Published:Updated:

சுகம் இல்ல, ஏலாது, தூரம்... மாநிலம் முழுக்க மாதவிடாய் சொற்கள்!

மாணவர்கள்
பிரீமியம் ஸ்டோரி
மாணவர்கள்

#Avaludan

சுகம் இல்ல, ஏலாது, தூரம்... மாநிலம் முழுக்க மாதவிடாய் சொற்கள்!

#Avaludan

Published:Updated:
மாணவர்கள்
பிரீமியம் ஸ்டோரி
மாணவர்கள்

உலகம் முதல் உள்ளூர் வரை, சில பரபரப்பு செய்திகள் குறித்த கருத்துகளை பகிரச் சொல்லி அவள் விகடன் சோஷியல் மீடியா பக்கங்களில் கேட்டிருந்தோம். வாசகர்கள் பகிர்ந்தவற்றில் சிறந்தவை இங்கே...

UNICEF அமைப்பு, ‘How do you say “I have my period” in your language?’ என்று கேட்டதற்கு, உலகெங்கிலும் இருந்து ஆயிரக்கணக் கான பதில்கள் குவிந்துள்ளன. உங்கள் பகுதிகளில் குறிப்பிடும் விதத்தைப் பகிர்ந்துகொள்ளுங்கள்; அந்த வார்த்தைகளின் மூலம் மாதவிடாயை சமூகம் எப்படிப் பார்க்கிறது என்பதைப் புரிந்துகொள்வோம்.

Karthikabuvaneshwari

தல குளிச்சிட்டேன். வீட்டுக்கு தூரம்.

Ramya Mahalingam

வீட்டில் இல்லை, தூரம்.

Jafer Sadiq Salman

தொழுகை இல்லை.

Shranya Swaminathan

சம்ஸ் (Chums).

Ramya Raghupathy

Date time.

Deepa Deepika

தலைக்கு ஊத்திக்கிட்டியா? வீட்டுக்கு விலக்கா?

Sasikala Ramnatarajan

வீட்டுக்குத் தூரம்

Deepa Jayapragasam

சுகம் இல்ல.

Ksk Porkodi

தலைக்கு ஊத்திக்கிட்டேன்.

Prashanthi Sridharan

தண்ணி ஊத்திக்கிட்டேன்.

Easwarajanani Dharvesh

ஏலாது.

தங்கப்ரியா சுந்தரம்

தீட்டு.

Sala Senthilnathan

தூரம்.

Valli Ravi

தோது இல்ல.

Mns Mns

வயிற்று வலி.

Saranya Ashok

வாசலை.

Suganthi Venkatesh Kumar

வசதி இல்லை.

Barkath Don

Orange.

Sushma

வெளியே போயிட்டியா?

சுகம் இல்ல, ஏலாது, தூரம்... மாநிலம் முழுக்க மாதவிடாய் சொற்கள்!

ஆசிரியர்களுக்கு உடல்/மன ரீதியாகத் தொந்தரவு தரும் மாணவர்களுக்கு TC கொடுத்து பள்ளியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்கள் எனப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியிருப்பது குறித்து உங்கள் கருத்து என்ன?

Anbu Bala

ஒரு தலைமை ஆசிரியையாகச் சொல்கிறேன். இதுபோன்ற சூழலில், பெற்றோரை வரவழைத்து, மாணவனுக்கு கவுன்சலிங் கொடுத்து, டி.சி கொடுக்கப்பட்டால் என்ன ஆகும் என்று எடுத்துக்கூறி, சிறிது காலம் திருந்த அவகாசம் கொடுத்து, அவ்வாறும் சரிசெய்ய முடியவில்லை என்றால், அரசின் முடிவுக்குச் செல்லலாம்.

Samaneethi Cholan

பள்ளி என்பது தவறு செய்யும் மாணவர்களைத் திருத்துவதற்கே, அவர்களை நீக்குவதற்கு அல்ல.

Rocky Shiv

மாணவர்களுக்கு டி.சி தருவது இருக்கட்டும். பள்ளிகளில் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஆசிரியர்களை நிரந்தரப் பணிநீக்கம் செய்தீர்களா என்ன?

Hema

பள்ளி - ஆசிரியர்கள் - மாணவர்கள் - பெற் றோர் - சமூகம் என எல்லா தரப்பிலும் இருக்கும் பிரச்னைக்கு, தண்டனை மாணவர் களுக்கு மட்டுமா?

Kiruthika

நல்ல முடிவு. அதேபோல, மாணவ, மாணவி யருக்கு மன, உடல் ரீதியாக டார்ச்சர் தரும் ஆசிரியர்களை உடனடியாக வேலையை விட்டு நிரந்தரமாக நீக்க வேண்டும். களை எங்கிருந்தாலும் அகற்றப்பட வேண்டும்.

ஹபீப் ரஹ்மான் ம.ஜ.க

தங்களுக்குப் பிடிக்காத மாணவர்களை தண்டிக்க ஆசிரியர்கள் இதைப் பயன் படுத்தி னால் என்ன செய்வது? எல்லா ஆசிரியர்களும் அப்படி செய்ய மாட்டார்கள் என்றாலும், ஒரு மாணவர் அந்த வகையில் பாதிக்கப் பட்டாலும் அவர் எதிர்காலத்துக்கு யார் பொறுப்பு?

Janaki Paranthaman

இப்படிப்பட்ட மாணவர்களுக்கு கவுன்சலிங் கொடுப்பது, சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்து திருத்துவது எனச் செய்ய வேண்டுமே தவிர, தண்ணீர் தெளித்து அனுப்புவது தவறு. அது சமுதாயத்துக்கும் கேடு.

மத்திய சமூக நீதித்துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், ‘அன்னையர் தினம் கொண்டாடப்படுவதைப் போல, மனைவிகளுக்கு என்று ஒரு தினம் கொண்டாடப்பட வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தது வைரல் ஆனது குறித்து உங்கள் கருத்துகள்...

Gomathi Sivayam

கணவனால் நிறைவேற்ற முடிகிற மனைவியின் ஆசைகளைக் கேட்டுத் தெரிந்துகொள்ளும் தினமாக, நிறைவேற்றும் தினமாக மனைவியர் தினத்தைக் கொண்டாடலாமே?!

Lakshmi Vasan

ஒவ்வொரு சிறப்பு தினத்திலும், அது குறித்த கோரிக்கை, உரிமைக் குரல்கள் மேல் எழும்புவதுபோல, மனைவியர் தினத்தில் ரிலேஷன்ஷிப்பின் பல பரிமாணங்களும் பேசப்படட்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism