Published:Updated:

நீதிமன்றங்கள்... நம்பிக்கை தளர்கிறது!

அவளுடன்...
பிரீமியம் ஸ்டோரி
அவளுடன்...

#Avaludan

நீதிமன்றங்கள்... நம்பிக்கை தளர்கிறது!

#Avaludan

Published:Updated:
அவளுடன்...
பிரீமியம் ஸ்டோரி
அவளுடன்...

உலகம் முதல் உள்ளூர் வரை, பரபரப்பு செய்திகள் குறித்த கருத்துகளை பகிரச் சொல்லி அவள் விகடன் சோஷியல் மீடியா பக்கங்களில் கேட்டிருந்தோம். வாசகர்கள் பகிர்ந்தவற்றில் சிறந்தவை இங்கே...

‘ஆபாச உடையணியும் பெண்ணிடம் சீண்டல் குற்றமாகாது’ - கோழிக்கோடு நீதிமன்றம்

கேரள எழுத்தாளர் மீதான பாலியல் வழக்கில், குற்றம் சுமத்திய பெண் பாலியல் இச்சையைத் தூண்டும் விதமாக உடை யணிந்திருந்ததால் சட்டப் பிரிவு 354ஏ குற்றம் சாட்டப்பட்டவருக்கு பொருந்தாது எனத் தெரிவித்துள்ள கோழிக்கோடு நீதிமன்றம், எழுத்தாளருக்கு முன் ஜாமீன் வழங்கியுள்ளது. இதை பற்றிய உங்கள் கருத்து..?

Sathanandam

தங்கள் ஆணாதிக்க சிந்தனையை நீதிபதிகள் தீர்ப்பில் வெளியிடுவது அவலம்.

Radhakrishnan S

காமவெறி பிடித்தவனுக்கு இந்தத் தீர்ப்பு சாதகமாக அமையும், ஆபத்தில் முடியும். தவறான தீர்ப்பு.

Jafar Ali Shahul

நீதிமன்றங்களிடம் நீதி வேண்டி செல்லும் மக்களின் நம்பிக்கை இதுபோன்ற தீர்ப்புகளால் தளர்கிறது.

நீதிமன்றங்கள்... நம்பிக்கை தளர்கிறது!

Nithiya Balakrishnan

விவசாயத்தின் போதும் வீட்டு வேலைகளைச் செய்யும் போதும் பெண்களின் உடையில் எந்தளவுக்கு கவனம் இருக்கும்? அதற்காக, அப்போது அவர்களை பாலியல் தொல்லை செய்வது குற்றமாகாதா? உடை என்பது தனிப்பட்டவரகளின் தேர்வு, விருப்பம். மனிதர்களுக்கும், மிருகங்களுக்கும் உள்ள வேற்றுமை, பொதுவெளியில் பாலுணர்வை அடக்கத் தெரிவதே. ஆனால், இந்தத் தீர்ப்பு யாருக்கு சாதமாக அமைகிறது பாருங்கள்.

Anandababu Jayapal

நீதித்துறையில் சீர்திருத்தம் தேவை.

Dhanaraj

80 ஆண்டுகளுக்கு முன் நம் தாய்மார்கள் மேல்சட்டையே அணியவில்லை. பின்னர் நாகரிக வளர்ச்சியில் உடை யில் பல மாற்றங்கள். இப்போது அந்தப் பெண்களை பாலியல் தொல்லைக்கு ஆளாக்கும் நபரின் குற்றத்தன்மையைக் குறைத்துச் சொல்வதையும் என்னவென்று சொல்ல?

Shanmugasundaram K

‘கோர்ட்டே சொல்லிடுச்சு’ கூக்குரல்கள் அதிகரிக்கும்.

Vetri Chelvan

பல தடவை சொல்வதுதான். ஐந்து வயது சிறுமியை கூட சிறார்வதை செய்கிறார்கள். குற்றத்தின் நோக்கத்தைப் பார்க்காமல், பெண்ணின் ஆடையை நீதிமன்றமே காரணமாகச் சொல்வது... அயர்ச்சியாக இருக்கிறது.