Published:Updated:

சிறிய முதலீடு... மாதம் ₹30,000 வரை வருமானம்... கேக் பிசினஸில் கலக்கலாம் வாங்க!

கேக்
கேக்

நாம் செய்யும் டிசைனுக்கு ஏற்ப ஒரு கிலோ கேக்கை 1,000 ருபாயிலிருந்து 3,000 ரூபாய் வரை விலை வைத்து விற்க முடியும்.

``படிச்ச படிப்புக்கு வேலை செய்யணும்னு நினைக்கிறதை விட நமக்கு பிடிச்ச வேலையை செஞ்சா வாழ்க்கையில் ரொம்ப ஈஸியா ஜெயிக்க முடியும். நம்முடைய வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தி நம்மிடம்தான் இருக்கிறது" - நம்பிக்கை பொங்கப் பேசுகிறார் திவ்யா. தூத்துக்குடியைச் சேர்ந்த திவ்யா கடந்த ஏழு ஆண்டுகளாக கேக் பேக்கிங் பிசினஸ் செய்து வருகிறார். தீம் கேக்குகள் செய்வது திவ்யாவின் ஸ்பெஷல்.

கப் கேக்
கப் கேக்

``சின்ன வயசிலிருந்தே வீடுதான் உலகம்னு வளர்ந்த பொண்ணு நான். பொம்பளைப் புள்ளைங்கிறதால் எங்கையும் விளையாட அனுப்பமாட்டாங்க. எங்க அம்மா சமைக்கும்போது பக்கத்துலேயே உட்கார்ந்து பார்த்துட்டு இருப்பேன். படிப்புக்கிற நேரம் போக மீதி நேரத்தில் எதாவது கிராப்ஃட் வேலைப்பாடுகள் செய்வேன்.

எம். டெக் முடிசுட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் ஹெச்.ஆராக வேலை பார்த்துட்டு இருந்தேன். திருமணம் முடிஞ்சதும் குடும்பம், குழந்தைகள் என ஹோம்மேக்கராக மாறிட்டேன். நமக்குப் பிடிச்ச வேலைகளில் கவனம் செலுத்தினால், ஹோம் மேக்கராக இருந்தாலும் நமக்கான அடையாளத்தை நிச்சயம் நம்மால் உருவாக்கிக் கொள்ள முடியும்னு தோணுச்சு.

கேக்
கேக்

எனக்கு சமையல் செய்யப் பிடிக்கும் என்பதால் விதவிதமான ரெசிப்பிக்ளை ஆன்லைனில் தேட ஆரம்பிச்சேன். நான் முயற்சி பண்ண ரெசிப்பிக்களை போட்டோக்களுடன் சேர்த்து என்னுடைய ப்ளாக்கில் பகிர ஆரம்பிச்சேன். ரெசிப்பிகள் வித்தியாச வித்தியாசமாக இருந்ததால் எனக்கென்று ஃபாலோயர்கள் உருவானார்கள்.

இப்படி ஓர் ஆர்வத்தில் கத்துக்கிட்டதுதான் கேக் பேக்கிங்கும். வெளிநாடுகளில் சொல்லப்பட்டு இருக்கும் கேக் ரெசிப்பிகளை, எடுத்து நம்ம ஊரு ஸ்டைலில், இங்கு கிடைக்கும் பொருள்களை வெச்சு செய்து பார்ப்பேன். நிறைய சொதப்பல்கள் இருந்தாலும் ஒவ்வொரு தவறும் என்னை அடுத்தடுத்து தெளிவுபடுத்துச்சு.

நான் செய்த கேக்குகளை முகநூலில் பார்த்த என் தோழி அவங்க பொண்ணோட பிறந்த் நாளுக்கு கேக் ஆர்டர் கொடுத்தாங்க.

கேக்
கேக்

வழக்கமான ஸ்டைலில் இல்லாமல் குழந்தைக்குப் பிடிச்ச கார்ட்டூன் உருவத்தில் கேக் தயாரிச்சு கொடுத்தேன். குழந்தை அந்த கேக்கை பார்த்துட்டு ரொம்ப சர்ப்ரைஸ் ஆனதாக தோழி சொன்னாங்க. அந்த மகிழ்ச்சியில் அடுத்தடுத்து நிறைய தீம் கேக்குகள் தயாரிச்சு முகநூல் பக்கத்தில் புகைப்படங்கள் பதிவிட ஆரம்பிச்சேன்.

கஸ்டமர்கள் கேட்கும் தீம்களின் அடிப்படையில் கேக்குகள் தயாரிச்சு கொடுத்துட்டு இருக்கேன். வாட்டர் ஃபால் டிசைன் கேக், தம்பதியினர் கேக், பேபி டிசைன் கேக், பட்டு சேலை டிசைன் கேக் என 3,000-க்கும் மேலான டிசைனர் கேக்குகள் தயார் பண்ணிருக்கேன்.

முகநூல், தோழிகள் மூலமாக மாதம் 10 ஆர்டர்களுக்கு மேலாக வருது. எல்லா கேக்குகளையும் மிஷின்கள் இல்லாமல், அதிகளவு கெமிக்கல்கள் இல்லாமல் நானேதான் தயார் செய்கிறேன். தீம் கேக்குகள் என்றால் படங்களாக இல்லாமல், சுகர் பேஸ்ட்கள் பயன்படுத்தி, உருவங்களாக கைகளில் தயார் செய்கிறேன். நாம் செய்யும் டிசைனுக்கு ஏற்ப ஒரு கிலோ கேக்கை 1000 ருபாயிலிருந்து 3000 ரூபாய் வரை விலை வைத்து விற்க முடியும்.

நியூ இயர் ஸ்பெஷல்: கேக் - குக்கீஸ் - ஐஸ்க்ரீம்

பாடலாசிரியர் விவேக், நிஷா கணேஷ் என சில செலிபிரெட்டிகளுக்கும் ஆர்டர் எடுத்து கேக் தயாரிச்சு கொடுத்துருக்கேன். இப்போது எல்லோரும் ஆன்லைனில் இருப்பதால், உங்களுடைய கேக்குகள் தனித்துவமாக இருக்கும் பட்சத்தில் ஆன்லைன் மூலம் செலிபிரெட்டிகளை கூட நம்முடைய வாடிக்கையாளர்களாக மாற்றிக் கொள்ள முடியும். கேக் பிசினஸை முழு நேர தொழிலாக எடுத்து செய்ய ஆரம்பித்தால் குறைந்த அளவு முதலீட்டிலேயே மாதம் ₹20,000 - ₹30,000 வரை எளிதாக வருமானம் ஈட்ட முடியும்.

கேக் தயாரிப்புக்கான பொருள்களை எங்கு வாங்குவது, எப்படி ஆர்டர்கள் எடுப்பது, கப் கேக்குகள் எப்படி தயார் செய்வது போன்ற தகவல்களைத் தெரிந்து கொண்டு நீங்களும் கேக் பிசினஸ் தொடங்க வேண்டுமா? இதோ... உங்களுக்கான வாய்ப்பு.

கேக் மேக்கிங் பயிற்சி
கேக் மேக்கிங் பயிற்சி

டிசம்பர் 18-ம் தேதி மாலை 4 மணிக்கு, திவ்யா விகடனுடன் இணைந்து கேக் தயாரிப்பு பயிற்சி வழங்க இருக்கிறார். இதில் கலந்துகொள்ள இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும்.

அடுத்த கட்டுரைக்கு