Published:Updated:

அவள் பதில்கள் 41: வெள்ளை சர்க்கரைக்கு பதில் செயற்கை இனிப்பூட்டி! - ஆரோக்கியமா… ஆபத்தா?

அவள் பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
அவள் பதில்கள்

- சாஹா

அவள் பதில்கள் 41: வெள்ளை சர்க்கரைக்கு பதில் செயற்கை இனிப்பூட்டி! - ஆரோக்கியமா… ஆபத்தா?

- சாஹா

Published:Updated:
அவள் பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
அவள் பதில்கள்

என் வயது 31. திருமணமாகி 5 வருடங்களாகின்றன. குழந்தையில்லை. பல சிகிச்சைகளையும் முயற்சி செய்து பார்த்துவிட்டோம். கடைசி முயற்சியாக ஐவிஎஃப் சிகிச்சை எடுக்கும்படி சிலர் சொல்கிறார்கள். யார் வேண்டுமானாலும் இந்தச் சிகிச்சையை மேற்கொள்ளலாமா?

- சி.சங்கீதா, புதூர்

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர்நலம் மற்றும் குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ்.

அவள் பதில்கள் 41: வெள்ளை சர்க்கரைக்கு பதில் செயற்கை இனிப்பூட்டி! - ஆரோக்கியமா…  ஆபத்தா?

குழந்தையின்மைக்காக நீங்கள் என்னென்ன சிகிச்சைகள் மேற்கொண்டீர்கள், அவை ஏன் பலனளிக்க வில்லை என்ற விவரங்கள் தெரியவில்லை. ஐவிஎஃப் சிகிச்சையை மேற்கொள்வதற்கு முன், சம்பந்தப்பட்ட தம்பதியர் அந்தச் சிகிச்சைக்குத் தகுதியானவர்களா என்பதை முதலில் பார்க்க வேண்டும். கர்ப்பப்பையில் பிரச்னைகள் இருக்கும்நிலையில் ஐவிஎஃப் சிகிச்சை தொடங்கப்பட்டால் அந்தச் சிகிச்சை வெற்றிபெறாது. இன்னும் சொல்லப்போனால் கர்ப்பப்பை தொடர்பான அடிப்டையான சில பிரச்னைகள் சரிசெய்யப்பட்டாலே, அந்தப் பெண்ணுக்கு ஐவிஎஃப் சிகிச்சையே தேவைப் படாமல், கருத்தரிக்கும் நிலைகூட ஏற்படலாம்.

அவள் பதில்கள் 41: வெள்ளை சர்க்கரைக்கு பதில் செயற்கை இனிப்பூட்டி! - ஆரோக்கியமா…  ஆபத்தா?

கர்ப்பப்பையில் ஃபைப்ராய்டு, நீர்க்கட்டிகள், சாக்லேட் கட்டிகள், தொற்று உள்ளிட்ட பிரச்னைகள் இருந்தால் அவை முதலில் சரிசெய்யப்பட வேண்டும். எளிமையான லேப்ராஸ்கோப்பி மற்றும் ஹிஸ்ட்ரோஸ்கோப்பி முறையிலேயே இந்தப் பிரச்னைகளை சரிசெய்து விட முடியும். இதன் பிறகு சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு இரண்டு முதல் மூன்று மாத ஓய்வு கொடுத்து, புண்ணெல் லாம் முழுமையாக ஆறிய பிறகு ஐவிஎஃப் சிகிச்சை தேவையாக இருந்தால் அது பரிந்துரைக்கப்படும். கர்ப்பப்பையில் மட்டுமல்ல சில நேரங்களில் கருக்குழாய் களில் அடைப்பு இருக்கலாம். கருமுட்டைகள் உருவா வதில் பிரச்னைகள் இருக்கலாம். கணவருக்கு உயிரணுக்கள் குறைவாக இருக்கலாம். இதுபோன்ற காரணங்களுக்காகவும் ஐவிஎஃப் சிகிச்சை தேவைப் படலாம். உங்கள் இருவரையும் முழுமையாகப் பரிசோதித்த பிறகே ஐவிஎஃப் தேவையா என்பது குறித்த முடிவுக்கு வர முடியும்.

எனக்கு நீரிழிவு இல்லை. ஆனாலும் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக நீரிழிவுக்காரர்களுக்கான செயற்கை இனிப்பு சேர்த்துக்கொள்கிறேன். இது ஆரோக்கியமானதா?

- கே.மலர்விழி, சென்னை-19

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் ரேச்சல் தீப்தி

அவள் பதில்கள் 41: வெள்ளை சர்க்கரைக்கு பதில் செயற்கை இனிப்பூட்டி! - ஆரோக்கியமா…  ஆபத்தா?

200 வருடங்களுக்கு முன் நம் முன்னோர்கள் ஒரு வருடம் முழுவதும் பயன்படுத்திய சர்க்கரையை இப்போது நாம் இரண்டே வாரங்களில் பயன்படுத்துவதாக ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. நீங்கள் குறிப்பிடும் செயற்கை இனிப்புகள் எஃப்.டி.ஏ (FDA) வால் அங்கீகரிக்கப்பட்டவையே. உணவுப்பொருள்களில் சர்க்கரைக்கு மாற்றாக அவை பயன்படுத்தப்படும். இனிப்புச் சுவையைக் கொடுக்கும். கலோரி அளவை அதிகரிக்காது. ஆனால், அவற்றில் ஊட்டச்சத்துகள் இருக்காது. அவை நாம் வழக்கமாகப் பயன்படுத்தும் சர்க்கரையைவிட 200 முதல் 700 மடங்கு இனிப்பாக இருக்கும். சுவை நரம்புகளைத் தூண்டி, மூளைக்குத் தகவல் அனுப்பி, ஹார்மோன் செயல்களை பாதித்து, வளர்சிதை மாற்றத்தையும் தாமதப்படுத்தும். ஒரு கட்டத்தில் அந்தச் சுவைக்கு நம்மை அடிமைப்படுத்தி விடும். எனவே உங்களையும் அறியாமல் அதை அதிகம் சாப்பிட்டு உடல் பருமன், நீரிழிவு, இதய பாதிப்புகளில் சிக்கிக்கொள்வீர்கள்.

செயற்கை இனிப்பு எடுத்துக்கொள்கிறவர் என்றால், அதன் பாக்கெட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் அளவை கவனித்துப் பயன்படுத்துங்கள். நீங்கள் பயன்படுத்தும் இனிப்புக்கேற்றபடி அதன் அளவு வேறுபடக்கூடும். ஐசல்ஃபேம், ஆஸ்பர்டேம், நியோடேம், சாக்கரின், சுக்ரலோஸ், ஸ்டீவ்யா (Acesulfame K, Aspartame, Neotame, Saccharin, Sucralose, Stevia) என செயற்கை இனிப்பூட்டிகளில் நிறைய வகை உண்டு. நீங்கள் எதைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்து உடல்நல பாதிப்புகளும் வேறுபடும். சிலவகை செயற்கை இனிப்புகள் குடலை பாதித்து வாயுத்தொல்லை, வயிற்று உப்புசம், வயிற்றில் அசௌகர்யம், மலம் கழிக்கும் உணர்வு போன்றவற்றை ஏற்படுத்தலாம். எனவே செயற்கை இனிப்பூட்டிகளைப் பயன்படுத்துவதற்கு முன் மருத்துவர் அல்லது டயட்டீஷியனின் ஆலோசனை யைப் பெறுவது அவசியம்.

அவள் பதில்கள் 41: வெள்ளை சர்க்கரைக்கு பதில் செயற்கை இனிப்பூட்டி! - ஆரோக்கியமா…  ஆபத்தா?

இனிப்புப் பிரியர்கள், நீரிழிவு உள்ளவர்கள், எடைக் குறைப்பு முயற்சியில் உள்ளவர்கள் போன்றோர் பனை வெல்லம், கருப்பட்டி என இயற்கையான பொருள்களி லிருந்து பெறப்படும் சர்க்கரையை அளவுக்கு மிகாமல் எடுத்துக்கொள்ளலாம். எப்போதுமே இயற்கையைப் பின் பற்றுவதுதான் ஆரோக்கியம் என்பதை மறந்துவிடாதீர்கள்.

உடல், மனநலம், உறவுகள், படிப்பு, வேலை என வழக்கமான ஏரியாக்கள் மட்டுமன்றி, யாரிடம் கேட்பது எனத் தயங்க வைக்கிற விஷயங்களுக்கும் தீர்வுகள் தரக் காத்திருக்கிறது அவள் விகடன். கேட்க நினைப்பதைத் தயங்காமல் கேளுங்கள்... அந்தந்தத் துறை நிபுணர்களிடமிருந்து பதில்கள் பெற்றுத் தரக் காத்திருக்கிறோம். உங்கள் கேள்விகளை

`அவள் பதில்கள்', அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை - 600 002 என்ற முகவரிக்கோ,

avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கோ அனுப்பி வைக்கவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism