனவே, உறுதிப்படுத்திக் கொண்டு நடைப்பயிற்சியை மேற்கொள்வது முக்கியம்.

அவள் பதில்கள் - 47 - நடைப்பயிற்சிக்கு நேரம் முக்கியமா?

நான்தான் வீட்டுவேலைகள் செய்வது, தோட்டத்தைச் சுத்தப் படுத்துவது, மாடிப்படிகளில் ஏறி இறங்கி வேலை பார்ப்பது என ஏதேனும் ஒன்று செய்கிறேனே... அது தவிர்த்து தனியே நடைப் பயிற்சி தேவையா என்று சிலர் கேட்கலாம். தினமும் குறிப்பிட்ட மணி நேரம் நடைப்பயிற்சியோ, உடற்பயிற்சியோ செய்வது என்பது ஓர் ஒழுங்கு. தொடர்ந்து செய்யும்போது அது தினசரி பழக்கமாக மாறும். மற்ற வேலைகளை நீங்கள் எவ்வளவு தீவிரமாக, எத்தனை நிமிடங்கள் செய்கிறீர்கள் என்பது தெரியாது. அதனால்தான் தினமும் உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

உடல், மனநலம், உறவுகள், படிப்பு, வேலை என வழக்கமான ஏரியாக்கள் மட்டுமன்றி, யாரிடம் கேட்பது எனத் தயங்க வைக்கிற விஷயங்களுக்கும் தீர்வுகள் தரக் காத்திருக்கிறது அவள் விகடன். கேட்க நினைப்பதைத் தயங்காமல் கேளுங்கள்... அந்தந்தத் துறை நிபுணர்களிடமிருந்து பதில்கள் பெற்றுத் தரக் காத்திருக்கிறோம். உங்கள் கேள்விகளை

`அவள் பதில்கள்', அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை - 600 002 என்ற முகவரிக்கோ,

avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கோ அனுப்பி வைக்கவும்.