உலகம் முதல் உள்ளூர் வரை, சில பரபரப்பு செய்திகள் குறித்த கருத்துகளை பகிரச் சொல்லி அவள் விகடன் சோஷியல் மீடியா பக்கங்களில் கேட்டிருந்தோம். வாசகர்கள் பகிர்ந்தவற்றில் சிறந்தவை இங்கே...
`சிசேரியன்... இந்திய அளவில் தமிழ்நாடு இரண்டாம் இடம்!’ - தேசிய குடும்பநல கணக்கெடுப்பு அறிக்கை. இதுபற்றிய உங்கள் கருத்தை, உங்கள் குடும்ப சுகப் பிரசவ, சிசேரியன் பிரசவ அனுபவங்களை பகிருங்களேன்...
Saraswathi Duraisamy
மருத்துவரை குறை கூறாமல், சுகப்பிரசவமாக, பிரசவ நேரத்தில் பெண்களும் ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும்.
Saranya Dhandapani
சுகப்பிரசவத்துக்காக ஆரம்பத்தில் இருந்தே தங்கள் உடலையும் மனதையும் பெண்கள் தயார் செய்ய வேண்டும்.
Banu Jaganath
எனக்குப் பிரசவம் நடந்த தனியார் மருத்துவ மனையில், முடிந்தவரை சுகப்பிரசவத்துக்குத் தான் முயற்சி செய்தார்கள். என் இரண்டு குழந்தைகளுமே சுகப்பிரசவம்தான்.
Ammu Vengades
சில தனியார் மருத்துவமனைகளில், சுகப் பிரசவத்துக்கான சூழல் இருந்தும், பணம் மற்றும் தன் அதிகபட்ச முயற்சியைக் கொடுக்க விருப்பமில்லாத மருத்துவர்களால் சிசேரியன் பிரசவமாக முடித்து விடுகிறார்கள். மேலும், சுகப்பிரசவமாக வேண்டியதையும் வலியைப் பொறுக்க முடியாமல் சிசேரியன் செய்யச் சொல்லும் பெண்களும், குடும் பங்களும் இங்கு உள்ளார்கள் என்பதையும் மறுக்க முடியாது.
Manikandan Kanthasamy
சிசேரியன் என்பது இரண்டு உயிர்களைக் காக்க எடுக்கப்படும் மருத்துவ அடிப்படை யிலான தவிர்க்க முடியாத முடிவு.

தன் மனைவி காலை, மதியம், இரவு என மூன்று வேளைக்கும் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் மட்டும் சமைப்ப தாகவும், அதனால் தனக்கு விவாகரத்து வேண்டும் என்றும் நீதிமன்றத்தை அணுகினார் கணவர். அந்தத் தம்பதி மனமொத்து விவாகரத்து செய்துகொண்டனர். சமைக்கத் தெரியாத பெண்கள் மனைவியாக இருக்கத் தகுதியற்றவர்களா? சமையல் என்பது பெண்ணுக்கான வேலை மட்டுமா? சமையல் உட்பட வீட்டு வேலைகளை பகிர்ந்துகொள்ளத் தயங்கும் கணவர்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
Indira Midhun
பசியெடுக்கும் அனைவருக்கும் சமைக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
Latha Raja
உணவு என்பது உயிர் வாழ அவசியம். சேர்ந்து வாழ, சமையல் தெரிந்திருக்க வேண்டும் என்று அவசியமில்லை. வாழ்க்கைக்கு நிறைய காரணங்களும், அர்த்தங்களும் உள்ளன. பாலின அடிப்படையிலான சுரண்டல் அதில் இருக்கக் கூடாது.
Elakiya M
சமையல் மிகவும் சுவாரஸ்யமானது. இன்றைய தலைமுறையில் மனைவிக்கு சமைத்துக் கொடுக்கும் எத்தனையோ ஆண்கள் இருக் கிறார்கள். அதை அவமானம் என்று பேசும் ஒரு வெட்டிக் கூட்டமும் இருக்கிறது. அவர்கள்தான் முன்னேற்றத்துக்கு முட்டுக் கட்டை.
அகிலா விமல்
சமையல் என்பது மனிதனுக்கு அடிப்படை தகுதி. அது பாலின அடிப்படையில் பார்க்கப்படக் கூடாது.
Asy Quee
விவாகரத்துக்கு இது காரணமாக இருக் காது. பெண்களை குற்றம் சொல்ல இது எளிய காரணம் என்பதால் அது வழக்கில் பதிவு பெற்றிருக்கலாம்.
Saranya Ashok
பசி இருவருக்கும் சமம். இரண்டு பேருக் குமே சமைக்கத் தெரிய வேண்டும்.
Valli Subbiah
முந்தைய தலைமுறை ஆண்கள்தான் வீட்டு வேலையை பகிர்ந்துகொள்ள சிரமப்படுகிறார்கள். பழக்கமில்லாததால் தயங்குகிறார்கள். இன்றைய தலைமுறை ஆண்கள் பலர் அழகாக வீட்டு வேலை களைச் செய்கிறார்கள். பகிர்ந்து கொள் கிறார்கள். குழந்தை வளர்ப்பிலும் பங்களிக்கிறார்கள்.
கேரளாவைச் சேர்ந்த பெண்களான ஆதிலா நஸ்ரின், பாத்திமா நூரா தன்பாலின ஈர்ப்பாளர்கள். பட்டப்படிப்பை முடித்ததும் இருவரும் ஒன்றாக வாழ முடிவு செய்தனர். பெற்றோர்கள் அவர்களைப் பிரித்தனர். கேரள உயர் நீதி மன்றத்தை நாடினார் ஆதிலா. பாத்திமா மற்றும் ஆதிலா வின் கருத்துகளைக் கேட்ட நீதிபதி வினோத் சந்திரன் தலைமையிலான அமர்வு, உரிய வயதுடைய இருவர் விருப்பத்தின்பேரில் இணைந்து வாழத் தடை இல்லை என அறிவித்திருக்கிறது. LGBTQ சமூகத்தினரை நீதிமன்றங் களும் மக்களும் புரிந்து கொள்வதில் ஏற்பட்டுள்ள முன்னேற் றம் குறித்த உங்கள் கருத்துகளை பகிர்ந்துகொள்ளுங்கள்...
Aravind Swamy Nathan
ஒருவர் தனக்கு எப்படி வாழப் பிடிக்கிறதோ, அப்படியே வாழட்டும்.
Mohamed Suhaibu
LGBTQ சமூகம் பற்றியும், அவர்கள் பிரச்னைகள் பற்றியும் மக்களுக்கு விழிப்புணர்வு தரப்பட வேண்டும். அதைப் பற்றிய தொடர் உரை யாடல்கள் அவசியம். பேசப் பேசதான் புனிதங்கள் கரையும்.
Saraswathy Padmanaban
இவர்களை புரிந்துகொண்ட நீதிமன்றமும், சமூகமும் முன்மாதிரி. மாற்றங்கள் தொடரட்டும்.