Published:Updated:

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துக்கு ரெடியா லேடீஸ்! - இதோ வந்துட்டோம்ல!

இதோ வந்துட்டோம்ல!
பிரீமியம் ஸ்டோரி
இதோ வந்துட்டோம்ல!

வாசகிகளின் திறமைகளுக்கு சவால்விடும் வகையில் 13 வகை யான போட்டிகள் அறிவிக்கப் பட்டுள்ளன.

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துக்கு ரெடியா லேடீஸ்! - இதோ வந்துட்டோம்ல!

வாசகிகளின் திறமைகளுக்கு சவால்விடும் வகையில் 13 வகை யான போட்டிகள் அறிவிக்கப் பட்டுள்ளன.

Published:Updated:
இதோ வந்துட்டோம்ல!
பிரீமியம் ஸ்டோரி
இதோ வந்துட்டோம்ல!

மதுரை, சென்னை அவள் விகடன் வாசகிகளுக்கு மாபெரும் கொண்டாட்ட அனுபவத்தைக் கொடுத்த ‘அவள் விகடன் ஜாலி டே’ - வாசகிகளின் திருவிழாவின் அடுத்த பாய்ச்சல் திருநெல்வேலியை நோக்கி.

பல ஆண்டுகளாக அவள் விகடன் வாசகிகளின் மனதில் தனியிடம் பிடித்த `ஜாலி டே' நிகழ்ச்சி இப்போது புதுப்பொலிவுடன் இன்னும் உற்சாகத்துடன் உங்களைத் தேடி வருகிறது.

ஆம்! உங்கள் சத்யா வழங்கும் `அவள் விகடன் ஜாலி டே', திருநெல்வேலி, வண்ணாரப்பேட்டையில் உள்ள பிரான்சிஸ் சேவியர் பொறி யியல் கல்லூரியில் ஆகஸ்ட் 7-ம் தேதி காலை 9 மணி முதல் 6 மணி வரை நடைபெற உள்ளது. முன்தேர்வு பிரான்சிஸ் சேவியர் சிபிஎஸ்இ பள்ளியில் ஆகஸ்ட் 6-ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடை பெறும். போட்டிகளில் பங்கேற் போர் முன்தேர்வில் கட்டாயம் பங்கேற்க வேண்டும்.

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துக்கு ரெடியா லேடீஸ்! - இதோ வந்துட்டோம்ல!

வாசகிகளின் திறமைகளுக்கு சவால்விடும் வகையில் 13 வகை யான போட்டிகள் அறிவிக்கப் பட்டுள்ளன. 12 வயதுக்கு மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதல் அனைத்து வயதுப் பெண்களும் நிகழ்ச்சியில் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தலாம். போட்டிகளுக்கு நிகராக பரிசுகளுக்கும் பஞ்சம் இருக்காது. போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறுபவர்களுக்கு மொத்தம் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆச்சர்யப் பரிசுகள் காத்திருக்கின்றன.

இதுமட்டுமன்றி நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவருக் கும் நிச்சயப் பரிசு உண்டு. நிகழ்ச்சியை மேலும் கலகலப் பாக்க ‘கலக்கப்போவது யாரு’, ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி களில் நம்மை மகிழ வைத்த பாலாவும் வாசகிகளின் கொண்டாடத்தில் இணைகிறார். பாலாவுடன் இணைந்து தொகுப்பாளர் திபிகாஷியும் மகிழ்விக்க வருகிறார். நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாசகிகளை மேலும் குதூகலப் படுத்த ‘ஆன் தி ஸ்பாட்’ போட்டிகள் மேடையில் அரங்கேற உள்ளன.

வேலை, குடும்பம், படிப்பு என பம்பரமாகச் சுழன்று கொண்டிருக்கும் பெண்கள் எல்லாவற்றிலிருந்தும் ஒரு பிரேக் எடுத்து இரண்டு நாள்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என இருக்க சிறப்பான வாய்ப்பு இது. எனவே கண்டிப்பாக மிஸ் பண்ணாமல் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுங்கள். பரிசுகளோடு அழகான நினைவு களையும் அள்ளிச் செல்லுங்கள்.

நிகழ்ச்சியில் கண்டிப்பாக ஆண்களுக்கு அனுமதி கிடையாது.

என்ன மக்கா ரெடியா!

போட்டிகள் பற்றிய கூடுதல் விவரங்கள் மற்றும் முன்பதிவுக்கு

கீழே கொடுக்கப்பட்டிருக்கும் QR Code-ஐ ஸ்கேன் செய்யவும்.

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துக்கு ரெடியா லேடீஸ்! - இதோ வந்துட்டோம்ல!
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துக்கு ரெடியா லேடீஸ்! - இதோ வந்துட்டோம்ல!