லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

அவள் பதில்கள் - 50 - மழைநாள்களில் வீட்டின் ஈர வாடையைப் போக்க என்ன வழி?

சீயக்காய்
பிரீமியம் ஸ்டோரி
News
சீயக்காய்

சாஹா

தலைக்கு சீயக்காய் தேய்த்துக் குளிக்கும்போது கண்களுக்குள் அதன் துகள்கள் சென்று கண்களில் எரிச்சல் ஏற்படுவது ஆபத்தானதா? இப்படி நிகழும்போது என்ன செய்ய வேண்டும்? - தா.நதிரா, புதுச்சேரி

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கண் மருத்துவர் விஜய் ஷங்கர்

விஜய் ஷங்கர்
விஜய் ஷங்கர்

சீயக்காய், சோப் உபயோகித்துத் தலைக்குக் குளிக்கும்போது அதன் துகள்கள் கண்களுக்குள் சென்று விட்டால், கண்கள் சிவந்துவிடும். கண்களில் எரிச்சலும் இருக்கும். இப்படியானால் உடனே கண் களை சுத்தமான தண்ணீரால் நன்கு கழுவ வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் கண்களுக்குள் சென்ற துகள்கள் வெளியே வந்து விடும். எரிச்சலும் குறையும்.

அவள் பதில்கள் - 50 - மழைநாள்களில் வீட்டின் ஈர வாடையைப் போக்க என்ன வழி?

கண்களை நன்கு கழுவிய பிறகும் எரிச்சல் தொடர்ந்தாலோ, உறுத்துவது போன்று உணர்ந்தாலோ உடனே கண் மருத்துவரை சந்திப் பது பாதுகாப்பானது. கண்களைப் பரிசோதித்துவிட்டு, ஒருவேளை கண்களுக்குள் அந்நியப் பொருள் கள் இருந்தால் அவர்களே எடுத்து விட்டு, கண்களுக்கான சொட்டு மருந்தையும் பரிந்துரைப்பார்கள்.

மழைக்காலத்தில் வீடு முழுவதும் வீசும் ஈரநைப்பான வாடையையும், துணிகளில் வீசும் வாடையையும் போக்க ஏதேனும் எளிய வழிகள் உண்டா? - கே.கல்பனா, சென்னை-40

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த அரோமாதெரபிஸ்ட் கீதா அஷோக்

கீதா அஷோக்
கீதா அஷோக்

மழை மற்றும் பனிக்காலங் களில் வீட்டின் ஈரப்பதத்தை யும் அது ஏற்படுத்தும் கெட்ட வாடையையும் போக்க தினமும் சாம்பிராணிப் புகை போடலாம். அது ஈரப்பதத்தை யும் எடுத்துவிடும், வாடை யையும் நீக்கும். பச்சைக் கற்பூரத்தை நீரில் கரைத்து, வீடு முழுக்க தெளித்து விட்டாலும் ஈர வாடை போகும்.

`ஏர் ஹ்யுமிடிஃபையர்' (Air Humidifier) என்ற கருவி கடைகளில் கிடைக்கிறது. இவற்றை வாங்கி வீட்டின் சுவர்களில் பொருத்திவிடலாம். அது பம்ப் ஆகி, ஒருவித நறுமணத்தை வெளியேற்றும். லெமன்கிராஸ், லேவண்டர், ரோஸ், ஆரஞ்சு போன்ற அரோமா ஆயில்களை அதனுள் சேர்த்துவிட்டால், குறிப்பிட்ட நிமிடங்களுக் கொரு முறை பம்ப் செய்யப்பட்டு வீடு முழுவதும் நறுமணம் வீசும். லெமன்கிராஸ், லேவண்டர் போன்ற ஆயில்கள் நம் மன நிலையையும் மாற்றி, புத்துணர்வுடன் இருக்கவைக்கும்.

இந்தக் கருவியை வாங்கிப் பொருத்த முடியாதவர்கள், ஸ்பிரே பாட்டில் வாங்கி, அதனுள் மினரல் வாட்டர் நிரப்பி, அதில் உங்களுக்குப் பிடித்த அரோமா ஆயில் களைக் கலந்து வீடு முழுவதும் ஸ்பிரே செய்தாலும் வீடு மணக்கும். லேவண்டர் ஆயில் கலந்த நீரை துணி களில் ஸ்பிரே செய்து, சிறிது நேரம் உலரவிட்டு பிறகு மடித்துவைத்தால் துணிகள் சரியாகக் காயாததால் வீசும் ஈரவாடையைத் தவிர்க்கலாம்.

அவள் பதில்கள் - 50 - மழைநாள்களில் வீட்டின் ஈர வாடையைப் போக்க என்ன வழி?

முன்பெல்லாம் தலைக்குக் குளித்த நாள்களில் சாம்பிராணிப் புகை போடும் வழக்கம் இருந்தது. அதே மாதிரி துணிகள் வைக்கும் அலமாரிகளுக்கும் சாம்பிராணிப் புகையைப் போட்டு பிறகு துணிகளை வைத்தால் ஈர வாடையும் வீசாது. பூச்சிகளும் அண்டாது. சாம்பிராணி போட கரி கிடைக் காதவர்கள், தேங்காய் ஓடு அல்லது நார் போன்றவற்றை எரித்து புகை போடலாம். அப்படிப் போடும்போது மண்ணெண்ணெய் உபயோகிக்காமல் வேறு எண்ணெய் உப யோகித்து எரிக்கலாம். அது எரிந்து கங்கு இருக்கும்போதே நிறைய சாம்பிராணித் தூளைக் கொட்டி புகை போட்டுவிட்டால் வீடு முழுவதும் ஈரநைப்பு அகன்று வாசம் வீசும்.

உடல், மனநலம், உறவுகள், படிப்பு, வேலை என வழக்கமான ஏரியாக்கள் மட்டுமன்றி, யாரிடம் கேட்பது எனத் தயங்க வைக்கிற விஷயங்களுக்கும் தீர்வுகள் தரக் காத்திருக்கிறது அவள் விகடன். கேட்க நினைப்பதைத் தயங்காமல் கேளுங்கள்... அந்தந்தத் துறை நிபுணர்களிடமிருந்து பதில்கள் பெற்றுத் தரக் காத்திருக்கிறோம். உங்கள் கேள்விகளை

`அவள் பதில்கள்', அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை - 600 002 என்ற முகவரிக்கோ,

avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கோ அனுப்பி வைக்கவும்.