Published:Updated:

கண்டிப்பு என்ற பெயரில் துன்புறுத்தலாமா?

Avaludan
பிரீமியம் ஸ்டோரி
Avaludan

#Avaludan

கண்டிப்பு என்ற பெயரில் துன்புறுத்தலாமா?

#Avaludan

Published:Updated:
Avaludan
பிரீமியம் ஸ்டோரி
Avaludan

உலகம் முதல் உள்ளூர் வரை, சில பரபரப்பு செய்திகள் குறித்த கருத்துகளை பகிரச் சொல்லி அவள் விகடன் சோஷியல் மீடியா பக்கங்களில் கேட்டிருந்தோம். வாசகர்கள் பகிர்ந்தவற்றில் சிறந்தவை இங்கே...

கலிஃபோர்னியாவில் உள்ள கூகுள் நிறுவனத்தில், ஒரே பதவி. ஆனால், ஆண்களைவிட பெண்களுக்குக் குறைவான சம்பளம், தகுதிக்குக் குறைவான வேலை யில் பெண்களை ஈடுபடுத்துவது என பாலின பாரபட்சம் காட்டுவதாக கூகுள் நிறுவனத்தின் முன்னாள் பெண் ஊழியர்கள் 2017-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தனர். இந்த விசாரணை நடந்துகொண்டிருக்கும் நிலையில் கூகுள் நிறுவனம், 2013-ம் ஆண்டு முதல் கலிஃபோர்னியா வில் உள்ள கூகுளில் பணிபுரியும் 15,500 பெண் ஊழியர் களுக்கு சுமார் 118 மில்லியன் டாலர் இழப்பீடு தொகை வழங்குவதாக அறிவித்துள்ளது. தட்டுங்கள் திறக்கப் படும் என்ற இந்தச் சம்பவம் குறித்தும், உங்கள் பணிச் சூழலில் சந்திக்கும் பாலின ஊதியப் பாகுபாடு, பாரபட்சம் பற்றியும் பகிர்ந்துகொள்ளுங்கள்...

கண்டிப்பு என்ற பெயரில் துன்புறுத்தலாமா?

Saraswathy Padmanaban

எங்கள் நிறுவனத்தில், `வேலை நேரத்தை அதிகப்படுத்தி உங்களிடம் வேலை வாங்க முடியவில்லை’ என்று பாரபட்ச ஊதியம் வழங்கினார்கள். ஒரு முறை தொழிலாளர்

நல ஆய்வாளர் ஆய்வு செய்தபோது, அனுபவம் மிகுந்த பெண் ஊழியர்களுக்கு ஆண் ஊழியர்களுக்கு நிகரான ஊதியம் வழங்கப்பட வேண்டும், பாரபட்சம் இருப்பின் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்துச் சென்றார்.

Sathia Moorthi

ஆணுக்குப் பெண் எந்த விதத்திலும் சளைத்தவர் அல்லர். சமமான ஊதியம் வழங்குவது அவர்களுக்கு தரும் சலுகை அல்ல; உரிமை.

Janaki Paranthaman

வாயுள்ள பிள்ளைதான் பிழைக்கும் என்பார்கள். கூகுள் பெண்களுக்கு பாராட்டுகள். பெண்கள் தங்கள் பணியிடங் களில் பாலின ஊதிய பேதத்துக்கு எதிராகக் குரல் எழுப்ப வேண்டிய காலம் இது.

டெல்லியில் ஒரு தாய், வீட்டுப்பாடம் செய்யாததால் தன் 5 வயது மகளைக் கொளுத்தும் வெயிலில் வீட்டின் மொட்டைமாடியில் கட்டிவைத்துவிட்டுச் சென்றுள்ள வீடியோ வைரலாகியுள்ளது. அந்தச் சிறுமி தன்னை விடுவிக்குமாறு முணுமுணுப்பதும், அழுவதும் அந்த வீடியோவில் காட்டப்பட்டிருக்கிறது. இதையடுத்து, டெல்லி காவல்துறை, இந்த விவகாரத்தில் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. கண்டிப்பு என்ற பெயரில் குழந்தைகளுக்கு இப்படி கொடூரமான தண்டனைகள் கொடுக்கும் பெற்றோர்கள் பற்றிய உங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்...

சின்ன கனி

குழந்தைங்க காலையில பள்ளிக்குப் போனா சாயங்காலம் வீட்டுக்கு வருதுங்க. அதுக்கு அப்புறமாவது நிம்மதியா கொஞ்சம் நேரம் விளையாட விடுறதில்ல. ஹோம்வொர்க் நேரத்துல பெற்றோர்கள், குறிப்பா அம்மாக்கள் கொடுக்குற தண்டனைகள் எல்லாம் கொடூர ரகம்.

Rebi Rebi

கண்டிப்பு என்பது நல்வழிப்படுத்துவதாக இருக்க வேண்டும். குழந்தைகளை துன்புறுத்துவதாக, அவர்கள் பெற்றோர்களை வெறுக்க வைப்பதாக இருக்கக் கூடாது.

Kumar M R

குழந்தைகளை மார்க் முட்டையிடும் பிராய்லர் கோழிகளாக எதிர்பார்க்கும் பெற்றோர்கள், தாங்கள் மிருகத்தனத்துக்கு மாறிவிடுகிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism