Published:Updated:

அவள் பதில்கள் - 39: பிரசவத்தின்போதான மயக்க ஊசி பிற்காலத்தில் முதுகுவலியை ஏற்படுத்துமா?

அவள் பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
அவள் பதில்கள்

- சாஹா

அவள் பதில்கள் - 39: பிரசவத்தின்போதான மயக்க ஊசி பிற்காலத்தில் முதுகுவலியை ஏற்படுத்துமா?

- சாஹா

Published:Updated:
அவள் பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
அவள் பதில்கள்

என் மகனுக்கு 10 வயதாகிறது. அவனுக்கு தினமும் உணவில் உருளைக்கிழங்கு வேண்டும். அது பொரியலாகவோ, சிப்ஸாகவோ, பிரெஞ்சு ஃப்ரைஸாகவோ ஏதோ ஒரு வடிவத்தில் வேண்டும். உருளைக்கிழங்கு இல்லாவிட்டால் சாப்பிட மாட்டான். சமீப காலமாக கொஞ்சம் எடையும் கூடியிருக்கிறான். தினமும் உருளைக்கிழங்கு கொடுப்பது சரியானதா? வேறு காய்கறிகளை எப்படிப் பழக்குவது?

- பி. மஞ்சரி, கோவை

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன்

குழந்தைகளுக்கு சரிவிகித உணவுகளைக் கொடுக்க வேண்டியது மிகவும் அவசியம். வெறும் உருளைக்கிழங்கை மட்டும் சாப்பிடும் குழந்தைகளுக்கு பிற காய்கறிகளின் மூலம் கிடைக்கக்கூடிய சத்துகள் உடலில் சேராது. உருளைக்கிழங்கில் நார்ச்சத்து மிகக் குறைவு. ஆனால், அதில் நிறைய கலோரிகளும் வைட்டமின் மற்றும் தாதுச் சத்துகளும் உள்ளன. உங்கள் குழந்தை உருளைக்கிழங்குதான் வேண்டுமென அடம்பிடிப்பதாகச் சொல்வதால், அவனுக்கு சாதத்தின் அளவைக் குறைத்துக்கொண்டு, உருளைக்கிழங்கு சேர்த்துக்கொடுத்து கலோரிகளை பேலன்ஸ் செய்யலாம்.

அவள் பதில்கள் - 39: பிரசவத்தின்போதான மயக்க ஊசி பிற்காலத்தில் முதுகுவலியை ஏற்படுத்துமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உருளைக்கிழங்கை நீங்கள் எந்த வடிவில் சமைத்துக் கொடுக்கிறீர்கள் என்பது மிக முக்கியம். நிறைய எண்ணெய் விட்டு வறுத்தோ, பொரித்தோ கொடுக்கக் கூடாது. நீங்கள் குறிப்பிட்டுள்ள பிரெஞ்சு ஃப்ரைஸை தவிர்த்துவிடுவது நல்லது. அதற்கு பதில் உருளைக்கிழங்கை வேக வைத்து அதை காய்கறிகளுடன் சேர்த்து கட்லெட்போல செய்து கொடுக்கலாம். அதாவது வேகவைத்த உருளைக்கிழங்கு மற்றும் காய்கறிகள் சேர்த்துப் பிசைந்து, சின்னச் சின்ன வடைகள் போல தட்டி, பிரெட் தூளில் புரட்டியெடுத்து, தோசைக் கல்லில் குறைந்த எண்ணெய்விட்டு வாட்டி எடுத்துக் கொடுக்கலாம்.

உருளைக்கிழங்கு பிரியரான உங்கள் குழந்தைக்கு அதை ஒரேயடியாகத் தவிர்க் காமல் சமையலில் சின்னச் சின்ன மாறுதல் களைப் பின்பற்றி பேலன்ஸ் செய்யலாம். உதாரணத்துக்கு ஸ்டஃப்டு சப்பாத்தி செய்து கொடுக்கலாம். அதில் உருளைக்கிழங்குடன் வெந்தயக்கீரையோ அல்லது காய்கறிகளோ கலந்து செய்து கொடுக்கலாம். உருளைக் கிழங்குடன் இப்படிக் காய்கறிகள், கீரைகள் கலந்து கொடுத்துப் பழக்கும்போது உருளைக்கிழங்கின் சுவை இருக்கும் திருப்தியில் உங்கள் குழந்தை சாப்பிட ஆரம்பிப்பான். கூடவே காய்கறிகளையும் பழக்கியது போலாகும்.

