Published:Updated:

அவள் பதில்கள் - 43- சருமத்தில் தோன்றும் பால் மருக்கள்… நீக்குவது எப்படி?

அவள் பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
அவள் பதில்கள்

சாஹா

அவள் பதில்கள் - 43- சருமத்தில் தோன்றும் பால் மருக்கள்… நீக்குவது எப்படி?

சாஹா

Published:Updated:
அவள் பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
அவள் பதில்கள்

என் குழந்தைக்கு எட்டு மாதங்கள் கடந்துவிட்டன. வழக்கமாக ஆறேழு மாதங்களில் குழந்தைகள் கவிழ்ந்துகொள்ளும் என்பார்கள். அவனுக்கு தலை நின்றுவிட்டது. ஆனால், இன்னும் திரும் பவே இல்லை. நேரடியாக உட்கார்ந்து கொள்வான் என்கிறார்கள். அப்படி உட்கார வைத்தால் சில விநாடிகளில் பின்பக்கமாக விழுந்துவிடுகிறான். இதற்கு தீர்வு உண்டா?

- கே.மாலினி, சிதம்பரம்

பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த குழந்தைகள்நல மருத்துவர் எஸ்.ஸ்ரீநிவாஸ்

அவள் பதில்கள் - 43- சருமத்தில் தோன்றும் பால் மருக்கள்…
நீக்குவது எப்படி?

குழந்தைகள் அந்தந்த வயதில் வளர்ச்சியில் அடைய வேண்டிய அத்தனை விஷயங்களையும் சீராகப் பெற்றிருக்க வேண்டும். இதற்கு ‘வளர்ச்சிப் படி நிலைகள்’ (Developmental Milestones) என்று பெயர். பிறந்த குழந்தை பொதுவாக ஐந்து முதல் ஆறு மாதங்களுக்குள் குப்புற கவிழ்ந்துகொள்ளும். எட்டு மாதங்களாகியும் இது நிகழாதபட்சத்தில் குழந்தைக்கு ‘வளர்ச்சி தாமதம்’ (Developmental Delay) இருக்க வாய்ப்புள்ளது.

குறிப்பிட்ட ஒரு வளர்ச்சிப் படிநிலையில் (Motor Milestone Delay) இப்படி ஏதேனும் தாமதம் இருந்தால் பேச்சுத்திறன், மொழி அறியும் திறன், நுட்பமான செயல் பாடுகள், அறிவுத்திறன் போன்ற மற்ற வளர்ச்சிப் படி நிலைகளிலும் குறைபாடு இருக்க வாய்ப்புள்ளது. வளர்ச்சி தாமதம் உள்ள குழந்தைகளுக்கு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் சிகிச்சைகளைத் தொடங்க வேண்டும். வளர்ச்சி சார்ந்த பயிற்சிபெற்ற குழந்தைகள் நல மருத்துவரிடம் (Developmental Pediatrician) குழந்தை யைக் காட்டிப் பரிசோதனை செய்து சிகிச்சைகள் கொடுக்க வேண்டியது அவசியம்.

ஒவ்வொரு முறையும் பட்டுப்புடவை அணிந்த பிறகு டிரை வாஷில் போட்டு உபயோகப்படுத்துகிறேன். ஆனால் அடிக்கடி டிரை வாஷில் போட வேண்டாம் என்கிறார்கள். வீட்டிலேயே துவைத்து உடுத்த வழி சொல்லுங்கள்.

- மகாலட்சுமி வாசுதேவன், திருச்சி-3

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த காஸ்டியூம் டிசைனர் சௌபர்ணிகா

அவள் பதில்கள் - 43- சருமத்தில் தோன்றும் பால் மருக்கள்…
நீக்குவது எப்படி?

டிரை வாஷுக்கு கொடுக்கும் போது பட்டுப் புடவைகளை பெட்ரோல் உபயோகித்து சலவை செய்வார்கள். அதனால் அதன் நிறம் மற்றும் தன்மை மாறக்கூடும். ஒவ்வொரு முறை பட்டுச் சேலை உடுத்தி வெளியே சென்றுவிட்டு வந்ததும் அதை நிழலில் காயவைத்து, மறுநாள் மடித்து எடுத்து வைத்துவிடலாம். பட்டுப்புடவைகளை தண்ணீரில் நனைத்து துவைக்கவே கூடாது என்பார்கள். துவைக்காமல் உடுத்தப் பிடிக்கவில்லை, தண்ணீரில் நனைத்தால் அது சாஃப்ட்டாக மாறினால் பரவாயில்லை என நினைப்பவர்கள் துவைத்து உடுத்தலாம்.

பட்டுப்புடவைகளை துவைப்பதற்கென்றே ஆன் லைனில் பிரத்யேக லிக்விட் கிடைக்கிறது. உங்கள் பட்டில் அழுக்கோ, கறையோ உள்ள இடங்களில் அந்த லிக்விடை பயன்படுத்திச் சுத்தம் செய்யலாம். அந்த லிக்விடில் ஒரு மூடி அளவுக்கு எடுத்து ஒரு பக்கெட் தண்ணீரில் கலந்து, புடவையை அதில் நனைத்து, உடனே எடுத்து, பிழியாமல் காய வைக்க வேண்டும். பட்டுப்புடவைகளை ஊறவைத்துத் துவைக்கக் கூடாது.

சருமத்தில் வரும் பால் மருக்களுக்கு என்ன தீர்வு? அது ஏன் வருகிறது? அது அடுத்தவருக்கும் தொற்றுவதைத் தடுக்க முடியாதா? சிகிச்சை என்ன?

- அம்பிகா ரத்தினம், கோவை-36

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா

அவள் பதில்கள் - 43- சருமத்தில் தோன்றும் பால் மருக்கள்…
நீக்குவது எப்படி?

பால் மரு என்பது ஒருவகையான வைரஸ் தொற்றால் ஏற்படுவது. இதை ‘மொலஸ்கம் கன்டேஜியோசம்’ (Molluscum contagiosum) என்று சொல்வோம். இது குழந்தைகளைப் பரவலாக பாதிக்கும். நீச்சல்குளம், ஹாஸ்டல், ஜிம் போன்ற பொதுவான இடங்களைப் பயன்படுத்தும் பெரியவர் களுக்கும், குழந்தைகள் வைத்திருப் போருக்கும் இது வரலாம். வைரஸ் தொற்று என்பதால் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு எளிதில் பரவக் கூடியது. குழந்தைகளுக்கு எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் என்பதால் அவர்களை இது அதிகம் பாதிக்கும்.

சரும மருத்துவரை அணுகினால் பால் மருக்களை நீக்குவதற்கான சிகிச்சைகளைப் பரிந்துரைப்பார்.

அவள் பதில்கள் - 43- சருமத்தில் தோன்றும் பால் மருக்கள்…
நீக்குவது எப்படி?

எலக்ட்ரோஃபல்குரேஷன் (Electrofulguration) உள்ளிட்ட பல வழிகளில் இந்த மருக்களை மருத்துவர் அகற்றுவார். தேவைப்பட்டால் மருத்துவர் ஸிங்க் சப்ளிமென்ட்டுகளை பரிந்துரைப்பார். அதில் ஆன்டிவைரல் தன்மை இருப்பதால் தொற்று பாதிக்காமல் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். பால் மருவின் அளவைப் பொறுத்து சிகிச்சை அமையும். சிறிய மரு என்றால் க்ரீம் மட்டுமே போது மானதாக இருக்கும். பெரிய, ஆழமான மரு என்றால் அதை அகற்ற வேண்டியிருக்கும்.

உடல், மனநலம், உறவுகள், படிப்பு, வேலை என வழக்கமான ஏரியாக்கள் மட்டுமன்றி, யாரிடம் கேட்பது எனத் தயங்க வைக்கிற விஷயங்களுக்கும் தீர்வுகள் தரக் காத்திருக்கிறது அவள் விகடன். கேட்க நினைப்பதைத் தயங்காமல் கேளுங்கள்... அந்தந்தத் துறை நிபுணர்களிடமிருந்து பதில்கள் பெற்றுத் தரக் காத்திருக்கிறோம். உங்கள் கேள்விகளை`அவள் பதில்கள்', அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை - 600 002 என்ற முகவரிக்கோ,

avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கோ அனுப்பி வைக்கவும்.