தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

“காதலையும் வன்முறையையும் பிரித்தறிய வேண்டும்!”

வாடகைத் தாய்
பிரீமியம் ஸ்டோரி
News
வாடகைத் தாய்

#Avaludan

உலகம் முதல் உள்ளூர் வரை, பரபரப்பு செய்திகள் குறித்த கருத்துகளை பகிரச் சொல்லி அவள் விகடன் சோஷியல் மீடியா பக்கங்களில் கேட்டிருந்தோம். வாசகர்கள் பகிர்ந்தவற்றில் சிறந்தவை இங்கே...

Stalking வன்முறை... தீர்வு என்ன?

சென்னை, ஆலந்தூரைச் சேர்ந்த கல்லூரி மாணவி சத்யாவை, அவருக்கு விருப்பமில்லாமல் பின்தொடர்ந்து (Stalking) பிரச்னை செய்துவந்த சதீஷ், மின்சார ரயில் முன் அவரை தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம், நாட்டையே அதிர வைத்துள்ளது. இதுதொடர்பாக கைது செய்யப்பட்டிருக்கும் சதீஷை சிபிசிஐடி போலீஸார் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். பெண்கள் எதிர்கொள்ளும் ஸ்டாக்கிங் வன்முறை, இதில் ஆண்களின் மனநிலை குறித்த உங்கள் அனுபவங்கள், கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்...

Prabha Karan

ஆண்களின் மனநிலையில் மாற்றம் கொண்டுவருவது என்பது, தொலைதூர தீர்வு. பெண்கள் தங்களுக்கான பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். பெற்றோர், ஆசிரியர்கள், ஹெல்ப்லைன்கள், காவல் நிலையம் என, தேவைப்படும்போது தயங்காமல், தவிர்க்காமல் உதவி கேட்க வேண்டும்.

Jegan Devendrar

`காதலை’ பொறுப்புணர்வற்று கையாளும் சினிமாக்கள், கடிவாளம் இல்லாத ஆன்லைன் கன்டன்ட்டுகள், மாணவர்கள் வரை சீரழிக்கும் போதை என, குற்றவாளி களை உருவாக்குகின்றன சமூக சீர்கேடுகள். அந்தக் குற்றவாளிகளால் பலியாக்கப்படுவது பெரும்பாலும் பெண்களாக இருப்பது துயரம்.

Sundar Muthu

ஸ்டாக்கிங், பாலியல் தொல்லை போன்ற புகார்கள் பதிவுக்கு வரும்போது, காவல்துறை இருதரப்பையும் அழைத்து `பஞ்சாயத்து’ பேசாமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான சட்ட தண்டனை கடுமையாக் கப்பட வேண்டும்.

Lakshmi Kanthan

காதல் என்பது இரு மனம் சம்பந்தப்பட்டது. இதுபோன்ற வன்முறைகளை, ‘காதல் பிரச்னை’, ‘ஒருதலைக் காதல்’, ‘காதலுக்கு சம்மதம் தெரிவிக்காததால்...’ என்று குறிப்பிடுவதே தவறு. இது, ஒருவருக்கு விருப்பமில்லாமல் அவரை பின்தொடரும் Stalking பிரச்னை. இதை பாலியல் தொல்லை, வன்முறை என்று குறிப்பிட வேண்டும். காதலையும் வன்முறையையும் பிரித்தறியும் சமூகமாக நாம் மாற வேண்டும்.

அவள் விகடன் ட்விட்டர் பக்கத்தில்... பெண்கள் எதிர்கொள்ளும் ஸ்டாக்கிங் வன்முறைக்குத் தீர்வு... வாசகர்களின் கருத்து

“காதலையும் வன்முறையையும் பிரித்தறிய வேண்டும்!”

வாடகைத் தாய்... உங்கள் கருத்து என்ன?

`வாடகைத் தாய் முறை உடலியல் காரணங் களால் குழந்தை பெற முடியாத பெற்றோருக்கு வரம்’, `வாடகைத் தாய் சுரண்டப்படுகிறார்’, ‘வாடகைத்தாய் தொடர்பான சட்டத்தில் கடுமை யான கடிவாளம் தேவை’, ‘வாடகைத்தாய் முறையையே ஒழிக்க வேண்டும்’ என பலதரப்பட்ட கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், இதில் உங்கள் அனுபவம், கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்...

“காதலையும் வன்முறையையும் பிரித்தறிய வேண்டும்!”

mr_nandhukutty

பெண் என்றால், sorry... குடும்பப் பெண் என்றால் குழந்தை பெற்றுத்தரும் இயந்திரம் என்ற எண்ணம் நிறைந்த சமூகமும், குழந்தை பெற்றால் தன் அழகு போய்விடும் என்று நினைக்கும் பெண்களும் மாறினால்... வாடகைத் தாய் முறையின் அவசியம் இல்லாமல் போய்விடும்.

parthi17214

உடல்நிலைக் காரணங்களால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத தம்பதிகளுக்கு வரம், வரவேற்கிறோம். இன்னொரு பக்கம் இதிலுள்ள சுரண்டல்கள், சட்ட ஏய்ப்புகள் ஒழிக்கப்பட வேண்டும்.

chandran3139

ஒரு மருத்துவ முன்னேற்றத்தைப் பயன்படுத்திக்

கொள்வதே சமூக முன்னேற்றம். அதில் தவறுகள், குற்றங்கள் நடப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்குவது மனித மூளையே. அதே மனித மூளையைக் கொண்டு உருவாக்கும் மருத்துவ, சட்ட கடிவாளங்களால் அந்த தவறுகளை, குற்றங்களைக் களைய வேண்டும்.

sam_sampath_96

வாடகைத் தாய் பெண்கள், பணம் முதல் அவர்களுக்கான சட்ட உரிமைகள் வரை சுரண்டப்பட்டு ஏமாற்றப்படும் பிரச்னைகள், சமூகத்தின் பார்வைக்கும், நீதிமன்றத்தின் காதுகளுக்கும் செல்ல வேண்டும். அப்போதுதான், அவர்களுக்கான தீர்வுகள் வெறும் சட்ட புத்தகத்தில் மட்டுமே இல்லாமல், மக்களின் சமூகக் கடமையோடு செயலாக்கத்துக்கு வரும்.

taarthithiyagu

எத்தனையோ ஆதரவற்ற குழந்தைகள் ஆசிரமத்தில் வளர்கிறார்கள். அந்தக் குழந்தைகளை தத்து எடுத்து வளர்க்க லாமே? `எனக்கு வாரிசு வேண்டும்’, ‘என் வாரிசு வேண்டும்’ என்ற ஆணாதிக்கம் தளர்ந்தால், வாடகைத் தாய் முறையின் தேவை இல்லாமல் போகுமே!

rekka1910

வாடகைத் தாய் முறை மூலம் குழந்தை பெற முடிவெடுப்பதற்கு முன்னர், அந்தத் தம்பதி ஒருமுறை ஆதரவற்ற குழந் தைகள் வசிக்கும் ஆசிரமத்துக்குச் சென்று வரலாம். பூமியில் பெற்றோர் இல்லாமல் இத்தனை உயிர்கள் இருக்கும்போது, அதில் ஒரு குழந்தைக்கு நாம் பெற்றோர் ஆகலாம் என்ற எண்ண மாற்றம் ஏற்பட ஒரு வாய்ப்பு தந்து பார்க்கலாமே..!

அவள் விகடன் ட்விட்டர் பக்கத்தில்... வாடகைத் தாய் முறை...வாசகர்களின் கருத்து

“காதலையும் வன்முறையையும் பிரித்தறிய வேண்டும்!”