அவள் பதில்கள் - 39: பிரசவத்தின்போதான மயக்க ஊசி பிற்காலத்தில் முதுகுவலியை ஏற்படுத்துமா?

பிரசவ காலத்தில் முதுகில் போடப்படுகிற ஊசிக்கும் அதன் பிறகு நிரந்தரமாகும் முதுகுவலிக்கும் என்ன தொடர்பு? ஜெனரல் அனஸ்தீசியா, முதுகில் போடப்படும் மயக்க ஊசி - இரண்டில் எது சிறந்தது? இரண்டில் எது வேண்டும் என முடிவெடுக்கும் உரிமை கர்ப்பிணிகளுக்குக் கொடுக்கப்படுமா?

- சாந்தினி குமரன், செங்கல்பட்டு

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, பேராசிரியரும் மகப்பேறு மருத்துவருமான ஹெப்ஸிபா கிருபாமணி

பலரும் நினைத்துக்கொண்டிருக்கிற மாதிரி முதுகில் போடப்படும் மயக்க ஊசிக்கும் பிற்காலத்தில் ஏற்படுகிற முதுகுவலிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. முதுகில் தண்டுவடத்தில் போடப்படுகிற மயக்க ஊசியானது அதிகபட்சம் ஒரு மணி நேரத்துக்கு வலி தெரியாமல் வைத்திருக்கும் தன்மை கொண்டது. அதன் பிறகு அந்த மருந்து வேலை செய்யாது. எனவே இந்த ஊசியோடு முதுகு வலியைத் தொடர்புபடுத்திப் பார்க்கத் தேவையில்லை.

ஜெனரல் அனஸ்தீசியா அல்லது முதுகில் போடப்படும் மயக்க ஊசி - எது தேவை என்பதை சம்பந்தப்பட்ட கர்ப்பிணி முடிவு செய்ய முடியாது. அதை மயக்கவியல் தொடர்பாகப் படித்த மருத்துவ நிபுணரும், கர்ப்பிணிக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவரும் கர்ப்பிணியின் உடல் நிலையைப் பொருத்து முடிவு செய்வார்கள். கர்ப்பிணிக்கு எது சிறந்ததோ அதுபற்றி அந்தப் பெண்ணிடம் விளக்கிச் சொல்லி, கையெழுத்து வாங்கிய பிறகே அதைப் போடுவார்கள்.

பெண்கள் பிரசவத்துக்குப் பிறகும், குறிப்பிட்ட வயதுக்குப் பிறகும் உடற்பயிற்சிகள் செய்வதில்லை. ஆண்களோடு ஒப்பிடும்போது பெண் களுக்கு எலும்புத் தேய்மானம் வருவதற்கான வாய்ப்பும் மிக அதிகம். அதாவது 35 வயதிலேயே பல பெண்களுக்கு முதுகுவலி வருகிறது. உடல்பருமனாலும் முதுகுவலி வரலாம். இப்படி முதுகுவலிக்கு பல காரணங்கள் இருக்கலாம்.

உடல், மனநலம், உறவுகள், படிப்பு, வேலை என வழக்கமான ஏரியாக்கள் மட்டுமன்றி, யாரிடம் கேட்பது எனத் தயங்க வைக்கிற விஷயங்களுக்கும் தீர்வுகள் தரக் காத்திருக்கிறது அவள் விகடன். கேட்க நினைப்பதைத் தயங்காமல் கேளுங்கள்... அந்தந்தத் துறை நிபுணர்களிடமிருந்து பதில்கள் பெற்றுத் தரக் காத்திருக்கிறோம். உங்கள் கேள்விகளை

`அவள் பதில்கள்', அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை - 600 002 என்ற முகவரிக்கோ,

avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கோ அனுப்பி வைக்கவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism