Published:Updated:

பிள்ளைகளுக்கு பைக், கார் வாங்கிக்கொடுக்கும் முன்..! #Avaludan

பிள்ளைகளுக்கு பைக், கார்  வாங்கிக்கொடுக்கும் முன்..!
பிரீமியம் ஸ்டோரி
பிள்ளைகளுக்கு பைக், கார் வாங்கிக்கொடுக்கும் முன்..!

பெற்றோர்கள் பிள்ளைப் பாசத்தைவிட, பிள்ளை களின் பாதுகாப்பைப் பற்றியே நினைக்க வேண்டும். வாழ்வின் மதிப்பு விளையாட்டுப் பிள்ளைகளுக்குத் தெரியாது

பிள்ளைகளுக்கு பைக், கார் வாங்கிக்கொடுக்கும் முன்..! #Avaludan

பெற்றோர்கள் பிள்ளைப் பாசத்தைவிட, பிள்ளை களின் பாதுகாப்பைப் பற்றியே நினைக்க வேண்டும். வாழ்வின் மதிப்பு விளையாட்டுப் பிள்ளைகளுக்குத் தெரியாது

Published:Updated:
பிள்ளைகளுக்கு பைக், கார்  வாங்கிக்கொடுக்கும் முன்..!
பிரீமியம் ஸ்டோரி
பிள்ளைகளுக்கு பைக், கார் வாங்கிக்கொடுக்கும் முன்..!

‘பள்ளி மாணவர்களுக்கு பைக், கல்லூரி மாணவர்களுக்கு கார் எனப் பிள்ளைகளின் வயது, திறனையும் மீறி, பிள்ளைகளின் பிடிவாதத் துக்கு இணங்கி அவர்களுக்கு வாகனம் வாங்கிக்கொடுக்கும் பெற்றோர்களுக்கு உங்கள் அனுபவ ஆலோசனை என்ன?’ என்று அவள் விகடன் சமூக வலைதளப் பக்கத்தில் கேட்டிருந்தோம். #Avaludan என்ற ஹேஷ்டேக்குடன் வாசகர்கள் பகிர்ந்திருந்தவற்றில் சிறந்தவை இங்கே...

Sangee Prabha

பெற்றோர்கள் பிள்ளைப் பாசத்தைவிட, பிள்ளை களின் பாதுகாப்பைப் பற்றியே நினைக்க வேண்டும். வாழ்வின் மதிப்பு விளையாட்டுப் பிள்ளைகளுக்குத் தெரியாது. பெற்றோர் அதை உணர்ந்து, உரிய வயது வந்ததற்குப் பின், லைசென்ஸ் எடுத்து, அவர்களால் ஒரு வாகனத்தைக் கையாள இயலும் எனும் அளவுக்கு அதில் அவர்கள் தேர்ச்சி பெற்ற பின்னரே, அவர்களுக்கு வாகனம் வாங்கிக் கொடுக்க வேண்டும். அதைவிட முக்கியம், ப்ளஸ் ஒன் வந்துவிட்டார்கள், காலேஜ் சென்று விட்டார்கள் என்பதற்காகவே அவர்களுக்கு வாகனம் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்பதில்லை. அது அவர்களுக்குத் தேவையா என்பதே முதல் கேள்வி யாக இருக்க வேண்டும்.

Kingflower Sundarraj

பிள்ளைகள் வாகனங்கள் ஓட்டிப் பழக ஊருக்கு வெளியே உள்ள கிரவுண்டுகளுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். பிரதான சாலைகளில் பழகட்டும் என்று அவர்களை விடக்கூடாது. முதலில் மைதானங்கள், பிறகு சிறிய சாலைகள், பின்னர் பிரதான சாலைகள் என்று அவர்களுக்குத் தன்னம்பிக்கை வந்த பின்னர், எடை குறைவான, கையாள எளிதான என ஓர் ஆரம்பநிலை வாகனம் வாங்கிக் கொடுக்கலாம்.

Matamchinnappa Subramanian

என்னைப் பொறுத்தவரை, பள்ளி, கல்லூரி முடிக்கும் வரை பிள்ளைகளுக்கு சைக்கிள் போதும். அவர்கள் சம்பாதிக்க ஆரம்பித்த பின்னர், அவர்களது தேவையைப் பொறுத்து பைக், கார் வாங்கிக் கொள்ளலாம்.

Anbu Bala

என்னுடன் பணியாற்றியவர், பள்ளி இறுதி வகுப்புப் படித்த தன் மகனுக்கு பைக் வாங்கிக் கொடுத்தார். அவன் பத்தாம் வகுப்புப் படித்த தன் தம்பியையும் ஏற்றிக்கொண்டு பைக்கில் பறந்து, விபத்தில் இருவரும் பலியானார்கள். நடைப்பிணமாக வாழ்ந்துகொண்டிருக்கும் அந்தப் பெற்றோர் அனைவருக்கும் சொல்லும் அறிவுரையையே நானும் சொல்கிறேன்... பிள்ளைகள் ஆசைப்பட்டதை எல்லாம் வாங்கிக் கொடுக்காதீர்கள். அவர்களது கோபம், பிடிவாதம், அழுகை எதுவானாலும் சில நாள்களில் அல்லது மாதங்களில் சரியாகிவிடும். பிள்ளைகள் என்றால் அப்படித்தான்.

Lakshmi Vasan

உரிய வயதும், உரிமமும் பக்குவமும் பெறுவதற்கு முன்னர் பிள்ளைகளுக்கு வாகனம் வாங்கிக் கொடுத்து, ‘எவ்வளவு லாகவமா ஓட்டுறான்’ என்று பெற்றோர் மகிழ்வது, எரியும் கொள்ளியால் தலையை சொறிவதற்கு ஒப்பான பேதைமை. மேலும், பிள்ளைகளுக்கு வண்டி வாங்கிக் கொடுப்பதை ஒரு ஸ்டேட்டஸ் சிம்பளாக நினைக் கும் பெற்றோர்களும் இதில் குற்றவாளிகளே.

Janaki Paranthaman

‘காரோ, பைக்கோ... உன் சுய சம்பாத்தியத்தில் வாங்கிக்கோ...’ என்று பிள்ளைகளிடம் கறாராகச் சொல்ல வேண்டும். ‘இந்தக் காலத்துல அதெல்லாம் முடியுமா’ என்று கேட்கும் பெற்றோர்களின் மனோபாவம்தான், பதின்ம பருவத்தினர் சந்திக்கும் சாலை விபத்துகளுக்குப் பொறுப்பு.

பிள்ளைகளுக்கு பைக், கார்  வாங்கிக்கொடுக்கும் முன்..! #Avaludan

Krishnamurthy Latha

இன்றைய பதின்ம வயதினர் சிலர், வாகனம் ஓட்டுவதை சாகசம் போலவும், ஹீரோயிஸம் போலவும் நினைக்கிறார்கள். அப்படி பொறுப்பற்ற கைகளில் ஒரு வாகனம் கொடுக்கப்படும்போது அது அவர்களுக்கு மட்டுமன்றி சாலையில் செல்லும் இன்னோர் உயிருக்கும், உயிர்களுக்கும் ஆபத்தாக முடியலாம். எனவே, பிள்ளைகளுக்கு, குறிப்பாக சேட்டைக்காரப் பிள்ளைகளுக்கு வாகனம் வாங்கிக்கொடுப்பது என்பதை பெற் றோர்கள் தவிர்க்க வேண்டும்.

Chandrika Shanmugam

மகாபலிபுரம் ரோட்டில் இளைஞர்கள் பைக் ரேஸ் என்ற பெயரில் செய்யும் ஆபத்துகளை நான் பார்த்திருக்கிறேன். சென்னை மட்டுமல்ல, எல்லா நகரங்களின் பைபாஸ் சாலைகளிலும் ரேஸ் விடும் இளைஞர்களைப் பார்க்கலாம். தலைக்கேறிய விளையாட்டு வெறியில் அவர்கள் செல்லும் வேகத்தை பெற்றோர்கள் ஒருமுறை பார்த்தால் போதும்... பிள்ளைகளுக்கு பைக் வாங்கித் தரும் முன் பல தடவை சிந்திப் பார்கள்.

Valli Subbiah

எங்கள் வீட்டருகே இருக்கும் பள்ளியின் மாணவர்கள் பலர் மிகவும் ஆபத்தான வேகத்தில் பைக் ஓட்டுவதுண்டு. அப்படி ஓட்டிய மாணவர்களில் ஒருவன் விபத்தில் சிக்க, அப்பள்ளி யின் ஆசிரியர் ஒருவர், மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அந்த மாணவனை, பிற மாணவர்களை அழைத்துச் சென்று பார்க்க வைத்தார்... ஒரு பாடமாக.

Keerthi

வாகன விஷயத்தில் மட்டுமல்ல, எல்லா விஷயங் களிலுமே பிள்ளைகளின் பிடிவாதம், அடம் தங்களிடம் செல்லுபடியாகாது என்று பெற்றோர்கள் புரியவைத்து வளர்க்க வேண்டும். சிறு வயதி லிருந்தே அப்படி வளர்க்கப்படும் எந்தப் பிள்ளை களும் வளர்ந்ததும் பைக், கார் கேட்டு அடம் பிடிப்பதில்லை.

Rajasree Murali

பத்தாம் வகுப்பில் 80% எடுத்தால் பைக், மெரிட்டில் காலேஜில் சேர்ந்துவிட்டால் கார் என்றெல்லாம் செல்லத்தை லஞ்சமாகக் கொடுக்கும் பெற்றோர் முதலில் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.

Anjali Ashwith

உரிய வயதுக்கு முன்னரே வாகனம் கேட்டு அடம் பிடிக்கும் பிள்ளைகளை, அரசு மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசரப்பிரிவு வாசலில் 2 மணி நேரம் அந்தக் காட்சிகளைப் பார்க்க வைத்துவிட்டு அழைத்து வந்தால், வாகனம் கேட்க மாட்டார்கள்.