Published:Updated:

'நம்ம மெட்ரோ' - மொபைல் ஆப் மூலம் டிக்கெட் புக்கிங்; பெங்களூரு மெட்ரோ புதிய முயற்சி!

மெட்ரோ

பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகம், மக்கள் நெடுநேரம் வரிசையில் நின்று டிக்கெட் வாங்குவதைத் தவிர்க்கும்விதமாக, மொபைல் ஆப் மூலம் டிக்கெட் புக்கிங் செய்ய `நம்ம மெட்ரோ' எனும் ஆப்-ஐ அறிமுகம் செய்திருக்கிறது.

பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகம் மொபைல் ஆப் வாயிலாக டிக்கெட் புக்கிங் செய்வதற்காக, 'நம்ம மெட்ரோ' என்ற ஆப்-ஐ கடந்த வாரம் வெளியிட்டிருக்கிறது. இதுவரை, 'கியூ ஆர்' கோடுடன் அச்சிடப்பட்ட காகிதத்திலான டிக்கெட் வழங்கப்பட்டது. மக்கள் இந்த டிக்கெட்டை வைத்துத்தான் மெட்ரோ ரயிலில் பயணிக்க முடியும்.

மெட்ரோ
மெட்ரோ

இந்த நிலையில், டிக்கெட் கவுன்ட்டரில் மக்கள் வரிசையில் நின்று நேரத்தை விரயமாக்குவதையும், சூழலை மேம்படுத்த காகிதத்தின் பயன்பாட்டைக் குறைக்கவும், மொபைல் ஆப்பிலேயே கியூ ஆர் கோடுடன் கூடிய டிக்கெட் வழங்கப்படுகிறது. மக்கள், இந்த டிக்கெட்டைப் பயன்படுத்தி பயணிக்கலாம். மேலும், கட்டணம், வழித்தடம் உட்பட பல தகவல்களை இந்த ஆப் மூலமாகவே தெரிந்துகொள்ளலாம்.