உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில், ராமர் கோயில் கட்டுவதற்காக ஆகஸ்ட் 5-ம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அயோத்தி சரயு நதிக்கரையில் உள்ள சர்ச்சைக்குள்ளான 2.77 ஏக்கர் நிலத்தில் மூன்று அடுக்குகள், ஐந்து மண்டபங்கள் மற்றும் 161 அடி கோபுரம் கொண்ட ராமர் கோயில் கட்டப்படவிருக்கிறது.

கொரோனா பரவல் காரணமாக அடிக்கல்நாட்டு விழாவுக்கு 175 பேர் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர். டெல்லியிலிருந்து லக்னோவுக்கு தனி விமானத்தில் வந்த பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அயோத்தி வந்தடைந்தார். பாரம்பர்ய பட்டு வேட்டி, குர்தா அணிந்து வந்திருந்த மோடி, அயோத்தி அனுமர் கோயிலுக்குச் சென்றார். 28 ஆண்டுகளுக்குப் பிறகு மோடி அயோத்தி நகருக்குள் சென்றிருக்கிறார். இதன் பின்னணியில் மோடியின் சபதம் ஒன்று உள்ளது.

காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யக் கோரி கன்னியாகுமரியில் தொடங்கிய யாத்திரை 1992, ஜனவரி 18-ம் தேதி அன்று அயோத்தியில் நிறைவடைந்தது. அந்த நிகழ்வில் பா.ஜ.க மூத்த தலைவரான முரளி மனோகர் ஜோஷியுடன் கலந்துகொண்ட மோடி, ‘ராமர் கோயில் கட்டப்பட்ட பிறகே என் பாதங்கள் அயோத்தியைத் தொடும்’ என்று சபதமெடுத்தார். அதன் பிறகு தேர்தல் பிரசாரத்துக்காக மோடி லக்னோ சென்றாலும், அயோத்திக்கு முந்தைய இடமான பைஸாபாத்துடன் தனது பிரசாரத்தை முடித்துக்கொண்டார். காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்தாகி ஒரு வருடம் நிறைவடைந்த ஆகஸ்ட் 5-ம் தேதி மோடி அயோத்தியில் நுழைந்தது, ஓர் ஆச்சர்யமான ஒற்றுமைதான்.

அதன் பிறகு, தற்காலிகக் கூடாரத்திலுள்ள குழந்தை ராமர் (ராம் லல்லா) கோயிலுக்குச் சென்ற மோடி, சாஷ்டாங்கமாகக் கீழே விழுந்து வணங்கினார். வேத மந்திரங்கள் ஓதி முடித்த பின்னர், மதியம் 12:44 மணியளவில் மோடி, ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், ராமஜென்ம பூமி இயக்கம் பற்றிய தகவல்கள் பொறிக்கப்பட்ட 40 கிலோ வெள்ளி செங்கற்களை எடுத்துக் கொடுத்து, கட்டுமானப் பணிகளையும் தொடங்கிவைத்தார்.

“அயோத்தி ராமர் கோயில் இந்திய கலாசாரத்தின் நவீன அடையாளம்’’ என்ற பிரதமர் மோடி, “ராமரின் வரலாற்றை அழிக்கும் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது’’ என்று குறிப்பிட்டார். மேலும், “தமிழிலுள்ள கம்பராமாயணம் போன்று பல்வேறு மொழிகளிலும் ராமாயணம் புழக்கத்தில் உள்ளது. இஸ்லாமிய நாடான இந்தோனேஷியாவிலும் ராமாயணம் இருக்கிறது’’ என்றார். `அயோத்தி அனுமன் கோயில், ராமஜென்ம பூமி இடத்துக்குச் சென்ற முதல் பிரதமர்’ என்ற பெருமையையும் இதன் மூலம் மோடி பெற்றார். கோயில் ஒன்றின் அடிக்கல்நாட்டு விழாவில் கலந்துகொண்ட இந்தியாவின் முதல் பிரதமரும் மோடியே.