ஆசிரியர் பக்கம்
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

“எங்க ரோட்டுக்கு வாங்க... நார்மல் டெலிவரி ஆகிடும்!”

  கன்னிமார் கோயில் புதூர் பஸ் நிலையம்...
பிரீமியம் ஸ்டோரி
News
கன்னிமார் கோயில் புதூர் பஸ் நிலையம்...

#Avaludan

உலகம் முதல் உள்ளூர் வரை, பரபரப்பு செய்திகள் குறித்த கருத்துகளை பகிரச் சொல்லி அவள் விகடன் சோஷியல் மீடியா பக்கங்களில் கேட்டிருந்தோம். வாசகர்கள் பகிர்ந்தவற்றில் சிறந்தவை இங்கே...

சாலை, பள்ளி, கட்டடம், பாலம்... உங்கள் ஊரில் நிலை என்ன?

குஜராத் மாநிலம், மோர்பி பகுதியிலுள்ள கேபிள் பாலம் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளான வீடியோ காட்சிகள் நாட்டையே பதறவைத்தன. அப்போது பாலத்தில் நின்றுகொண்டிருந்த நூற்றுக்கணக்கான மக்களில் 140 பேருக்கு மேல் பலியாகிவிட, 170 பேர் காப்பாற்றப்பட்டு, பலர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர். பாலத்தை முறையாக பழுது பார்த்திருந்தால் இந்த விபத்து தவிர்க்கப்பட்டிருக்கும் என, காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்து, பாலம் பராமரிப்பு ஒப்பந்ததாரர்களை விசாரணை காவலில் எடுக்கக் கோரியுள்ளனர். இதுபோல், உங்கள் ஊர்/ஏரியாவில் உரிய பராமரிப்பின்றி இருந்த இடங்களால் நடந்த விபத்துகள், இப்போதும் ஆபத்தை சுமந்திருக்கும் பராமரிப்பற்ற சாலை, பள்ளி, கட்டடம், பாலம் உள்ளிட்ட இடங்கள் பற்றி பகிர்ந்து கொள்ளுங்கள்...

“எங்க ரோட்டுக்கு வாங்க... நார்மல் டெலிவரி ஆகிடும்!”

Ponnusamy Rahul

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தாலுகா, எம். களிப் பாளையம் கிராமம், கன்னிமார் கோயில் புதூர் பஸ் நிலைய போட்டோக்களை பாருங்கள் (எதிரே உள்ளன).

TN CM HELPLINE ஆப்பில் புகார் பதிவு செய்து ஏழு மாதங்கள் ஆகின்றன. இதுவரை நடவடிக்கை இல்லை. இந்த மழைக்காலத்தில் சுவர் பெயர்ந்து விழுந்து கொண்டே இருக்கிறது.

xaviernepoleon

திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் பாலம்… 10 ஆண்டு களுக்கு மேல் கிடப்பில்தான் இருக்கு.

malarthomas72

மதுரை அரசரடி சிக்னலில் இருந்து சிம்மக்கல் வரை உள்ள சாலை, மற்றும் மெஜுரா கோட்ஸ் பாலத்தில் உள்ள சாலை பழுதடைந்துள்ளது. ஒவ்வொரு முறை பயணிக்கும்போதும் பயம் உடன் வருகிறது.

donjothidon

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி தாலுகா, தின்ன அள்ளி ஆதிதிராவிடர் காலனியில் முறையான கால்வாய் இல்லாமல் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். என்றைக்கு வரு வார்கள் அதிகாரிகள்?

  கன்னிமார் கோயில் புதூர் பஸ் நிலையம்...
கன்னிமார் கோயில் புதூர் பஸ் நிலையம்...

gowtham_balamurugan

பொள்ளாச்சி சாலைகள்... உயிருக்கு ஆபத்தான பயணம்.

this_is_sukumar

எங்க ஊர்ல நான் ஒண்ணாவது படிச்சப்போ ரோடு போட்டாங்க. அப்புறம், நாலு தடவை ரோடு போடுறேன்னு சொல்லி சொல்லி, காச வாங்கி பாக்கெட்ல போட்டுக் கிட்டாங்க.

mohan_karthik055

கோயம்புத்தூர் டவுன்ஹால் டு செல்வபுரம் ரோடு... கொஞ்சம் வந்து பாருங்க. விவேக் ஒரு படத்துல சொல்ற மாதிரி, ஈஸியா நார்மல் டெலிவரி ஆகிடும்!

udaya_s14

விழுப்புரம் மாவட்டம், வானூர் தாலுகா, அப்பிராம்பட்டு கிராமம் - 605111. ரோடு போடறதுனா என்னன்னே எங்க ஊருக்கு, தெருவுக்குத் தெரியாது. குழந்தைங்களுக்கு மழைக்காலத்துல பாதுகாப்பில்ல, அடிக்கடி விழுவாங்க. முதல்வருக்கு ஆன்லைன் புகார் அனுப்பி யும், எந்த பலனும் இல்ல.

சதாம் நாம் தமிழர்

கும்பகோணம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை சாலை இரண்டு வருடங்களாக மிக மோசமாக உள்ளது. அதில் தினமும் 50 மாடுகள் சுற்றுகின்றன. இதனால் விபத்துகள் அதிகம் நிகழ்கின்றன. இரண்டு மாதங்களுக்கு முன் நகராட்சி ஊழியர் ஒருவர் மாடு முட்டி இறந்தார். அடிக்கடி விபத்து நடக்கும் பகுதி. கடந்த ஒரு வருடத்தில் 20-க்கும் மேற்பட்ட விபத்துகள் நடந்துள்ளன.