Published:Updated:

`கட்டாயப்படுத்தி பெற்றோர் ஆக்காதீர்கள்!’

பெற்றோர்
பிரீமியம் ஸ்டோரி
பெற்றோர்

#Avaludan

`கட்டாயப்படுத்தி பெற்றோர் ஆக்காதீர்கள்!’

#Avaludan

Published:Updated:
பெற்றோர்
பிரீமியம் ஸ்டோரி
பெற்றோர்

உலகம் முதல் உள்ளூர் வரை, சில பரபரப்பு செய்திகள் குறித்த கருத்துகளைப் பகிரச் சொல்லி அவள் விகடன் சோஷியல் மீடியா பக்கங்களில் கேட்டிருந்தோம். வாசகர்கள் பகிர்ந்தவற்றில் சிறந்தவை இங்கே...

அப்போலோ லைஃப்பின் வைஸ் சேர்பெர்சனும், நடிகர் ராம் சரணின் மனைவியுமான உபாசனா சமீபத்தில், `நானும் கணவரும் திருமண வாழ்க்கையில் பத்தாண்டுகளாக மகிழ்ச்சியாக உள்ளோம். எங்களுக்குக் குழந்தை பெற்றுக்கொள்வதில் விருப்பமில்லை. எங்களுக்கென சில இலக்குகள் இருக்கின்றன’ என்று தெரிவித்திருந்தார். ராம்சரண் முன்னரே, `குழந்தை பெற்றுக்கொண்டால் எங்கள் இலக்குகளில் இருந்து விலக வேண்டி வரலாம் என்பதால் நாங்கள் அதைத் தவிர்க்க முடிவெடுத்திருக்கிறோம்’ என்று கூறியிருந்தார். இன்று ‘Child Free’ என்ற முடிவை எடுக்கும் ஆண்கள், பெண்கள், தம்பதிகள் பலர். தனி மனிதர்களின் இந்த முடிவில் குடும்பங்கள், உறவுகள், சமூகம் தலையிடாமல் இருக்க வேண்டியது குறித்த உங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Vaithilingam Govindan

குழந்தை பெற்றுக்கொள்வதில் விருப்பமில்லை, குழந்தைகளைக் கவனிக்க நேரமில்லை போன்ற சூழலில் உள்ளவர்கள், அவர்கள் முடிவு, விருப்பப்படியே குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருந்தால் அவர்கள் வாழ்வில் பல பிரச்னைகள் குறையும். மேலும், பலர் இம்முடிவை நோக்கி நகர்ந்தால் மக்கள் தொகை குறையும்.

`கட்டாயப்படுத்தி பெற்றோர் ஆக்காதீர்கள்!’

Jack Chelladurai

இது அவரவர் தனிப்பட்ட முடிவுகளைச் சார்ந்தது. என்றாலும், தன்னுடைய இனத்தை உற்பத்தி செய்யாத எந்த உயிரினமும் தன் கடமையிலிருந்து தன்னை விலக்கிக்கொள்ள நேரிடலாம்.

VenkatRamanan Rajamani

Child free முடிவு அவரவர் விருப்பம். ஒரு குழந்தையை வளர்க்க நாங்கள் தயாராக இல்லை என்பவர்களை கட்டாயப்படுத்தி பெற்றோர் ஆக்கினால், அக்குழந்தை களை வளர்த்தெடுக்கும் பொறுப்பு அவர்களுக்குக் காலம் முழுக்க சுமையாகவே அமையும். பிள்ளைகளும் கஷ்டப்படுவார்கள்.

Karthic Babu

குழந்தை இல்லாத தம்பதிகள் சிகிச்சைக்கு லட்சங் களில் செலவழிக்காமல் குழந்தையைத் தத்தெடுத்துக் கொள்ளலாம். சிலர், ஏழைக் குழந்தைகளின் கல்வியை தத்தெடுத்துக்கொள்ளலாம். சூழலைப் பொறுத்து சிலர் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம். சிலர் குழந்தை வேண்டாம் என்ற முடிவை எடுக்கலாம். அவரவர் வாழ்வு, அவரவர் முடிவு. இதில் நம் கருத்தை திணிக்க வேண்டிய அவசியமில்லை.

