Published:Updated:

உள்ளங்கையில் பிசுபிசுக்கும் ஆரஞ்சுமிட்டாய்!

சுதந்திர தினம்
பிரீமியம் ஸ்டோரி
சுதந்திர தினம்

#Avaludan

உள்ளங்கையில் பிசுபிசுக்கும் ஆரஞ்சுமிட்டாய்!

#Avaludan

Published:Updated:
சுதந்திர தினம்
பிரீமியம் ஸ்டோரி
சுதந்திர தினம்

75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறோம். சுதந்திர தினம் என்றதும் உங்களுக்கு நினைவுக்கு வரும் ஓர் அனுபவம் அல்லது விஷயம் குறித்து #Avaludan என்ற ஹேஷ்டேக்குடன் பகிர்ந்துகொள்ளுங்கள் என்று அவள் விகடன் சோஷியல் மீடியா பக்கங்களில் கேட்டிருந்தோம். வாசகர்கள் பகிர்ந்த வற்றில் சிறந்தவை இங்கே..

Saraswathi Duraisamy

52 ஆண்டுகளுக்கு முன் பள்ளியில் படித்தபோது, மாணவி தலைவியான நான் சுதந்திர தினத்தன்று கொடி யேற்ற கொடித்துணியை கம்பத்தில் கட்டிவைக்கும் பொறுப்பை பொறுப்பாகச் செய்தது நினைவில் வந்து மகிழ்ச்சி கொடுக்கிறது.

உள்ளங்கையில் பிசுபிசுக்கும் ஆரஞ்சுமிட்டாய்!

Ravikumar Krishnasamy

சுதந்திர தினத்தன்று பள்ளி நாள்களில் உள்ளங்கைக்குள் பிசுபிசுக்கும் ஆரஞ்சு மிட்டாயும், மூவர்ண கொடியும் நினைவில் ஆடுகிறது. இனம் புரியாத ஒரு பரவசத்துடன், அன்று மட்டும் ஏதோ ஒரு ராணுவ வீரன் போல நடமாடு வேன். அரசியல் புரிய ஆரம்பித்ததும் வெறுமை சூழ்ந்து கொண்டது. சுதந்திரத்தை சரியாகப் பயன்படுத்துகிறோமா என சந்தேகமாக இருக்கிறது.

Vaira Bala

1997-ல் சுதந்திர தின பொன்விழாவுக்காக, நான் பணியாற்றிய கூத்தாநல்லூர் அ.மே. பள்ளியில் என் மூத்த மகளுக்கு பாரத மாதா வேடமிட்டு எம்பள்ளி மாணவர்களுடன் நகர் முழுவதும் வலம் வந்ததை, ஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும் ரீவைண்ட் செய்து மகிழ்வேன்.

K. Palpandi Shree

வெள்ளையனை விரட்டி அடிக்க முதன்முதலில் குரல் கொடுத்தது நமது தமிழ்மண் என்பது முதலில் ஞாபகத் துக்கு வரும். ’சுதந்திரம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன்’ என கர்ஜித்த பாலகங்காதர திலகர் ஞாபகத்திற்கு வருவார். வெள்ளையனை விரட்டியடிக்க தேசிய ராணுவப் படையை நிறுவிய சுபாஷ்சந்திரபோஸ் நினைவுக்கு வருவார். செக்கிழுக்க வைத்தார்களே செம்மல் வ.உ.சி, அவர் நினைவுக்கு வருவார். பாடல்கள் மூலம் நாட்டுப்பற்றை தட்டி எழுப்பிய மகாகவி பாரதியார் நினைவுக்கு வருவார். உயிரே போனாலும் கொடியை விடாமல் பிடித்துக்கொண்டிருந்த கொடிகாத்த குமரன் நினைவுக்கு வருவார்.

Venkatesan Kumarasamy

சிறு வயதில் சுதந்திர தினம் என்றால், பள்ளிக்கூடத்துக்கு விடுமுறை தினம் என்ற உற்சாகம் தொற்றிக்கொள்ளும். அதிகாலையில் கொடியேற்றிவிட்டு வீடு திரும்பிய பின், ஒரே ஆட்டம்தான்.

Kumaravel Devaraya

இரவிலே வாங்கினோம் இன்னும் விடியவில்லை என்ற வரிகள் நினைவில் எழுவது வாடிக்கையாகிவிட்டது.

Harihara Bramma Priya

ஆங்கிலேயர்களுக்கு வரி கட்டியதில் இருந்து விடுதலை கிடைத்துவிட்டது. இப்போது கட்டிக்கொண்டிருக்கும் அதிக வரிகளில் இருந்து விடுதலை எப்போது?