Published:Updated:

அவள் பதில்கள் - 48: வெள்ளைச் சர்க்கரைக்கு மாற்றாகுமா கருப்பட்டி?

கருப்பட்டி
பிரீமியம் ஸ்டோரி
கருப்பட்டி

- சாஹா

அவள் பதில்கள் - 48: வெள்ளைச் சர்க்கரைக்கு மாற்றாகுமா கருப்பட்டி?

- சாஹா

Published:Updated:
கருப்பட்டி
பிரீமியம் ஸ்டோரி
கருப்பட்டி

பொருள்கள் வாங்கும்போது சில கடைகளில் பொருளில் குறித்திருக்கும் விலைக்கு பில் போடுகிறார்கள். சில கடைகளில் ஜி.எஸ்.டி வரியைச் சேர்த்து கூடுதல் தொகைக்கும் சேர்த்து பில் போடுகிறார்கள். இதில் எது சரி?

- சந்திரிகா ராமச்சந்திரன், நெய்வேலி

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ஆடிட்டர் லதா ரகுநாதன்

நம்மிடமிருந்து பல விதங் களில் வரிகள் வசூலிக்கப் படுகின்றன. பொதுவாக இவற்றை இரண்டாக வகைப் படுத்தலாம். நேரடி வரி ( Direct Tax) மற்றும் மறைமுக வரி (Indirect Tax). நேரடி வரியின் கீழ் வருமான வரி வருகிறது. இது வருமானத்தில் நாம் செலுத்த வேண்டிய வரி. இதை நம் சம்பளத்திலிருந்து பிடித்து அரசாங்கத்துக்கு நிறுவனம் கட்டி விடுகிறது. மறைமுக வரியான சரக்கு மற்றும் சேவை வரியான ஜி.எஸ்.டி (Goods and Services Tax)-ஐ நாம் வாங்கும் பொருள்களை விற்கும் கடைகள் / நிறுவனங்கள் நம்மிடம் பிடித்து மத்திய அரசுக்குக் கட்டி விடுகின்றன.

அவள் பதில்கள் - 48: வெள்ளைச் சர்க்கரைக்கு மாற்றாகுமா கருப்பட்டி?

இந்தியாவில் ஏகப்பட்ட வரிகள் இருந்தன. குறிப்பாக, உற்பத்தி வரி, விற்பனை, சேவை வரி, மதிப்புக் கூட்டு வரி (வாட்) என ஏகப்பட்ட மறைமுக வரிகள் இருந்தன. இவற்றை எல்லாம் ஒன்றிணைத்து ஜி.எஸ்.டி வரி கொண்டு வரப் பட்டுள்ளது. எந்தெந்தப் பொருள் அல்லது சேவை மீது எத்தனை சதவிகிதம் ஜி.எஸ்.டி விதிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஜி.எஸ்.டியில் மாநில ஜி.எஸ்.டி (SGST) மற்றும் மத்திய ஜி.எஸ்.டி (CGST) என இரண்டு இருக்கும். ஜி.எஸ்.டி. வரியில் பாதி மாநில அரசுக்கும் பாதி மத்திய அரசுக்கும் செல்லும். உதாரணத்துக்கு நீங்கள் கேக் வாங்குவதாக வைத்துக்கொள்வோம். சாக்லேட் கேக் ஒரு கிலோ ரூ.400. இதற்கு ஜி.எஸ்.டி.வரி 18% (SGST 9%, CGST 9%) என்றால் பில் 400+36+36 = ரூ.472 ஆகும். ஒரு கடையில் வாடிக்கையாளரைக் கவர வேண்டும் என்பதற்காக ஒரு கிலோ ரூ.400 (ஜி.எஸ்.டி வரி தனி) என்று விலை எழுதி ஒட்டியிருப்பார். இதில், ‘ஜி.எஸ்.டி வரி தனி’ என்பது மிகச் சிறிய எழுத்தில் இருக்கும். இன்னொரு கடையில் ரூ.472 (வரியுடன்) என ஒட்டி இருப்பார். இதை தவறு என்று சொல்ல முடியாது. வாடிக்கையாளர்கள்தான் உஷாராக இருக்க வேண்டும். ஹோட்டல்களில் உணவுப் பண்டங்களின் விலையை போர்டில் வரி இல்லாமல் குறிப்பிட்டிருப்பார்கள்.

