`பசு நெய்யுடன் சமைங்க... பரிசுகளை அள்ளுங்க!' - அவள் விகடன் வழங்கும் மெகா சமையல் போட்டி

இறுதிப் போட்டிக்குத் தேர்வு செய்யப்படும் 10 நபர்களின் புகைப்படம் அவள் விகடன் இதழிலும் ஃபேஸ்புக் தளத்திலும் வெளியிடப்படும்.
தமிழக வாசகிகளின் மனதில் 23 ஆண்டுகளாக வீற்றிருக்கும் அவள் விகடன் இந்தப் புத்தாண்டு சந்தோஷத்தை மேலும் அதிகரிக்கச் செய்யவிருக்கிறது. ஆம்... அவள் விகடன், A1 SKC பசு நெய்யுடன் இணைந்து `பசு நெய்யுடன் சமைங்க! பரிசுகளை அள்ளுங்க!' என்ற மாபெரும் சமையல் போட்டியை நடத்துகிறது.

ஆச்சர்யமூட்டும் பரிசுகள்!
போட்டியில் முதல் பரிசு பெறுபவர்களுக்கு ரூ.5000, இரண்டாம் பரிசு ரூ.3000, மூன்றாம் பரிசு ரூ.2000 வழங்கப்படும். முதல் 3 இடங்களைப் பிடிக்கும் போட்டியாளர்களுக்கு A1 SKC பசு நெய் வழங்கும் ரூ.1000 மதிப்பிலான கிஃப்ட் ஹேம்பர் வழங்கப்படும். பிற ஃபைனலிஸ்ட்டுகளுக்கு ரூ. 500 மதிப்புள்ள கிஃப்ட் ஹேம்பர் வழங்கப்படும். ரெசிபிக்களை அனுப்பும் அனைத்துப் போட்டியாளர்களுக்கும் 50 மில்லி A1 SKC பசு நெய் வழங்கப்படும். போட்டியில் பங்கேற்பவர்கள் அனைவருக்கும் அவள் விகடனின் இ-சர்டிபிகேட் அனுப்பப்படும்.
தனிமனித இடைவெளி அதிகமாக வலியுறுத்தப்படும் இந்தச் சூழலில் போட்டியின் முதற்கட்டத் தேர்வும் இணையம் மூலமாகவே நடத்தத் திட்டமிடப்பட்டுகிறது.

வாசகிகள் செய்ய வேண்டியது என்ன?
பசு நெய் வைத்து செய்யும் இனிப்பு, காரம், பலகாரம் என உங்களின் தனித்துவமான ஒரே ஒரு ரெசிபியை மட்டும் எங்களுக்கு அனுப்புங்கள். தமிழ்நாடு, புதுச்சேரியைச் சேர்ந்த வாசகிகள் இதில் கலந்துகொள்ளலாம். ரெசிபிக்களை கீழே கொடுக்கப்பட்டிருக்கும் லிங்கை க்ளிக் செய்து சமர்ப்பிக்கலாம்.
ரெசிபிக்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் ஜனவரி 28.
போட்டியில் பங்கேற்று உங்கள் ஆச்சர்யமூட்டும் ரெசிபிக்களை சமர்ப்பிக்க இந்த லிங்கை க்ளிக் செய்யவும்: https://bit.ly/3nG9eQE
டாப் 10 ரெசிபிக்களை அனுப்பியவர்கள் இறுதிப் போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இறுதிக்கட்ட போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் மட்டும் ரெசிபிக்களை செய்து காட்ட வேண்டும். இறுதிப் போட்டி பிப்ரவரி 7-ம் தேதி சென்னையில் நடைபெறும். பிரபல சமையல் கலை நிபுணர் மல்லிகா பத்ரிநாத் கலந்து கொண்டு வெற்றியாளர்களைத் தேர்வு செய்வார்.
இறுதிப் போட்டிக்குத் தேர்வு செய்யப்படும் 10 நபர்களின் புகைப்படம் அவள் விகடன் இதழிலும் ஃபேஸ்புக் தளத்திலும் வெளியிடப்படும். இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்படுபவருக்கு அவள் விகடன் குழுவினரிடமிருந்து அழைப்பு வரும். இறுதிப் போட்டி குறித்த விதிமுறைகள் மற்றும் கூடுதல் தகவல்கள் அப்போது தெரிவிக்கப்படும்.

* இந்தப் போட்டியில் அவள் விகடன் ஆசிரியர் குழுவின் முடிவே இறுதியானது
போட்டியில் பங்கேற்று உங்கள் ஆச்சர்யமூட்டும் ரெசிபிக்களை சமர்ப்பிக்க இந்த லிங்கை க்ளிக் செய்யவும்: https://bit.ly/3nG9eQE