Sudha Duraisamy

செலிப்ரிட்டியோ, சாமான்ய மனிதர்களோ... குழந்தை பற்றிய முடிவுகளில் நமக்குச் சொல்லப்பட்ட, நாம் நம்புகிற பழைமையை அவர்கள் மீது தீர்ப்பாக சுமத்தாமல் இருப்போம்.

மக்கள் தொகை... #1 நோக்கி இந்தியா!

`தற்போது சீனாவின் மக்கள் தொகை 142 கோடி, 60 லட்சம்; இந்திய மக்கள் தொகை 141 கோடி, 20 லட்சம். இந்திய மக்கள் தொகை அடுத்த ஆண்டு சீன மக்கள் தொகையை முந்திவிடும்!’ - ஐ.நா

அரசின் முன்னேற்பாடு திட்டங்கள் தயாராக வேண்டியது, மொத்த மக்கள் தொகையில் உள்ள உழைக்கும் மக்களின் சதவிகிதம் அதிகரிக்க வேண்டியது, தனி நபரின் உற்பத்தி திறன் அதிகரிக்க வேண்டியது என... மக்கள் தொகை பெருக்கத்தை எதிர்கொள்ள தேவையானவை என்ன நீங்கள் நினைப்பது என்ன? மேலும் மக்கள் தொகையில் இந்தியா #1 என்பதன் சாதக, பாதகங்கள் என நீங்கள் நினைப்பவற்றையும் பகிர்ந்துகொள்ளுங்கள்!

Abdul Kani

இப்போதுள்ள மக்களுக்கே வேலை வாய்ப்புகளை வழங்க முடியாமல் அரசு விழிபிதுங்குகிறது. இன்னும் கூடிக்கொண்டே போனால், அடிப்படை கட்டமைப்புகளான உணவு, இருப்பிடம், கல்வி, மருத்துவம், பாதுகாப்பு ஆகியவற்றை அனை வருக்கும் உறுதிப்படுத்த அரசுத் திட்டங்கள் தொலைநோக்குப் பார்வையுடன் தீட்டப்பட வேண்டும்.

Prakash Elambalur

மனித வளத்தை பாசிட்டிவ்வாக பார்க்கலாம். நாட்டின் மனித வளத்தை முழுமையாகப் பயன் படுத்திக்கொள்ளும் வகையில் பொருளாதார வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தினால்... இந்தியா முன்னேற்றத்திலும் நம்பர் ஒன் ஆகும்!

`கட்டாயப்படுத்தி பெற்றோர் ஆக்காதீர்கள்!’

Sarvajitsaravanan

குடும்பக் கட்டுப்பாடு திட்டங்களை தென்னிந்திய மாநிலங்கள் நிறுவிய அளவுக்கு பிற மாநிலங்களில் நிறுவவில்லை. உடனடியாக மக்கள் தொகை கட்டுப்பாட்டுக்குரிய நடவடிக்கைகளை அரசு திட்ட மிடலுடன் மேற்கொள்ள வேண்டும்.

Gomathi Sivayam

உழைக்கும் மக்கள் சதவிகிதத்தை அதிகரிக்க வேண்டும். குறிப்பாக, பெண்களை பணிச்சூழலுக்கு அதிகம் கொண்டு வர வேண்டும்; அவர்கள் உழைப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மனிதவளத்தை பொருளாதார வளர்ச்சிக்குப் பயன்படுத்தக்கூடிய வகையிலான திட்டங்கள் தீட்டப்பட வேண்டும்.

Senthil Yadav

தனிமனிதனின் வருமானத்தை உறுதி செய்ய வேண்டும். மக்கள் தொகையில் ஒரு கூட்டம் பணக்காரர் ஆகிக்கொண்டே போக, இன்னொரு கூட்டம் ஏழை ஆகிக்கொண்டே இருப்பதல்ல நாட்டின் முன்னேற்றம்.

பிரபு எம்

இதில் இன்னொரு விஷயத்தையும் குறிப்பிட வேண்டும். தமிழகம் மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுத் திட்டங்களை சரிவரக் கடைப்பிடித்தது. வட மாநிலங்கள் இப்போது அதிக மக்கள் தொகை அடிப்படையில் அதிக வரிப் பங்கும், அதிகப் பிரதிநிதித்துவமும் பெறுகிறார்கள்.