 லதா ரகுநாதன் -  அம்பிகா சேகர்
லதா ரகுநாதன் - அம்பிகா சேகர்

என் மாமியாருக்கு வயது 76. நீரிழிவு உள்ளது. இனிப்பு சேர்க்காமல் காபி, டீ குடிக்க மறுக்கிறார். அவருக்கு வெள்ளைச் சர்க்கரைக்கு பதில் கருப்பட்டி சேர்த்துக் கொடுக்கலாமா? அது நீரிழிவுக்காரர்களுக்கு ஏற்றதா? கருப்பட்டியை எப்படிப் பயன்படுத்த வேண்டும்?

- சி.அகல்யா, சென்னை-111

பதில் சொல்கிறார், சென் னையைச் சேர்ந்த ஊட்டச் சத்து ஆலோசகர் அம்பிகா சேகர்.

வெள்ளைச் சர்க்கரை யோடு ஒப்பிடுகையில் கருப்பட்டி சிறந்தது என்பதில் மாற்றுக் கருத் தில்லை. ஆனால், அது நீரிழிவுக்காரர்களுக்கானதா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். நீரிழிவு இல்லாதவர்கள், வெள்ளைச் சர்க்கரைக்கு பதில் கருப் பட்டியைப் பயன்படுத்த லாம். கருப்பட்டி என்பது பனைமரத்திலிருந்து எடுக்கப்படும் பதநீரைக் காய்ச்சித் தயாரிக்கப்படுவது. அதில் கெமிக்கல்கள் சேர்க்கப்படுவதில்லை என்பதால் ஆரோக்கியமானது. மற்றபடி நீரிழிவு நோயாளிகளுக்கு வெள்ளைச் சர்க்கரை, நாட்டுச் சர்க்கரை, கருப்பட்டி என எதுவுமே ஆகாது என்பது தான் உண்மை.

அவள் பதில்கள் - 48: வெள்ளைச் சர்க்கரைக்கு மாற்றாகுமா கருப்பட்டி?

கருப்பட்டியை உடைத்து தேவையான நீர் சேர்த்து பாகுபோலக் காய்ச்சி, வடிகட்டிக் கொள்ளவும். அதை ஆறவைத்து காபி, டீ உள்ளிட்ட வற்றில் வெள்ளைச் சர்க்கரைக்கு மாற்றாகப் பயன் படுத்தலாம். அப்படியே நேரடியாக உபயோகிக்கும் கருப்பட்டித்தூளும் இப்போது விற்பனை செய்யப் படுகிறது. ஆனால், அதன் தரம் தெரியாமல் பயன் படுத்துவது சரியானதல்ல.

உடல், மனநலம், உறவுகள், படிப்பு, வேலை என வழக்கமான ஏரியாக்கள் மட்டுமன்றி, யாரிடம் கேட்பது எனத் தயங்க வைக்கிற விஷயங்களுக்கும் தீர்வுகள் தரக் காத்திருக்கிறது அவள் விகடன். கேட்க நினைப்பதைத் தயங்காமல் கேளுங்கள்... அந்தந்தத் துறை நிபுணர்களிடமிருந்து பதில்கள் பெற்றுத் தரக் காத்திருக்கிறோம். உங்கள் கேள்விகளை

`அவள் பதில்கள்', அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை - 600 002 என்ற முகவரிக்கோ,

avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கோ அனுப்பி வைக்கவும்.